மொழிபெயர்ப்புக் கவிதை: *கவிதையின் மரணம்* – ஹிந்தியில் : தர்மவீர் பாரதி | தமிழில் : வசந்ததீபன்கவிதையின் மரணம் 

இவர்கள் இன்று யாருடைய சவத்தை சுமந்து போனார்கள் ?
மற்றும் இந்த விஸ்தாரமான ஆலமரத்தின் கீழ்
எந்த அபாக்யவானின் சவப்பெட்டி நிறுத்தப்பட்டு இருக்கிறது
இதனுடய பலன்கள் அமர்ந்து
கழுத்தை வளைத்தன
யார் சொல்கிறது கவிதை இறந்து போனது என்று ?

இறந்து போனது கவிதை,
இல்லை நீ கேட்டாயா ?
ஆம் , அது தான் கவிதை என்று
எதனுடைய நெருப்பிலிருந்து
சூரியன் உருவாக்கப்பட்டது
பூமி உறைந்தது
மழை அலையடித்தது
மற்றும் எதனுடைய மடியில் மயக்கமடைந்த கிழக்குக் காற்று
இதழ்களின் மேல் தங்கிப் போனது ?

அந்தக் கவிதை
விஷ்ணுவின் பாதத்திலிருந்து
அது புறப்பட்டு
பிறகு பிரம்மாவின் கமண்டலத்தோடு கொதித்து
மேகங்களின் மடிப்புகளைக் குலுக்கி
நிலவின் வெள்ளிப் பூக்களைச் சேகரித்து
சிவனின் கைலாஷ மலையை அசைத்து
இறங்கி வந்து மனிதனின்
பூமி மேல் நடந்து
பிறகு புன்னகைத்து
பசும்புல் _ கருநீலமான மலர்கள் , பழங்கள் , முற்றிய தானியங்கள் விளையாட
சுவர்க்கத்திலிருந்து பாதாளம் வரை
அது ஒரு நீரோட்டமாக மாறி பாய்ந்தோடியது
ஆனால்
இறுதியற்று
அதுவும் ஒருநாள் வாழ்ந்து கொண்டு.
இறந்து போனது கவிதை அங்கே.

ஒரு துளசி _ இதழ் ‘ஔ’
இரு துளி கங்கைநீர் இல்லாமல் ,
இறந்து போனது கவிதை , நீ கேள்விப்படவில்லையா ?

பசி அவளுடைய இளமையை உடைத்துப் போட்டது
அந்த தீண்டப்படாத அபாக்யவதியின்
வகிட்டுக் குங்குமத்துக்குரியவன்
காசநோயின் நோயாளி ஆகி
இறந்து போனான்
‘ஔ’ நட்சத்திரங்களிலிருந்து எங்கேயோ
அப்பாவிக் குழந்தைகள்
கட்டாயமாக
பிச்சைக்குக் கெஞ்சுகிறார்கள்
அல்லது
நடைபாதைகளின் விளிம்புகளிலிருந்து எழுந்து
விற்கிறார்கள்
பாதி எரிந்த நிலக்கரிகள்.

(நினைவு வருகிறது எனக்கு
பாகவதத்தின் அந்த மிகவும் பிரபலமான விஷயம்
பிருந்தாவனத்தின் ஒரு கோபிகை
தயிர் விற்கப் புறப்படுகிறாள்
‘ஔ’ கிருஷ்ணனின் சுவை நிறைந்த நினைவில்
தன்னுணர்வு மறந்து
தானே தயிராகிப் போனாள்
மற்றும் இந்த
அப்பாவிக் குழந்தைகளும்
நிலக்கரி விற்கப் போய்
தாமே நிலக்கரியாகிப் போனார்கள்
ஷ்யாமின் மாயை )

மற்றும் இப்போது
இந்த நிலக்கரிகளும்
இருக்கின்றன அனாதையாக
ஏனென்றால் அவர்களின் உதவியும்
நழுவிப் போனது
பசி அவளின் இளமையை
உடைத்துப் போட்டது
இவ்விதம்
கவிதை மிகவும் சிறப்பானதாக மட்டுமே இருந்தது
ஆனால்
பணமற்றதாக இருந்தாள்
பலகீனமானவளாக இருந்தாள்
மற்றும்
ஆதரவற்ற வறியவள்
இறந்து போனாள்.

