இல்லை – மு. தனஞ்செழியன்முற்றாத இரவென்று இல்லவே இல்லை
தொடங்காத பகல் ஒன்று வெகு தூரம் இல்லை

கருணை தருவதற்கு
கடவுளுக்கு மனமில்லை

உறங்க மூடும் கண்விழிகள் நாளை எண்ணி வருந்துவது இல்லை

இந்த ‘நான்’ மட்டும் நம்மை
தூங்க விடுவதில்லை..

காசில்லாமல் விடியும் பொழுதுகளில் வறுமை இல்லை..

காசுடன் இருக்கும் மனங்களுக்கு
இரவில் உறக்கம் இல்லை..

எல்லாம் பொதுவாய் இருக்க
ஊர் ஒத்துழைப்பதில்லை..

தேடி, அலைந்து, உழைத்து சேர்த்த சொத்தை அனுபவிக்க வயதில்லை

கூடுவிட்டு ஆவி போன பின்பே
அந்த சவத்திர்கே பெயர் இல்லை

பேரண்டம் ஒரு பொழுதில் துவங்கியது இல்லை

இந்த பிணம் மட்டும் அதை பாழாக்க தயங்குவதில்லை

நீ – இல்லை
நான் -இல்லை
உருவாக்கிய உறவும்
உனது இல்லை

எண்ணி வருந்திக் கொள்ள, இந்த வாழ்வில் பெரிதாய் எதுவும் இல்லை

உயிர் உள்ளிழுக்கும் காற்றும் நுழைவதில்லை..

இறந்த-பின்பு அழுவதற்கு
ஒன்றும் இல்லை…

நொடிப்பொழுதில் மறையும்
இந்த நிமிடமும்
நிரந்தரம் இல்லை…

காத்திருக்கிறேன்

– மு தனஞ்செழியன்