தூமிலின் ஹிந்தி கவிதைகள் மொழிபெயர்ப்பு -‌ தமிழில் : வசந்ததீபன்

தூமிலின் ஹிந்தி கவிதைகள் மொழிபெயர்ப்பு -‌ தமிழில் : வசந்ததீபன்



(1) தூமிலின் கடைசிக் கவிதை
___________________________________
” வார்த்தை எந்த மாதிரி
கவிதையாகிறது
இதைப் பார்
எழுத்துகளுக்கு நடுவே விழுந்து கிடக்கும்
மனிதனை படி
இது இரும்பின் குரல்
அல்லது
மண்ணில் சிந்திய ரத்தத்தின் நிறம் என்பது
என்ன உனக்குகேட்கவில்லையா ? “
இரும்பின் சுவையை
கொல்லனிடம் கேட்காதே
அந்த குதிரையிடம் கேள்
அதன் வாயில் கடிவாளம் இருக்கிறது.


(2) மரணம் _ கவலை
___________________________
யாரும் வாழ்வதில்லை
விளைந்த தானியங்களின் மரணம்
எல்லா வரலாறும் வயல் ,
விரல் நுனிகளின்  கீழ்
சித்திரவதை செய்யப்பட்டது
விரைத்த குடல்களிலிருந்து _
நிறைந்த வயிறு.
எந்த உள்ளங்கைகளும் அப்படி இல்லை _
க்ராஸ் நிரம்பிய முகங்கள்
அதன் மேல் கவிழ்ந்து கொட்டிக்கிடக்கவில்லை
சமுத்ரத்தின் துளித்துளித் தேகம்
இடி வீழ்தல் ! பனி வீழ்தல் !!
ப்ரேக் போடப்பட்ட வண்டியின்
உதறலைப்போல
விந்து வீழ்ந்து
ரோகிணி திசையில் தொடர்ச்சியான வெளியேற்றம் ,
கருக்கலைப்பு ! கருக்கலைப்பு !!
குழந்தைகளின் கண்களில்
சாபத்தின் நிழல்
முதியவர்களின் முகங்களின் மேல்
பாபத்தின் பிம்பம்.


(3) இல்லறம் _ நான்கு பரிமாணங்கள்
_____________________________________
என் முன்னால்
நீ சூரிய _ நமஸ்காரத்தின் முத்திரையில்
நிற்கிறாய் ,
மற்றும் நான் வெட்கமாய்  உன்னை
மெளனமாக பார்த்துக் கொண்டே இருக்கிறேன்
( பெண் : முந்தானை  ,
 மக்கள் சொல்வது போல _ சிநேகம் ,
ஆனால் எனக்கு தெரிகிறது _
இவைகள் இரண்டையையும் விட
சிறப்பாக
பெண் ஒரு தேகம் ) .
என்னுடைய கைகளில்
உரைத்துப் பார்க்கப்பட்ட
நீ மரணத்தை விரும்பிக் கொண்டிருக்கிறாய்
மற்றும் நான் இருக்கிறேன் _
இந்த இரவின் இருளில்
பார்க்க விரும்புகிறேன் _
வெயிலின் ஒரு துண்டு என
உன்னுடைய முகத்தின் மேல்.
இரவை எதிர் பார்த்து நாம்
எல்லா நாளும் கழிந்து இருக்கிறது
மேலும் இப்போது
எப்போதுமான இரவு
வந்து இருக்கிறது.
நாம் இந்த ஆழ்ந்த நிசப்தத்தில்
நோய்ப் படுக்கையின் தலைமாட்டில்
உட்கார்ந்து
ஏதாவது ஆரோக்கியமான நொடிக்காக
காத்துக் கொண்டு இருக்கிறோம்.
நானில்லை
நீயில்லை
இவைகள் எல்லாம் குழந்தைகள்
நம்முடைய சந்திப்பிற்காக பிறந்து இருக்கின்றன
நாமிருவர் மாத்திரம்
இந்த அறியாமை பிறப்பின்
மூலமாக படைக்கப் பட்டிருக்கிறோம்.
ஹிந்தியில் : ‌தூமில்
தமிழில் : வசந்ததீபன்



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *