சிறுகதை: ஊக்கு – மு. தனஞ்செழியன் “பேச்சுபீறாக்கில நே சொன்னதக்  கெடப்புல போட்டுறாதிக மொதலாளி

 “அதேல்லாம்.. ஐத்துப் போகாதுப்பா நீ் வெசனத்தோட வேலையை ஆரம்பி. கருப்பன் கூட இருந்து எல்லாம் செஞ்சுவப்பான்.”

கயித்துக் கட்டிலில் படுத்துக் கொண்டே கண்களை மூடியபடியே வீரபாண்டிக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார் செட்டின் முதலாளி சொக்கலிங்கம்.

பத்தாயிரம் நெல் மூட்டைகளைக் கூட அடுக்கி வைக்க கூடிய பிரம்மாண்ட செட்டின் உள்ளே தான். இந்த இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சு முடிந்ததும்

நா உங்கள நம்பீத்தேன் போறேன்…. வாரேன்…!”

வீரபாண்டி கிளம்பினார், துண்டை அவிழ்த்து மேலெல்லாம் வழிந்த வியர்வையைத் துடைத்துக்கும் போதே  இரண்டு தோள்பட்டை இயலிலும் மூட்டை சுமந்த தழும்புகள் ஆறாமல் இருக்கும்செருப்பு போட்டுப் பழக்கம் இல்லாததால் வெறும் காலிலேயே தான் நடப்பார்  கால்களின் இரண்டு கட்டை விரலும் ஒன்றையொன்று பார்த்தவாறே திரும்பியிருக்கும். பொடிநடையாக பேருந்து நிலையத்திற்கு நடையைக் கட்டினார் வீரபாண்டி.

அவர் மகன் திருமணத்திற்கு செட் முதலாளியிடம் அட்வான்ஸ் தொகை கேட்டு இருந்தார்.

முதல் மகன் கல்யாணத்துக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை ஏழு ஆண்டுகள் தொடர்ந்து கழித்துப் போன வாரம்தான் கழிக்க முடிந்தது. மீண்டும் புதிய கணக்கை இரண்டாவது மகன் திருமணத்திற்காகத் தொடங்குகிறார்

பொண்டு பொடிசுகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது. வீரபாண்டி மண்டபத்திற்குத் தேவையான சாமான்களை சுமையுந்தில் ஏற்றிக் கொண்டு இருந்தார்.

 “கொள்ள வேலை கெடக்கு, செல்வம் எங்கன போன?” வீரபாண்டி தேட. “ராத்திரிக்கே மண்டபத்துக்குக் கொண்டுபோயிர வேண்டியாது தானே. பொறவு காலையில அச்சலாத்தியா இருக்கும்வீரபாண்டி மனைவி தார்விரிப்பை எடுக்கச் சொன்னாள்.

 செல்வம் வீரபாண்டி அய்யாவை நோக்கிக் கையசைத்தான். தார்ப்பாயைத் தலையில் வைத்துக் கொண்டு தெரு முக்கில் அரச மரத்தின் பக்கத்தில் சோடியம் லைட் வெளிச்சத்தில்  ஈசல்கள்  கூட்டம்  பறந்து கொண்டிருக்க. அதன் கீழே நின்றிருந்த  சுமையுந்தின் பக்கம் நடந்து வந்தார் வீரபாண்டி

செல்வம் தார்ப்பாயை வாங்கி சுமையுந்திலிருந்த குட்டிப்புலியிடம் கொடுத்தான். அவன் அதைக் கொண்டுபோய் எல்லோரும் அமர்வதற்கு சுமையுந்தில் ஏதுவாக விரித்தான். சுமையுந்து திருமண மண்டபத்துக்கு கிளம்புவதற்காகத் தயாராக இருந்தது. ஊரார் ஒவ்வொருவரும் சுமையுந்தில் எறி  அமர்ந்து கொண்டிருந்தார்கள்.

செல்வம் வீரபாண்டியன் காதைக் கடித்தான்.

 “அய்யா பணம் வாங்கிட்டிற

மொதலாளி செட்டுக்கு வரச் சொல்லி இருக்காக! நே போய் வாங்கிட்டு நேரா மண்டபத்துக்கு  வந்துர்றே(ன்)… நீங்க எல்லாரும் வெரசா கெளம்புங்க.”

வீரபாண்டி சுமையுந்தில் தன் உறவினர்களை மண்டபத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு. தூத்துக்குடி செட்டுக்கு வந்தார்

அங்கே சொக்கலிங்கம் முதலாளி  டியூப் லைட் வெளிச்சத்தின் கீழ், ஒரு மேசையில் நூறு ரூபாய் கட்டு ஒன்றை வைத்துக்கொண்டு. வீரபாண்டிக்காகக் காத்திருந்தது போலவே காத்திருந்தார். பணத்தைப் பார்த்ததும் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது வீரபாண்டிக்கு.

 “மொதலாளி…..” என சிரித்துக் கொண்டே துண்டை இடுப்புக்கு இறக்கினார்.

 “வாயா பாண்டி…! சோடு எப்படி இறுக்கு

 “சோடு நல்ல சோடுதாங்கரூவாய தந்தியானா கருக்கல்லலேயே போயிடுவேன்.”

 “இந்தா பாண்டி உனுக்குதே வச்சி இருக்காக, அது வேற ஒண்ணும்  இல்ல.. இந்த சுப்பு லோடு ஏத்த வரேன்னுச் சொன்னான். ஆளக் காணோம். வெள்ளாங்காட்டியும் வண்டி கெளம்பணும்….  செத்த  ஏத்தி விட்றுப்பா

 “அதில்லைங்க மொதலாளி ரவைக்குத்தான் பரிசம் போடணும்நாங்க பரிசுப்பெட்டியோட போகணும்..அதான்..பாக்கறேன்

 “அட உனக்கு இது பெரிய விஷயமாபா…! ஒரு நூறு மூட்டை தானே.. சட்டுபுட்டுன்னு சோலியமுடிச்சுட்டு  கிளம்பு, நான் வாரேன்.”

 வீரபாண்டி சட்டையைக் கழற்றி ஊக்கைக் கையில் எடுத்தான்.

*************