கங்கை என்னும் நதியினிலே – மு. தனஞ்செழியன்

Relatives in personal protective equipment (PPE) suits perform the last rites before the cremation of their loved one, who died due to the Covid-19 coronavirus, on the banks of the Ganges River in Garhmukteshwar on May 5, 2021. (Photo by Prakash SINGH / AFP)கங்கை என்னும் நதியினிலே

புனிதங்கள் தேடி கங்கையில்
மிதக்கும் பிணங்கள்
புழுக்கள் கூடி சுவைக்கிறதே

தின்று கொழுத்த புழுட்களெல்லாம்
திமிராய் ஆட்சிசெய்ய நடக்கிறதே
கரை ஒதுங்கும் முகமெல்லாம்
ஏதோ சொல்ல நினைக்கிறதே

கருணை தேடி மிதக்கும் பிணங்கள்
கழுகு கொத்தி இறக்கின்றன
ஆட்சியின் அவலம் சொல்ல
பிணங்கள் எழும்பப் பார்க்குதே

எரிக்க இடமில்லாமல்
மிதக்க விடுகிறார்கள்
அழும் உறவெல்லாம் கரையில்
அழுகும் பிணம் எல்லாம் நதியில்

ஆட்சிக்கு எல்லாம் சாமியார்
மரணங்களின்
மௌன சாட்சிகயாய் நாம்..

-மு தனஞ்செழியன்