பெண்பால் – மு தனஞ்செழியன்பெண்பால்

பக்கத்து வீட்டு மாமா
பழம் தர அழைத்தார்
மடியில் உட்காரச் சொன்னார்
அது என்னவென்று எனக்கு அப்போது தெரியவில்லை.

படத்தில் சந்தேகம்
என ஆசிரியரைக் கேட்டேன்
அவர் வீட்டிற்கு வரச் சொன்னார்
அப்பாவுடன் சென்றேன்,
அடுத்த முறை தனியாக வா என்றார்.

என் கடை முதலாளி ஒருவர்
தினமும் என் மேல் சட்டைப் பையில்
எதையோ தேடுகிறார்
என் சுடிதாரின் மேல் துப்பட்டா
அவர் கண்களுக்குப் பிடிக்க வில்லை

என் பேருந்துப் பயணத்தில்
என் மகன் போல ஒருவன்
என் அப்பா போல ஒருவர்
எனை உரசிப் பார்க்காமல்
இருப்பதில்லை….சாராய நாத்தமும்
சிகரட் புகையும் அறை முழுவதும்
தோலுரித்து தொங்கும்
ஆடு போல நான்
இன்று காதலர்கள் தினம்
வெளியில் அவன் நண்பர்கள்
சிரிப்புச் சத்தம்
மயக்கம் தெளிந்து மெல்ல புரண்டேன்
என் நம்பிக்கைக்குரியவனின் நண்பன்
இன்னொருவன் என்மீது மீண்டும் ……
இன்று காதலர் தினம்

கண்ணாளன் ஆனான்
இதுவே கடைசி ராத்திரி என்பது போல
இப்போதே கூடச் சொன்னான்
மாத வலி தாங்காமல்
கசங்கின கண்கள்

நடிக்க வேண்டுமா?
நடிப்பை கட்டிலிலிருந்து
தொடங்கு என்றார்கள்

இதற்கு மேல் எழுத
என் கைகளில் தெம்பில்லை
உடம்பில் பலம் இல்லை
என்னை கட்டிலுக்கு இழுக்கிறார்
உயிர் தந்த உறவுக்காரர்!

– மு தனஞ்செழியன்

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)