இறந்து போனது கவிதையா ?
இறந்து போனது இளமையா ?
இறந்து போனது சூரியன்
இறந்து போயின நட்சத்திரங்கள்
இறந்து போயின ,
செளந்தர்யம் எல்லாம் இறந்து போயினவா ?
சிருஷ்டியின் ஆரம்பத்திலிருந்து
நழுவிப்போய் இருந்தது
அன்பின் ஒவ்வொரு சுவாசத்தின் மீது வளர்ந்து இருந்தது
மனிதத்தன்மையின் கதை
இறந்து போனதா ?

பொய்யாய் இருக்கிறது இது
மனிதன் இவ்வளவு பலகீனமான இல்லை
கண் இமையின் நீரிலிருந்தும்
நெற்றியின் வேர்வையிலிருந்தும்
நீர் பாய்ச்சி வந்தது எப்பொழுதும்
அது சுவர்க்கத்தின் கீழிருந்தும்
இந்த சூழ்நிலைகள்
உருவாக்கித் தரும்
அதை உயிரற்றதாக.

பொய்யாய் இருக்கிறது இது
பிறகு எழுவான் அவன்
மற்றும் சூரியனின் வெளிச்சம் பெறும்
நட்சத்திரங்களின் மினுமினுப்பை பெறும்
சவக்கோடித் துணியில் சுற்றப்பட்ட அழகிற்கு
பின்னர் ஒளிக்கதிர்களின் மென்மையான சந்தடி கிடைக்கும்
பிறகு எழுவான் அவன்
மற்றும் உடைந்த எல்லாக்குரலும் ஒன்று சேர்ந்து
துடைக்கும்
அவர்களோட ரத்தம்
பிறகு பின்னும் புதிய கவிதையின் வானம்
புதிய மானுடத்தின் புதிய யுகத்தின் மினுமினுக்கிற பாட்டு.

பசி, ரத்தக்களரி , வறுமை இருக்கிறது
ஆனால்
மனிதனின் படைப்பின் வலிமை
இவை எல்லாவற்றின் சக்திக்கு
மேலே
மற்றும் கவிதையின் படைப்பின் குரல் இருக்கிறது
பிறகு வெளிப்பட்டுச் சொல்லும் கவிதை
” என்ன ஆனது உலகம்
மயானம் ஆனதால்
இப்பவும் எனது இறுதிக்குரல்
பாக்கி இருக்கிறது
மிருகதனத்தின் கடைசி எல்லை முடிந்து இருக்கிறது
மனிதத்தன்மையின் எதிர்காலம் இப்போதும் பாக்கி இருக்கிறது
எடுத்துக் கொள் நீ
பின்னர் புதிய நம்பிக்கை கொடுக்கிறேன்
புதிய வரலாறு கொடுக்கிறேன்.

யார் சொல்கிறது கவிதை இறந்து போனதென்று ?

ஹிந்தியில் : தர்மவீர் பாரதி
தமிழில் : வசந்ததீபன்தர்மவீர் பாரதி
__________________
பிறப்பு :
__________
25 டிசம்பர் 1926

இறப்பு :
_________
04 செப்டம்பர் 1997

பிறந்த இடம் :
________________ ‌
ப்ரயாக் , உத்திரபிரதேசம் ,இந்தியா.

சில முக்கியப் படைப்புகள் :
______________________________
(1)டண்டா தோஹா (1952)
(2) அந்தா யுக் (1954)
(3) கனுப்ரியா (1959)
(4) ஸாத் கீத் வர்ஷ (1959)
(5) ஸப்னா அபீ பீ (1993)
(6) ஆத்யந்த் (1999)

பெற்ற விருதுகள் :
_____________________
(1) பத்மஸ்ரீ 1972)
(2) பாரத் பாரதி ஸம்மான் (1989)
(3) மஹாராஷ்ட்ர கெளரவம்(1990)
(4) வ்யாஸ் ஸம்மான் (1994)
இவைகள் தவிர மேலும் நிறைய விருதுகள் பெற்றுள்ளார்.
மக்கள் விரும்பும் வாராந்திர இதழ் தர்மயுக்கின் ஆசிரியராக இருந்துள்ளார்.