சினிமா ஓர் அனுபவத்தொடர் 1: டெர்சு உசாலா Dersu Uzala (1975) – கார்த்திகேயன்

சினிமா ஓர் அனுபவத்தொடர் 1: டெர்சு உசாலா Dersu Uzala (1975) – கார்த்திகேயன்

டெர்சு உசாலா Dersu Uzala (1975)
சினிமா உலகின் மாமேதை எனப் பலராலும் வணங்கிக் கொண்டாடப்படுகின்ற *அகிரா குரோசோவா* இயக்கிய படம்.
குரோசோவா பற்றி பல வருடங்களுக்கு முன்னரே பலரது மூலமாக கேள்விப்பட்டிருந்தாலும் கூட சில படங்களை பார்க்க முயற்சித்து அப்போதைய  மன நிலையில் தவிர்த்த கதையும் உண்டு
இலக்கிய உலகில் காடோடி பிலியவைப் போல், ஓநாய் குலச் சின்னத்தின் பில்ஜியைப் போல,சிலாகித்து நம்மவர்களாக உணர்ந்து நெகிழ்ந்த கதாபாத்திரங்களைப் போலவே இப்படத்தின் டெர்சு உசாலா வும்.
கனிந்த கண்களும் , பற்றற்ற முகபாவனையும்,இயற்கையை வணங்கி உரையாடும் உடல் மொழியென அந்த கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார் டெர்சுவாக நடித்தவர்.
உடன் பயணிக்கும் கேப்டனும் தனது பாத்திரத்திற்கு நியாயந்தருவிக்கும் உடல்மொழியோடு அளவான உணர்ச்சிப் பரிமாற்றத்தினை நமக்கு கடத்துகின்றார்.
குளிர்காலம் , இலையுதிர் காலம் , குளிர்காலம் என மூன்று காலகட்டங்களில் 7 ஆண்டுகளில் இருவருக்குமிடையேயான நட்பு பரிமாறுதலில் நடக்கின்ற சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பே இதன் பிரதான அம்சம்.
ஒவ்வொரு காட்சியும் நிதானமாக ஒருவித தியான உணர்வோடு அமைதியாக படமாக்கப்பட்டிருக்கிறது.
இயற்கை விரும்பிகளும் , தொல்குடி மனோநிலையையும் அறிய ஆவல் உள்ளவர்கள் அவசியம் காணவேண்டிய படம் இந்த டெர்சு உசாலா.
இணைப்பு
Sub Title உடன் காண,
பாகம்-1
பாகம்-2
– கார்த்திகேயன் 
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *