உலகம் போற்றும் இந்திய கோட்பாட்டு இயற்பியலாளர் தீபக் தார் - Deepak Dhar is a world-renowned Indian theoretical physicist - Ayesha Natarasan - https://bookday.in/

உலகம் போற்றும் இந்திய கோட்பாட்டு இயற்பியலாளர் தீபக் தார்

உலகம் போற்றும் இந்திய கோட்பாட்டு இயற்பியலாளர் தீபக் தார்

தொடர் : 62 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

 

உலகில் இயற்பியலுக்கு என்று வழங்கப்படும் உயர்ந்த விருதுகளில் ஒன்று போல்ட்ஸ்மேன் பதக்கம். புள்ளியியல் இயக்கவியலில் பெயர் பெற்ற விஞ்ஞானியான லூடுவிக் போல்ட்ஸ்மேன் என்னும் அறிஞரின் பெயரில் தூய மற்றும் பயன்பாட்டு இயற்பியலின் சர்வதேச ஒன்றியத்தின் சார்பாக இந்த விருது வழங்கப்படுகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் இந்த விருதை உயர்ந்த கௌரவமாக இயற்பியல் உலகம் கருதுகிறது. 2022 ஆண்டு இந்த விருதைப் பெற்று இந்தியாவுக்கு மிகப் பெரிய கௌரவத்தைக் கொடுத்தவர் தான் இயற்பியலாளர் தீபக் தார். கென்னத் வில்சன், மைக்கேல் ஃபிஷர், எல்லியட் லீப், பெர்னி ஆர்டர் என்று உலக அளவில் பேசப்படும் மாபெரும் அறிஞர்கள் பெற்ற இந்த விருதை இந்தியாவிலிருந்து பெற்ற முதல் அறிவியல் அறிஞர் என்கிற பெருமையைப் பெற்றவர் தீபக் தார்..

உலகம் போற்றும் இந்திய கோட்பாட்டு இயற்பியலாளர் தீபக் தார் - Deepak Dhar is a world-renowned Indian theoretical physicist - Ayesha Natarasan - https://bookday.in/

தீபக் தார் புள்ளியியல் இயற்பியலில் சமச்சீர் அற்ற செயல் முறைகள் பற்றிய ஆய்வுக்காக உலகெங்கிலும் போற்றப்படுபவர். இயற்பியலில் LATTICE MODEL என்கிற ஒரு தனித்துறை உண்டு. இந்த துறையின் ஆரம்ப வித்தகர்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உட்படப் பலர் வெளி மற்றும் காலம் இரண்டையும் இணைத்து காலவெளி என்கின்ற ஒரு புதிய பதத்தோடு இந்த துறை இயங்குகிறது. ஒரு LATTICE என்பது இரு விண்வெளி பொருள் பொருள்களுக்கு இடையிலான இடைவெளியின் தொடர்ச்சி போன்ற காலவெளி தொடர்ச்சியோடு தொடர்புடையது இது அமைக்கப்பட்ட அல்லது சுருக்கப்பட்ட பொருள் இயற்பியலின் சூழலியல் பண்புகளை ஆய்வு செய்கிறது. ஒரு படிகத்தின் அணுக்கள் தானாக ஒரு LATTICE இடை வெளியை உருவாக்குகின்றன. தற்போது பல காரணங்களுக்காகக் கோட்பாட்டு இயற்பியலில் LATTICE மாதிரிகள் மிகவும் பிரபலமாக அறியப்படுகின்றன.

கணக்கிட்டு இயற்பியல் எனும் தனித் துறையில் லாட்டிஸ் மாதிரிகள் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன ஏனெனில் இது மாதிரியான தொடர்ச்சியான மாதிரிகளின் தனித் தன்மையை ஆராயும் பொழுது நாம் பருப்பொருட்களின் சொல்லிட்டான்கள் என்றழைக்கப்படும் ஒரு வகை துகள்களை ஆராய முடிகிறது இவை தலைகீழ் சிதறல் உருமாற்றம் என்கின்ற புதிய இடத்தை நோக்கி இயற்பியலை எடுத்துச்செல்கின்றன இந்த குவாண்டம் குழுக்களில் தனக்கென்று மூன்று கோட்பாடுகளை உருவாக்கியவர்தான் தீபக் தார்.

உலகம் போற்றும் இந்திய கோட்பாட்டு இயற்பியலாளர் தீபக் தார் - Deepak Dhar is a world-renowned Indian theoretical physicist - Ayesha Natarasan - https://bookday.in/

புள்ளியியல் இயற்பியல் மற்றும் சீரற்ற செயல்முறைகளில் தனது ஆய்வுகளை மையமாகக்கொண்டு ரேண்டம் லார்ட்ஸ் புள்ளி விவர இயக்கவியல் என்கிற ஒரு தனித்துறையை தீபக் தார் உருவாக்கியுள்ளார் நிறமாலை பரிமானவியல் என்கிற கோட்பாட்டில் ரியல் ஸ்பேஸ் மறுசீரமைப்பு நுட்பங்களை புதிய பெருமையும் இவரை சாரும். அறிஞர் ராமகிருஷ்ண ராமசாமியுடன் இணைந்து சுய ஒழுங்கமைக்கப்பட்ட அபேலியன் லார்ட்ஸ் மாதிரியைக் குறித்த ஒரு முக்கிய சிக்கலை இயற்பியலில் இவர் தீர்த்து வைத்தவர். அதற்குத் தார்- ராமசாமி மாதிரி என்று பெயரிடப்பட்டுள்ளது. இயற்பியலில் தீபக் தார் பயன்படுத்தும் முறைக்கு BETHE ANSATZ முறை என்று பெயர் இது குவாண்டம் மையத்தில் மாதிரிகளின் அலை செயல்பாடுகளைக் கண்டறிவதற்கு உதவுகின்றது பொதுவாக ஒரு பரிமாண LATTICE என்பது சூழல் சங்கிலிகள் போல உருவாகின்ற காலவெளி ஆய்வுகளில் பருப்பொருட்களின் இருப்பை கண்காணிக்கப் பயன்படுகிறது.

தீபக் தார் பங்களிப்பில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு வரலாற்றுத் தகவல் உண்டு. ரிச்சர்ட் பெய்ன்மன் என்னும் அறிஞர் இறந்து போவதற்கு முன் தன்னுடைய கரும்பலகையில் கற்றுக்கொள் என்று எழுதி அத்தோடு இணைத்திருந்த ஒரு சிக்கல்தான் BETHE ANSATZ  1958 ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற அணுவியல் குறித்த உலக அளவிலான அமைதி மாநாட்டில் ரிச்சர்ட் ஃபைன்மேன் உரையாற்றினார். அந்த உரையின்பொழுது அவர் குறிப்பிட்ட மேக்ரோ என்கின்ற விண்வெளி சார்ந்த பெரிய பொருட்களுக்கும் மைக்ரோ என்கிற அணுவியல் சார்ந்த கண்ணுக்குத் தெரியாத பொருட்களுக்கும் இடையிலான உறவுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் BETHE ANSATZ முறையை சரியாக நாம் கோட்பாட்டு இயற்பியலில் தீர்க்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் இயற்பியல் துறையை கணினி இயலோடு இணைக்கின்ற ஒரு பாலமாக இந்த சிக்கலை அவர் கருதினார்.

உலகம் போற்றும் இந்திய கோட்பாட்டு இயற்பியலாளர் தீபக் தார் - Deepak Dhar is a world-renowned Indian theoretical physicist - Ayesha Natarasan - https://bookday.in/

கிளஸ்டர்கள் விஷயத்தில் இந்த BETHE ANSATZ சிக்கலை மிகச் சாமர்த்தியமாகத் தீர்த்து வைத்த பெருமை தீபக் தாரை சேரும் இந்த விஷயத்தில் தீபக் தார் அவர்கள் இயக்கிய காரல் விலங்குகள் கணக்கெடுப்பு எனும் இயற்பியலின் சவாலில் பணிபுரிந்து பரிணாம ஆப்பரேட்டர் என்கின்ற கணித முறையை முன்மொழிந்து தீர்க்க முடியும் என்கிற தீபக்த்தாரின் கோட்பாடு உலகெங்கிலும் ஏனைய ஆராய்ச்சியாளர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதற்கான நிரூபணங்கள் வழங்கப்பட்டன. தீபக் தார் தன்னியக்க தொடர்பு கோட்பாடு என்று அழைக்கப்படும் இந்த வகை இயற்பியலின் கோட்பாடுகள் கிளஸ்டர்களை மெதுவாக பொருட்டுவதன் மேலாதிக்க இயற்பியலை முன்வைக்கிறது சீரற்ற பரிணாம வளர்ச்சியின் மெட்ரோ ஸ்டேபல் ஆடி நிலைகளில் இந்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன க்வாண்டம் கணினியியலில் இந்த கோட்பாடு மிக முக்கிய பங்காற்றுகிறது.

இப்படியான அவருடைய பங்களிப்புகள் தீபக் தாரை சர்வதேச தூய மற்றும் பயன்பாட்டு இயற்பியலின் புள்ளியியல் இயற்பியல் ஆணையத்தின் உறுப்பினர் ஆக்கியது கோட்பாட்டு அறிவியலுக்கான சர்வதேச மையத்தின் திட்டக் குழுவின் உறுப்பினராகவும் அவர் இணைக்கப்பட்டார்.

உலகம் போற்றும் இந்திய கோட்பாட்டு இயற்பியலாளர் தீபக் தார் - Deepak Dhar is a world-renowned Indian theoretical physicist - Ayesha Natarasan - https://bookday.in/

தீபக் தார் 1951 ஆம் ஆண்டு அக்டோபர் முப்பதாம் நாள் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரதாப் சாகர் என்னும் ஊரில் பிறந்தார் கான்பூரிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெறுவதற்கு முன் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளம் கலை பட்டத்திற்கு அறிவியலை எடுத்துப் படித்தார் முதுகலை பட்டப் படிப்பின் பொழுது அமெரிக்காவில் கலிஃபோர்னியா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வியகத்தில் ஜான் மேத்யூஸ் என்னும் அறிஞரின் வழிகாட்டுதலின் பேரில் முனைவர் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.1991 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் டாடா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் மும்பையின் கல்வியகத்தில் இணை பேராசிரியர் ஆனார்.. தீபக் தார் இன்று உலக அளவில் ஏழு பல்கலைக்கழகங்களில் வருகைதரும் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.. பூனேவிலுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புகழ் பெற்ற பேராசிரியராக இன்று பணியாற்றுகிறார்.

உலகம் போற்றும் இந்திய கோட்பாட்டு இயற்பியலாளர் தீபக் தார் - Deepak Dhar is a world-renowned Indian theoretical physicist - Ayesha Natarasan - https://bookday.in/

சர்வதேச அறிவியல் அகாடமி 2002 ஆம் ஆண்டு இவருக்கு TWAS விருது வழங்கி கௌரவித்தது. இந்தியாவின் உயரிய அறிவியல் விருதான சாந்தி சொரூபா பட்நாகர் விருது மட்டுமின்றி 2023 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது பெற்றவர் தீபக் தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர்:

உலகம் போற்றும் இந்திய கோட்பாட்டு இயற்பியலாளர் தீபக் தார் - Deepak Dhar is a world-renowned Indian theoretical physicist - Ayesha Natarasan - https://bookday.in/

ஆயிஷா இரா. நடராசன்

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகம் அறிந்த இந்தியப் பறவையியல் விஞ்ஞானி சுஷ்மா ரெட்டி  

ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *