நீர்வழிப் படூஉம் - தேவிபாரதி | Devi Bharati - Neervazhi Padooum

இந்த நாவல் அனைவரையும் மிகவும் கவர்ந்த நாவலாக சொல்லலாம். ஆம் இதற்கு விருது கிடைத்ததும் அனைவரும் போற்றிக் கொண்டாடுகிறோம் ஒரு அங்கீகாரம் கிடைத்ததும் அதனின் போக்கே வேறொரு கோணமாக பார்க்கப்படுகிறது இந்த வருடம் புத்தக கண்காட்சியில் அனைத்து அரங்குகளிலும் உள்ள புத்தகம் என்றும் எல்லா அரங்கிலும் உள்ளது மிகப் பெரிய வெற்றி தான் இந்த நாவல் என்று பேசப்படுகிறது ஒரு நல்லதொரு நாவல் கொண்டாடப்படுவது நமக்கெல்லாம் ஒரு பெரும் மகிழ்ச்சியே அந்த வகையில் கொண்டாட்டம் தான் நம் அனைவருக்குமே இந்த வருடம் தொடங்கி 16 நாட்கள் ஆகிறது அதிகம் அனைவரும் வாசித்த நாவல் இதுவாகத்தான் இருக்கும் அதிக பதிவுகள் உள்ள நாவல் இது என்று சொல்வதில் நாம் அனைவரும் பெருமை படுவோம்..

சிறந்த நாவலுக்கு நல்லதொரு அங்கீகாரம் கிடைத்தது நமக்கெல்லாம் மிகப்பெரிய மகிழ்ச்சி..

ஆசிரியர் அவர்கள் தன்னுடைய புனைப் பெயரில் அவருடைய அனைத்து நாவல்களையும் எழுதி வருகிறார் அவருடைய பெயர் ராஜசேகர் கொங்கு நாட்டு மொழியை தன்னுடைய நாவல்களில் கொண்டு வந்து செயலாற்றுகிறார்..

இந்த நாவல் காரு மாமா மற்றும் அவர்களின் இரு சகோதரிகள் அதில் ஒரு சகோதரரின் மகன் மூலம் இந்த கதை அவரின் பார்வையில் இருந்து சொல்லப்படுவது போல் உள்ளது..

இந்த நாவலின் நாயகன் என்று கூட சொல்லலாம் காரு மாமா அவர் பற்றிய கதை தான் இது இறந்து கிடக்கும் மனிதர் தான் காரு மாமா அவரின் மனைவி இவரை விட்டு விட்டு ஓடி விட்டாள் தனியாகவே இருந்து இன்று இறந்து கிடக்கிறார்..

இந்த நாவலில் ஒரு இறப்பு நடக்கிறது யாரும் தெரிந்திராத இறப்பு அந்த இறப்பை சுற்றியும் அதற்கு முன்பும் பின்பும் நகரும் நிகழ்வுதான் இந்த நாவல்..

சாவு நடந்துள்ளது என்பதையும் அந்த சாவினால் ஏற்படும் பதட்டத்தையும் ஒரு சாவினால் அந்த இடத்தில் உள்ள சூழ்நிலை எப்படி இருக்கும் என்று ஒரு எழுத்தின் மூலம் இப்படி ஒரு பரபரப்பாகவும் அதேசமயம் மனமும் அந்த சாவை பற்றி நம்மையும் நினைக்க வைப்பது என்பதுதான் இந்த நாவலின் வெற்றி என்று சொல்லலாம் ஒரு மனிதனின் சாவு எல்லோரையும் தாக்கும் என்பதை இவ்வளவு அழகாக அதோடு நம் கண் முன்நடக்கிறது என்று இதற்கு மேல் யாரும் அதை எழுத முடியாது என்று தான் எனக்குத் தோன்றியது..

இந்த இறப்பு நிகழ்வுக்குள்ளும் லேசாக வெளிப்படும் காதல் என்றுதான் சொல்லலாம் அப்படி எட்டிப் பார்ப்பதும் போவதுமாக இருக்கிறது அந்த காதல்..
இந்த இறப்புக்கு வருபவர்களுக்கு தண்ணீர் எங்கிருந்து எடுப்பது என்று சொல்லி இடத்தை அறிந்து அடிக்க தெரியாமல் அந்த கை பம்பை தடுமாறுவதும் அதில் பிறக்கிறது அந்த சாவில் இருந்த சற்று விலகி ஒரு காதல் வளர்வது இதை நாம் வாசிக்கும்போது இதையெல்லாம் இவர் எவ்வாறு யோசித்து இந்த அளவு சரியாக கையாண்டு எழுதி இருப்பது தான் சிறப்பு என்று நம்மை வியக்க வைக்கிறார் ஆசிரியர்..

ஒரு நாவிதன் எவ்வளவு முக்கியமானவன் என்று இதை வாசிக்கும் போதே நான் அறிந்து கொள்கிறேன். ஒரு பிறப்பு முதல் இறப்பு வரை அந்த ஊரில் நடக்கும் நல்லது முதல் கெட்டது வரை அவர்களின் வாழ்நாள் முழுதும் பின்னிப்பிணைந்து இருக்கிறது என்பதை இதுபோல் நாவல்கள் தான் வெளிக்கொண்டு வருகிறது என்று எனக்குத் தோன்றுகிறது..

இந்த நாவலில் பாடப்படும் ஒப்பாரிப் பாடை உடுமலைப்பேட்டையில் லிங்க நாவிதன் சொல்லிக் கொடுத்த பாடலை ராசுவின் அம்மா பாடுவதும் அந்தப் பாடும் பாட்டை கேட்ட மனம் கலங்காதவர்களும் கலங்கி போகும் இடமாக மாறுகிறது..

இந்த நாயகன் காரு மாமாவை விட்டுவிட்டு அவனுடைய மனைவி வேறு ஒருவருடன் தனது மகன் மகளை கூட்டிக்கொண்டு போய்விடுகிறார் அந்த துயரம் கூட பெரிய இழப்பாக மனிதனுக்கு தெரியவில்லை இவரை விட்டுப் போனவள் இன்னும் நன்றாக வாழ்ந்தால் என்றால் அதுவும் நடக்கவில்லை குழந்தைகளை நன்றாக வளர்க்க முடியாமல் தடுமாற்றத்துடன் தான் இருந்திருக்கிறாள்..

இறப்பு நடந்து வீட்டில் என்னென்ன நிகழுமோ அத்தனையும் நம் கண் முன் கொண்டு வந்து விடுகிறார் ஆசிரியர்.

காரு மாமா மனைவியின் மீது அந்த உறவுகள் அனைத்தும் மிகவும் கோபமாகவும் வெறியிடனும் இருக்கிறது ஆனால் அந்த ராசம்மா நேரில் வந்தவுடன் அனைவரின் பார்வையும் வேறு விதமாக மாறிவிடுகிறது முன்புள்ள அத்தனை பிணைப்பும் ஏற்பட்டு விடுகிறது அவளின் அந்த சூழ்நிலையின் நிகழ்வுகளை அறிந்த அனைவரும் அவளை நினைத்து வருத்தப்பட வைக்கிறாா் ஆசிரியர் ஒரு பெரும் பகையாக இருந்தாலும் ஒரு நிமிடத்தில் மனம் மாற வைக்கிற அந்த நிகழ்வுதான் ஆசிரியரின் வெற்றி என்று நாம் சொல்லலாம்..

இந்த நாவலில் மனதை ஒன்றி போக வைக்கும் இடங்கள் நிறைய உள்ளது ஒன்றா இரண்டா என்று சொல்ல இயலாது பக்கத்திற்கு பக்கம் நெகிழ்ச்சியான நிகழ்வுகள் நிறைந்த நாவல் இது என்று அனைவராலும் சொல்லும் நாவலாக உள்ளது..

ஒரு கொங்கு வட்டார வழக்கு பேசி அதை சுற்றி இருக்கும் கிராமத்திற்கு சென்று அங்கு யாரும் அறியாத இறப்பு நிகழ்ந்து அதன் பிறகு நடக்கும் நிகழ்வுகளை நிகழ்வை வெளி உலகத்திலிருந்து
ட்ரோன் மூலம் மேலிருந்து கீழ் நடக்கும் நிகழ்வுகளை காணுவது போல் இருந்தது இந்த நாவல் இதிலிருந்து வெளிவரவே இன்னும் சில நாட்கள் பிடிக்கும் என்றுதான் தோன்றுகிறது பலமுறை இந்த நாவலை நாம் வாசித்தாலும் அதிலிருந்து புது புது செய்திகளையும் உணர்வுகளையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும் என்று தோன்றுகிறது காரு மாமா மனம் முழுதும் நிறைந்துள்ளார் அவருக்கு ஆழ்ந்த இரங்கலை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்..

மனிதர்கள் இருக்கும்போது கூட கவனிக்கப்படுவது இல்லை இறந்த பிறகு தான் அவர்களின் செயல்களை யோசிக்கப்படுகிறது பலருக்கு நினைவுபடுத்தப்படுகிறது அந்த வகையில் இந்த காரு மாமா எல்லோர் மனதிலும் வாழ்ந்து விட்டு சென்று விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்..

இதில் உள்ள நிறைய நிகழ்வு சொல்ல ஆசை தான்..மனதில் என்றும் அப்படியே பதிந்து விடும் நாவல்..

இந்த நாவல் என்ன செய்யும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு மிகப்பெரிய துக்கத்தை மனதில் விதைத்து விட்டு செல்லும் என்று சொல்லிவிட்டார் ஆசிரியர் இதற்கு விருதுகள் என்பதே கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது அப்படிப்பட்ட மனதில் நின்ற நாவல் இது அத்தனை துயரமும் இந்த விருது போக்கிவிட்டது என்று கூட நினைத்துக் கொள்வோம்..
இன்னும் பல நாவல்கள் இது போல்இன்னும் பல நாவல்கள் இது போல் வாழ வேண்டும் பலரின் வாழ்வியல்களை சொல்ல வேண்டும் என்று ஆசையுடன் காத்திருக்கும் வாசகர்கள்..

நூலின் தகவல்கள்:- 

நூல் : நீர்வழிப் படூஉம்

நூலாசிரியர் : தேவிபாரதி

வெளியீடு :தன்னறம்

தொடர்புக்கு : 44 2433 2924

விலை : ரூ. 250/-

பக்கங்கள் :200

நூலறிமுகம் எழுதியவர்:- 

நடராஜன்  செல்லம்

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *