ஜனநாயக கடமை கவிதை:
படிக்காத பள்ளியில்
ரயில் சினேகமாகிய
அலுவலர்கள்
கோணிமூட்டையுடன்
கைக்கோர்த்து வந்த
வாக்காளர் இயந்திரம்
வாயில் சிரிப்பும்
கண்களில் சந்தேகமும்
நிறைந்த ஏஜண்டுகள்
கையேட்டில் பதிவும்
கையுறையுடன்
ஒட்டிய மையும்
ஓங்கி ஒலித்த
ஜனநாயக ஆட்சியில்
மணிக்கட்டின் முட்கள்
தாண்டிய பக்கம் மட்டும்
பரிதியிலும் விலகாத
பனியாய் ஒட்டியிருக்குது.
எழுதியவர்
– அனு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.