பாலைவன ரோஜா (Desert Rose) இது இளஞ்சிவப்பு அல்லது பழுப்பு நிற ரோஜாவை ஒத்திருக்கும் ஒரு படிகக் கல் ஆகும் - ஏற்காடு இளங்கோ - https://bookday.in/

பாலைவன ரோஜா (Desert Rose) – ஏற்காடு இளங்கோ

பாலைவன ரோஜா (Desert Rose) – ஏற்காடு இளங்கோ

பாலைவன ரோஜா (Desert Rose) என்பது ஒரு தாவரத்திலிருந்து பூக்கும் ரோஜா மலர் அல்ல. பாலைவன ரோஜாக்கள் பொதுவாக ரோஜா இதழின் வடிவத்தைக் கொண்டுள்ளது. ஆனால் இது இலைகள் இல்லாத ஒரு உயிரற்ற மலர். இது இளஞ்சிவப்பு அல்லது பழுப்பு நிற ரோஜாவை ஒத்திருக்கும் ஒரு படிகக் கல் ஆகும். இது பெரும்பாலும் பாலைவனப் பகுதிகளில் உண்டாகிறது.

ஒரு பாலைவன ரோஜா என்பது ஜிப்சம் (Gypsum) அல்லது பாரைட் (Baryte) படிகங்களால் ஆனது. இது ஒற்றை ரோஜா போன்ற பூக்கள் ஆகவோ அல்லது பூக்களின் கொத்தாகவோ தோன்றும். இதில் ஏராளமான மணல் தானியங்கள் அடங்கி இருக்கும். இது மணல் ரோஜா, சஹாரா ரோஜா, ரோஜா பாறை, செலினைட் ரோஜா, ஜிப்சம் ரோஜா, மற்றும் பாரைட் ரோஜா என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

பாலைவன ரோஜா (Desert Rose) இது இளஞ்சிவப்பு அல்லது பழுப்பு நிற ரோஜாவை ஒத்திருக்கும் ஒரு படிகக் கல் ஆகும் - ஏற்காடு இளங்கோ - https://bookday.in/

ஆழமற்ற உப்புப் படுகையில் இருந்து நீர் ஆவியாகும் போது பாலைவன ரோஜாக்கள் உருவாகின்றன. நீர் ஆவியாகும் போது அது ஜிப்சம் அல்லது பாரைட் போன்ற கரைந்த தாதுக்களை விட்டுச் செல்கின்றன. இந்த தாதுக்கள் பின்னர் மெல்லிய தட்டு போன்ற படிகங்களாக மாறுகின்றன. படிகங்கள் மணல் தானியங்களைச் சுற்றி வட்ட வடிவில் வளர்கின்றன. இவை ரோஜாக்களின் வடிவத்துடன், பிரகாசமாக ஒளிர்கின்றன.

அவை கல்லாக மாறிய பூக்கள் போல் இருக்கும். காற்று, நீர் மற்றும் அழுத்தம் ஆகிய இயற்கை சக்தியின் அழகான எடுத்துக்காட்டு இதுவாகும். பாலைவன ரோஜாக்கள் உருவாக 10 முதல் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகலாம். பொதுவாக பாலைவன ரோஜாக்கள் ஒரு பட்டாணி அளவு முதல் 10 சென்டிமீட்டர் விட்டம் வரை இருக்கும். ஓக்லஹோமா புவியியல் ஆய்வு மூலம் 43 சென்டிமீட்டர் விட்டம், 25 சென்டிமீட்டர் உயரம் மற்றும் 57 கிலோ எடை கொண்ட ஒரு மிகப்பெரிய பாலைவன ரோஜாவைக் கண்டுபிடித்துள்ளனர்.

பாலைவன ரோஜா (Desert Rose) இது இளஞ்சிவப்பு அல்லது பழுப்பு நிற ரோஜாவை ஒத்திருக்கும் ஒரு படிகக் கல் ஆகும் - ஏற்காடு இளங்கோ - https://bookday.in/

இந்த பாலைவன ரோஜாக்கள் சஹாராவின் துனிசியா, அல்ஜீரியா, லிபியா மற்றும் சவுதி அரேபியாவின் அப்காய்க் பகுதிகளிலும் காணப்படுகின்றன. அமெரிக்காவின் ஓக்லஹோமா என்ற இடத்தில் ரோஜா பாறையின் படிவுகள் உள்ளன. பல இடங்களில் பாலைவன ரோஜாக்களை உள்ளூர்வாசிகள் சுற்றுலா பயணிகளுக்கு நினைவுப் பொருட்களாக விற்கின்றனர். மேலும் வீட்டு அலங்காரப் பொருட்கள் மற்றும் கண்ணைக் கவரும் நகைகளாகவும் வடிவமைக்கப்படுகின்றன. அவை பாலைவனத்தின் அழகு மற்றும் புவியியல் அதிசயங்களை நமக்கு நினைவூட்டுகின்றன.

கட்டுரையாளர் : 

பாலைவன ரோஜா (Desert Rose) இது இளஞ்சிவப்பு அல்லது பழுப்பு நிற ரோஜாவை ஒத்திருக்கும் ஒரு படிகக் கல் ஆகும் - ஏற்காடு இளங்கோ - https://bookday.in/

– ஏற்காடு இளங்கோ

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *