தெய்வமே சாட்சி (Deivame Satchi) – நூல் அறிமுகம்
ஒரு புத்தகத்தின் எழுத்தாளர்கள் யார் என்று பார்க்கும்போது, அந்த புத்தகத்தை வாங்கிப் படிக்க மனதில் தோன்றும். அப்படிதான் எழுத்தாளர்.தமிழ்செல்வன் புத்தகத்தையும் வாங்கினேன். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவராக தமிழ்செல்வன் இருக்கிறார். அவருடைய எழுத்துகள் அனைத்திலும் முற்போக்குச் சிந்தனையும், பெண்ணியம் குறித்த அக்கறையும் நிறைந்து இருக்கும். இந்தப் புத்தகத்திலும் தெய்வங்கள் சாட்சியாக வைத்து பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளையும், ஆணாதிக்கச் சமூகத்தின் நிகழ்வுகளையும் கண்முன் நடப்பது போல் ஒவ்வொரு கதையும் குறிப்பிட்டு இருக்கும்.
இந்த புத்தகத்தில் தெய்வங்கள் இரண்டு வகைகள், ஒன்று பெருந்தெய்வங்கள், இரண்டு சிறுதெய்வங்கள் இருக்கிறது. சிறுதெய்வங்கள் என்று குறிப்பிடுவது நாட்டுப்புறத் தெய்வங்களில் ஒரு வகை என்று இருக்கிறது. இந்தப் புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகள் சில ” இந்து தமிழ் திசையில்” வந்ததாகவும் இருக்கிறது.
மலடி என்று சொல்லில் இருந்து மலட்டம்மா கதையும், குழந்தைக்காக செல்லும் தம்பதியின் பயணத்தில் தொடக்கம் இருந்தது. பின் அந்த பெண் குழந்தைக்கு வரம் தரும் மலட்டம்மாவாக மாறுகிறாள்.
தன் குழந்தையின் பசியைப் போக்க திருடும் தாயின் போராட்டம் குறித்தும், பின்பு தாயும், குழந்தைகளையும் காவல்காரன் ஈட்டிக்கு பலியாகி இறந்துவிடுகிறார்கள். அந்த பெண் துர்க்கையம்மனாகவும் தெய்வமாகவும் மாறுகிறாள்.
தன் காதலை புரிந்து கொள்ளாத காதலன், பிணமாக மாறிய சீனிமுத்து என்ற அரசு குடும்பத்தை சேர்ந்த பெண், பின்பு சீனிமுத்து அம்மனாக மாறினாள்.
தாழ்த்தப்பட்ட பெண் என்ற ஓரே காரணத்தால், அவளுடைய திருமணம் நிராகரிக்கப்படுகிறது. திருமணம் ஆகி மூன்றாவது நாள் கணவரின் அப்பாவால் கொலை செய்யப்படுகிறாள். பின்பு அரியனாச்சி அம்மனாக அவதாரம் எடுப்பதுபோல் புத்தகத்தில் இருக்கிறது.
தெய்வத்தின் மீது ஏறி நிற்கும் மனிதச் சிந்தனை என்று குறிப்பிட்டு பிடி மண் எடுத்து நிற்கும் ஈஸ்வரி அம்மனாக மாறும் கதையும் புத்தகத்தில் இருக்கிறது.
பெண்கள் தவறு செய்தாக ஆண் நினைக்கும்போது, அவளை கொலைச் செய்தும், பின் அந்தப் பெண் தெய்வாக மாறும் மணிமுத்தம்மாள், சீனியம்மாள் என்று புத்தகத்தில் இருக்கிறது.
உடன்கட்டை ஏறும் பெண், பின் “தீப்பாய்ஞ்ச நாச்சியாரம்மன்” மாறி புதுப்பட்டுப்புடவையோடு வழிபட்டு வருவதாக புத்தகத்தில் இருக்கிறது.
பூவுக்காக அழுததால், பூ மலர்ந்தாள் என்று பெயர் சூட்டப்பட்ட நாட்டுப்புற தெய்வமாக மாறுகிறாள். பெண் குழந்தையின் இறப்பில் தெய்வமாக மாறும் பாப்பாத்தியம்மன் கதையும் புத்தகத்தில் இருக்கிறது.
அம்மை நோய்க்கு பாதிக்கும் இரண்டு பெண் குழந்தைகள், குழந்தைகள் தெய்வமாக மாறும் சந்தனமாரியம்மன் பெயரோடு இருப்பதைப் புத்தகத்தில் இருக்கிறது.
நகைக்காக கொலை செய்யப்படும் பெண், பின்பு முத்து மாடத்தி அம்மனாக மாறும் கதையும் இருக்கிறது.
- சண்முகத்தம்மான்
- வீரசின்னம்மா
- மரத்தியம்மா
- முத்தலாம்மன்
- சவுடம்மாள்
- வண்ணத்தி மாடத்தி அம்மன்
- கன்னித்தெய்வம்
- வீருமாரு – வெள்ளைம்மையாள்
இப்படி 40 தலைப்புகளில் கட்டுரைகளும், கதைகளும் நாட்டுபுறத் தெய்வங்களை மையமாக வைத்து, பெண்களுக்கு எதிரான கொடுமைகளை செய்துவிட்டு, அதன்பிறகு பரிகாரம் செய்வது போல் நினைத்து கோயில்களை எழுப்பி வழிபாடுகளை மக்கள் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு கிராமத்திற்கும் நாட்டுபுறத்தெய்வங்கள் இருக்கும், அதற்கு பின்பு ஒவ்வொரு கதையும் இருக்கும், அதன் பின்பு பெண்ணின் கதையும், சோகமும் நிறைந்த வரலாறு இருப்பதை புத்தகத்தில் மூலம் அறிய முடிகிறது.
எனக்கு இந்த புத்தகத்தைப் படிக்கும்போது நினைவில் நின்றது. நான் பிறந்த சிவந்திப்பட்டி கிராமத்தில் அமைந்த நாட்டுபுறத் தெய்வங்கள் அலமேலு அம்மன், இசக்கியம்மன் என்ற பெண் தெய்வங்களுக்கும் கதைகளும் இப்படிதான் உருவானது என்று அறிய முடிந்தது.
குலதெய்வ வழிபாடு மற்றும் கன்னி வழிபாடுகள் என்பது முன்னோர்களை நினைத்து தொடர்ந்து குடும்பமாக வழிபாடுகள் கிராமங்களில் இன்னும் இருக்கதான் செய்கிறது.
இந்து மதத்தில் நாட்டுபுறத் தெய்வங்களில் வழிபாடு இந்துத்துவா என்பது இல்லாமல் போகிறது என்று புத்தகத்தில் இருக்கிறது.
மொத்தத்தில் அருமையானப் புத்தகத்தை கொடுத்த எழுத்தாளர்.தமிழ்செல்வனுக்கும், கதை சேகரித்த அத்துணை தோழர்களுக்கும் அன்பும், நன்றியும்.
நூலின் தகவல்கள் :
நூல் : தெய்வமே சாட்சி
ஆசிரியர் : ச. தமிழ்செல்வன்
பக்கங்கள் : 160 பக்கம்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/deivame-satchi/
நூல் அறிமுகம் எழுதியவர் :
சு.வினோத்குமார்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.