தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஏற்பாட்டில் இரண்டாம் ஆண்டாக தருமபுரியில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை மதுரை சுந்தர ராஜா ராவ் திருமண மண்டபத்தில் புத்தக கண்காட்சி சிறப்பாக நடந்து முடிந்தது.
இக்கண்காட்சி தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த உயர் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கே.பி.அன்பழகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் திருமதி சு.மலர்விழி அவர்களின் முழு ஒத்துழைப்போடு ஒரு அரசு நிகழ்வு போலவே நடந்து முடிந்தது.
53 அரங்குகளை அரங்குகளில் பாரதி புத்தகாலயம், சாகித்திய அகாதமி ,நேஷனல் புக் டிரஸ்ட், காலச்சுவடு உள்ளிட்ட முன்னணி பதிப்பகங்கள் பங்கேற்ற இக்கண்காட்சியில் வாசகர்கள் ஆர்வத்தோடு தேடித்தேடி புத்தகங்களை அள்ளிச் சென்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
சுமார் 25,000 மாணவர்களும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்துகொண்டு ரூபாய் 60 லட்சத்துக்கும் மேல் புத்தகங்களை வாங்கி சாதனை படைத்தனர்.
அதுபோலவே மாலை நேரங்களில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் திரு. ஸ்டாலின் குணசேகரன், வழக்கறிஞர் அருள்மொழி, திரு உதயச்சந்திரன் ஐஏஎஸ், திரு மதுக்கூர் ராமலிங்கம், திரு ஆதவன் தீட்சண்யா, திரு பாலகிருஷ்ணன் ஐஏஎஸ், டாக்டர் சங்கர சரவணன், தவத்திரு பாலபிரஜாபதி அடிகளார், பத்திரிக்கையாளர் சமஸ், மருத்துவர் சிவபாலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
தமிழ் இசைப் பாணர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினர்
“தமிழ் இசை”நிகழ்ச்சியும் நடந்தது. இந்நிகழ்வுகளில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதோடு சிறப்பு விருந்தினர்களின் பேச்சை மிகுந்த கவனத்தோடு கேட்டு ரசித்தனர்.
Leave a Reply
View Comments