உலகறிந்த இந்திய உயிரி மரபணுவாளர் தீபா சுப்ரமணியம் (Deepa Subramanyam)
தொடர் – 27 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
பூனாவிலுள்ள தேசிய உயிர் அணு அறிவியல் ஆய்வு மையத்தில் தலைமை விஞ்ஞானியாக செயல்பட்டு வருபவர் தான் அறிவியல் அறிஞர் தீபா சுப்பிரமணியம் அவர்கள். மரபணுவியல் சார்ந்த கொடிய நோய்களுக்கான தீர்வுகளையும் சிகிச்சை முறைகளையும் கண்டுபிடித்தவரும் அபூர்வமான விஞ்ஞானி தீபா சுப்ரமணியம். மரபணுவியல் ஆராய்ச்சி துறை மனித செல்களுக்கு உள்ளே நடக்கின்ற பல வகையான செயல்பாடுகளை துல்லியமாக ஆய்வு செய்யும் நவீன யுக்திகளை கையாளுகின்ற உலக நிபுணர்களில் ஒருவராக அவர் அறியப்படுகிறார்.
மனித உடலில் உள்ள செல்கள் அனைத்தும் நுண்நோக்கியால் பார்ப்பதற்கு ஏறக்குறைய ஒன்றுபோலவே இருக்கும் ஃபிஃபா அமைப்பு குறித்து நம்முடைய பள்ளிக்கூட பாட புத்தகங்கள் புகைப்படத் தோடு விளக்குவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் எதார்த்தத்தில் அவைகளின் செயல்முறை ஒவ்வொன்றும் வேறுவேறாக மாறுபடுகிறது. நம்முடைய தோலில் உள்ள செல்கள் பார்ப்பதற்கு எப்படி இருக்கும் அவைகளின் பணிகள் என்ன என்பதற்கும் இருதயத்தில் உள்ள செல்கள் எவ்விதம் பார்ப்பதற்கு இருக்கும் அவைகளின் பணிகள் என்ன என்பதற்கும் மிக துள்ளியமான நானோ நுண்நோக்கிகளால் மட்டுமே வேற்றுமைகளை நமக்கு சொல்ல முடியும். நம்முடைய விழிகளில் உள்ள பார்வை நரம்புகளில் உள்ள செல்களுக்கும் பார்வைன் பூரணி அழைக்கப்படும் மூளையின் பிற பகுதிகளுக்கு நரம்புகள் மூலம் காட்சியை இணைக்கின்ற அந்த செல்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இத்தகைய வேறு வேறான செயல்கள் அனைத்துமே நாம் பிறப்பதற்கு காரணமான அன்னையின் ஒரு முட்டை கருவிலிருந்து தோன்றியுள்ளன என்பது தான் பரிணாமத்தின் அதிசயம்.
ZYGOTE என்று மரபணுவாதிகள் இந்த ஒற்றை செல்லை அழைக்கிறார்கள். இந்த ஒற்றைசெல் உருவாகும் பொழுதே நோய்கள் எதிர்காலத்தில் ஒரு மனிதனை எப்படியெல்லாம் தாக்கப் போகின்றன என்பதை பரிணாமம் முடிவு செய்து விடுகிறது என்பது தீபா சுப்பிரமணியம் அவர்களின் முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்று. ZYGOTE என்பது வளர்ச்சியின் ஆரம்ப கட்டமாகும். மனிதர்கள் மற்றும் வீரகாஸ் உயிரினங்களில் ஒரு புதிய தனித்துவமான வீரத்தை உருவாக்க ஒரு முட்டை உயிரனுவும் ஒரு விந்தணு உயிரனுவும் ஒன்று சேரும் பொழுது தான் இந்த ZYGOTE என்கிற முதல்செல் பிறக்கிறது. முழு உயிரினத்தையும் உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்ட ஒரு ZYGOTE செல்லின் உருவாக்கம் என்பது ஏபிஜெனிக் முறையில் அதே மறு பிரசுரம் செய்து கொள்வதை பொறுத்தது. இந்த இடத்தில் மிகவும் ஆச்சரியப்படத் தக்க ஒரு விஷயம் நடக்கிறது.
ஆரம்பத்தில் 15 முட்டை கரூ தண்டு செல்கள் உருவாகின்றன. இரண்டு அபூர்வமான ஒரு விஷயத்தை உள்ளடக்கி வைத்துள்ளன மிகவும் சுவாரசியமான ஒரு கண்டுபிடிப்பு இதன் மூலம் தீபா சுப்பிரமணியம் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அதாவது உடல் உருவாக்கத்திற்கான செல் பின்னால் வளர்ச்சி அடைந்து உடல் செல்களாக மட்டுமே மாறும். தோலுக்காக உருவாக்கப்பட்ட செல்கள் பின்னால் வளர்ச்சி அடையும் பொழுது தோல் செல்கள் ஆக மட்டுமே மாறும் ஆனால் இந்த 15 அடிப்படை தண்டு செல்கள் வித்தியாசமானவை நம் உடலில் எப்போது தேவைப்படுகிறதோ, எங்கே தேவைப்படுகிறதோ அந்த தேவைக்கு ஏற்ப இந்த செல்களை குடல் செல்களாகவோ, இதயத்தின் செல்களாகவோ, தோல் செல்களாகவோ தன்னை எங்கு வேண்டுமானாலும் சென்று சுயமாகசெல் பிரிவுகளை ஏற்படுத்தி வளர்த்துக் கொள்ளும் ஒரு ஆச்சரியமாக இந்த தண்டு செல்கள் உள்ளன.
இப்படி ஒரு மனித தோற்றத்தின் அடிப்படைகளை முடிவுசெய்ய ஒரு உடலை முழுமையாக வளர்த்தெடுக்க தண்டு செல்கள் போல மைய செல்களாக சிலவும் பிற உறுப்புகளின் அடிப்படையிலான செல்களாக பிறவும் எப்படி உருவாகின்றன என்பது தான் தீபா சுப்பிரமணியம் அவர்களின் ஆராய்ச்சி ஆகும். திசுக்களின் உருவாக்கத்தில் பயன்படுகின்றன வேதி மூலக்கூறுகளை பின் தொடர்கிறார் தீபா சுப்ரமணியம். ஒரு செல்லை சுற்றி இந்த மூலக்கூறுகள் எப்படி பயணிக்கின்றன. ஏன் பயணிக்கின்றன என்பதை தீவிரமான ஆய்வுகளுக்கு அவர் உட்படுத்துகிறார். இதன் மூலம் மரபணுவுக்கு உள்ளே சென்று இந்த வேதி மூலக்கூறுகள் எப்படி செயல்படுகின்றன என்பதை அவரால் கண்டுபிடிக்க முடிந்தது. கூறுகள் ஒவ்வொன்றும் வேறு வேறானவையாகவும் வித்தியாசமான செயல்பாடுகள் கொண்டவையாகவும் உள்ளன கூறுகையில் என்னுடைய வித்தியாசமான போக்குவரத்து நம்ம உடல் முழுவதும் நடந்து பல்வேறு அம்சங்களில் பல செயல்களின் பணிகளை தீர்மானிக்கிறது. சில சமயங்களில் முழுமயாக உருவாக்கப்பட்ட இதய செல்லும் அல்லது குடலினுடைய செல்லும் கணையத்தின் செல்லும் திடீரென்று பழையபடி தண்டு செல்களாக மையத்திற்கு சென்று பணியாற்றுகின்றன. மூடிய அனைத்து வகையான செயல்பாடுகளுக்குமான கதாநாயக தலைமை செல்கள் தண்டு செல்கள் தான்.
இந்த ஸ்டெம் செல்கள் குறித்த ஆய்வு நமக்கு பல சுவாரசியமான உண்மைகளை வழங்கியுள்ளது ஸ்டெம் செல்கள் உடலில் எங்கு இருந்தாலும் அவை ஒன்று போலவே இருக்கின்றன. நீண்ட காலத்திற்கு தங்களை பிரித்து புதுப்பித்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்டிருக்கின்றன. தன்னை இடத்தில் இருக்கிறார் போல நீர்மமாகவோ விடசெல்லாகவோ கூர்ம செல்லாவோ மாற்றிக்கொள்ளும் ஆற்றலை இந்த தண்டு செல்கள் பெற்றுள்ளன. இந்த தண்டு செல்கள் எந்த நிபுணத்துவமும் பெறாத சிறப்பே இல்லாத வெற்று செல்களாகத்தான் உள்ளன ஆனால் அவை ரத்தம் எலும்பு தசை மூளை என்று எங்கு சென்றாலும் அங்கு இருக்கிற செல்களை போலவே செயல்பட்டு அந்த செல்களின் உடைய ஆக்கத்தை தன்னுடைய ஆக்கமாக ஏற்றுக் கொள்கின்றன என்பது எவ்வளவு அதிசயமான விஷயம்.
ஆய்வின் மூலம் நமக்கு கிடைக்கும் மேலும் இரண்டு தகவல்கள் உண்டு. இந்த ஸ்டெம் செல் என்றழைக்கப்படும் தண்டு செல்கள் ரத்த புற்றுநோய் மற்றும் ரத்தம் சம்பந்தமான கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மிகவும் பயன்படுகின்றன. பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொழுது ஒரு இடத்தில் முழுமையாக தாக்கப்பட்டு அல்லது நோய்வாய்ப்பட்டு கிடக்கும் செல்களுக்கு மாற்றாக இந்த செல்கள் ஓடிச்சென்று உதவுகின்றன. ஒரு பள்ளியில் குறிப்பிட்ட பாட ஆசிரியர் விடுப்பு எடுக்கும் பொழுது வேறு ஒரு பாட ஆசிரியருக்கு அந்த வகுப்பை நாம் SUBSTITUTION அனுப்புவது போலவே இந்த தண்டு செல்கள் செயல்படுகின்றன என்பதை தீபா சுப்பிரமணியத்தின் ஆராய்ச்சி நமக்கு வெளிக்கொண்டு வந்து உள்ளது.
மனிதனில் ரத்த செல்களை உற்பத்தி செய்கின்ற பிரதான பணியை செய்துகொண்டு தண்டு செல்கள் இப்படி உடலெங்கும் சென்று பல்வேறு பணிகளை ஆற்றுகின்றன. தீபா சுப்ரமணியம் கண்டுபிடித்து இருக்கும் இன்னொரு மிக முக்கியமான விஷயம் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. வேதி மூலக்கூறுகள் செல்களின் உள்ளேயும் வெளியேவும் அவ்வப்போது பயணிப்பதற்கு சில பாதைகளை செல்கள் உருவாக்குகின்றன இவை குறித்து தீபா சுப்ரமணியம் தீவிரமாக ஆராய்ச்சி செய்து சில முடிவுகளை வெளியிட்டுள்ளார். இந்த மூலக்கூறுகள் உள்ளே சென்று வெளியே வரும் பாதைகளை தீர்மானிக்கின்ற ஒரு வகை புரதம் உள்ளது இந்த புரதத்தின் பெயர் தான் CAVEOLIN . செல்களின் வழிகளை ஏற்படுத்த பயன்படுவதில்லை ஆனால் அதன் பிறகு ஒவ்வொரு செல்லும் தனியாக பிரிந்து செல்கள் உடலின் பணியை செய்யும் பொழுது இந்தவகை புரத பாதைகள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த கேவீஓலின் எனும் புரதங்கள் ஒருங்கிணைந்த சவ்வு புரதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. கேவீஓலின் சப் உங்களுக்குள் சுருக்கப்பட்டு புரதங்களாக பிரிக்கப்பட்டு சமிக்கை மூலக்கூறுகளை ஒருமுகப்படுத்துவதன் மூலம் அவை பாதைகள் ஆக மாறி செயல்படுகின்றன என்பது தீபா சுப்பிரமணியத்தின் ஆய்வு முடிவு ஆகும். இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் தலசீமியா பரம்பரை ரத்த கோளாறு நோயை குணமாக்குவதற்கு பயன்படுகின்றன.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை தலசீமியா எனும் ரத்த புற்றுநோய் தாக்குகிறது. இந்த பரம்பரை நோயில் இருந்து குழந்தைகளை விடுவிப்பதற்கு தண்டு செல்கள் குறித்த தீபா சுப்பிரமணியத்தின் ஆய்வு பயன்பட்டு உள்ளது என்பது உலகளவில் வரலாற்று சிறப்புமிக்க விஷயமாகும்.
தீபா சுப்ரமணியம் தமிழகத்தைச் சேர்ந்தவர். கோயம்புத்தூரிலுள்ள பி எஸ் ஜீ கலை அறிவியல் கல்லூரியில் 1999 ஆம் ஆண்டு தன்னுடைய இளம் அறிவியல் பட்டத்திற்கு உயிரியல் பாடத்தை எடுத்து படித்தவர். 2006 ஆம் ஆண்டு பெங்களூரிலுள்ள நேஷனல் சென்டர் ஃபார் பயோலாஜிக்கல் சயன்ஸ் கல்வியகத்தில் தனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ள தொடங்கிய பொழுது செல்கள் குறித்த ஆய்வுகளில் ஈடுபடத் தொடங்கினார். தமிழகத்தில் இருந்து இன்று உலக அளவில் ஒரு விஞ்ஞானி அறியப்பட்டு இருப்பது நமக்கெல்லாம் பெருமை.
கட்டுரையாளர் :
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகம் அறிந்த இந்திய வானொலி வானியலாளர் துரூபா ஜே சைக்கியா (Dhruba J Saikia)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
நம் தமிழ்நாட்டு உயிரியல் விஞ்ஞானி முனைவர். தீபா அவர்களின் முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பான தண்டு செல்கள் ஆய்வில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை தலசீமியா பரம்பரை நோய் தாக்குகின்றன. அதிலிருந்து குழந்தைகளை விடுவிப்பதற்கு தண்டு செல்கள் குறித்த தீபா சுப்பிரமணியத்தின் ஆய்வு பயன்பட்டு உள்ளது என்பது உலகளவில் வரலாற்று சிறப்புமிக்க விஷயமாகும்.
உலக அளவில் குழந்தைகளை காப்பாற்றும் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட முனைவர்.தீபா சுப்ரமணியம் அவர்களுக்கு நெஞ்சு நிறை நல்வாழ்த்துக்கள் அம்மா. நீடூழி வாழ்க வாழ்க. குழந்தைகள் உயிர் காக்கும் மருத்துவ ஆய்வு தொடர்க தொடர்க என் வாழ்த்தி வணங்குகிறோம்.
தங்களைப் போன்ற இந்திய விஞ்ஞானிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பெருந்தொண்டாற்றும் எங்கள் ஆதர்ஷ அறிவியல் எழுத்தாளர் முனைவர்.ஆயிஷா.நடராசன் சார் அவர்களுக்கு எங்கள் செவ்வணக்கம்.
Pingback: Scientist Bharat Ratna C. N. R. Rao