முற்றாத இரவென்று இல்லவே இல்லை
தொடங்காத பகல் ஒன்று வெகு தூரம் இல்லை

கருணை தருவதற்கு
கடவுளுக்கு மனமில்லை

உறங்க மூடும் கண்விழிகள் நாளை எண்ணி வருந்துவது இல்லை

இந்த ‘நான்’ மட்டும் நம்மை
தூங்க விடுவதில்லை..

காசில்லாமல் விடியும் பொழுதுகளில் வறுமை இல்லை..

காசுடன் இருக்கும் மனங்களுக்கு
இரவில் உறக்கம் இல்லை..

எல்லாம் பொதுவாய் இருக்க
ஊர் ஒத்துழைப்பதில்லை..

தேடி, அலைந்து, உழைத்து சேர்த்த சொத்தை அனுபவிக்க வயதில்லை

கூடுவிட்டு ஆவி போன பின்பே
அந்த சவத்திர்கே பெயர் இல்லை

பேரண்டம் ஒரு பொழுதில் துவங்கியது இல்லை

இந்த பிணம் மட்டும் அதை பாழாக்க தயங்குவதில்லை

நீ – இல்லை
நான் -இல்லை
உருவாக்கிய உறவும்
உனது இல்லை

எண்ணி வருந்திக் கொள்ள, இந்த வாழ்வில் பெரிதாய் எதுவும் இல்லை

உயிர் உள்ளிழுக்கும் காற்றும் நுழைவதில்லை..

இறந்த-பின்பு அழுவதற்கு
ஒன்றும் இல்லை…

நொடிப்பொழுதில் மறையும்
இந்த நிமிடமும்
நிரந்தரம் இல்லை…

காத்திருக்கிறேன்

– மு தனஞ்செழியன்


14 thoughts on “இல்லை – மு. தனஞ்செழியன்”
  1. விமர்சிக்க வார்த்தை இல்லை. மிகவும் சிறப்பு தோழர். வாழ்த்துகள் தோழர்

  2. “எண்ணி வருந்திக் கொள்ள, இந்த வாழ்வில் பெரிதாய் எதுவும் இல்லை”

    ரசித்து படித்த வரிகள்..

    “Being empty is the greatest feel” என்பதை போல. மனதை காலி செய்யும் வரிகள். எதுவும் இல்லையென்ற போதிலும் நாம் அனைவரும் எதற்கோ காத்திருக்கிறோம். கவிதையின் கடைசி வரியை போல.

    வாழ்த்துக்கள் தோழர்.

    நன்றி
    ஜெயஸ்ரீ

  3. மனதை லேசாக்கும் வீரியமிக்க வரிகள் தோழர்👍 வாழ்த்துகள்

  4. இல்லையில் எவ்வளவு இருக்கிறது…
    வாழ்த்துக்கள் தோழர்.

  5. கருத்துள்ள கவிதை.. வாழ்த்துகள் சொல்ல வார்த்தைகள் இல்லை..💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  6. இல்லை… கவிதையில், வாழ்வின் அர்த்தம் முழுவதும் இருக்கிறது .வாழ்த்துகள் தோழர் 👍

  7. எதுவுமில்லை இந்த பெரு வாழ்வில்…
    எல்லாம் இக்கவிதையில்..

  8. “இல்லை”க்குள் அனைத்தும் இருக்கிறது என்று, எதார்த்தமாக, அழுத்தமான வார்த்தைகளில் கூறி விட்டார் கவிஞர்.

  9. ‘இல்லை’ இல்லை
    இருக்கிறது
    சிறப்பாய் இருக்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *