அருள்மொழி (Arulmozhi) எழுதிய டைரி (Diary) - நூல் அறிமுகம் /சிறுகதைகள் (Short Stories) - https://bookday.in/

டைரி (Diary) – நூல் அறிமுகம்

டைரி (Diary) – நூல் அறிமுகம்

குடும்பம் என்னும் அமைப்பு சென்று தீர்த்த எம் பெண்களுக்காக – புத்தகத்திலிருந்து

புத்தகத்தை வாசிக்கும் முன் உள்ளடக்கத்தை பார்த்தேன். எல்லாம் தலைப்புகளுமே பெண்களை மையப்படுத்தியும் சமூகத்தை மையப்படுத்தியும் இருந்தன. அதுவே புத்தகத்தை படிக்க தூண்டியது எனலாம்.

தைரியம் என்பது நம்மை பிரதிபலிக்கும். நான் யார்? நம் பழக்க வழக்கம் என்ன? நாம் தினந்தோறும் செய்யும் பணிகளையும், நம் விருப்பு வெறுப்பு அழுகை சிரிப்பு என அனைத்துமே நம் டைரி நமக்கு காட்டும்.

அதுபோலத்தான் தோழர் அருள்மொழி அவர்கள் எழுதிய இந்த டைரி ஆண்டாண்டு காலமாக பெண் என்றால் இதை செய்ய வேண்டும், இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும், இதைத்தான் பேச வேண்டும், இப்படித்தான் பேச வேண்டும், இந்த உடை தான் அணிய வேண்டும், இவ்வளவு உணவு தான் உண்ண வேண்டும், எந்த உணவும் விரும்பிய நேரத்திலோ விரும்பிய உணவையோ உண்ண முடியாத எத்தனையோ பெண்களின் பொருளாக தான் நான் பார்க்கிறேன்.

இது தோழரின் முதல் புத்தகம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் புத்தகத்தை படிக்கும்போது எந்த இடத்திலேயும், அது தோன்றவே இல்லை. அப்படி ஒரு சரளமான எழுத்து நடை.

கணவன் ஒரு பதவியில் இருந்தால் அது தனக்கே உண்டான கௌரவம் என நினைக்கும் பெண்கள், தன்னை அந்த கணவன் எந்த நிலையில் வைத்துள்ளான் என்பதை யோசிப்பது கூட இல்லை.

மற்ற ஆண்களைப் போல கணவர் புகை பிடிப்பது இல்லை. எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்றால் போதும் என் கணவர் யோக்கியவான் என எண்ணிக்கொண்டு காலம் முழுவதும் அவனுக்கு அடிமையாகவே தன் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர் பெண்கள்.

பெண்கள் பேருக்கு பதவி இருந்தாலும் அதிகாரம் முழுவதும் ஆண்களிடம் அல்லவா இருக்கிறது. ஆண்களின் பார்வையே பெண்களை வழிநடத்துகின்றது பெண்கள் ஆண்களின் அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் அடிமைத்தனத்திற்கும் கட்டுப்பட்டவர்களாகவே எண்ணப்படுகின்றன.

கணவனை இழந்து பெண்களை இந்த ஆண் சமூகம் பார்க்கும் பார்வை வேதனைப்பட வேண்டியதா அல்லது அதை எண்ணி அசிங்கப்பட வேண்டியதா தெரியவில்லை? வெள்ளை சேலை கட்டிய பெண்களையோ கணவனை பிரிந்த பெண்களையோ கண்டால் சில ஆண் சமூகத்திற்கு தனக்குள் இருக்கும் மிருகம் எட்டிப் பார்ப்பது இயல்பாக உள்ளது.

அங்காளி பங்காளி கூட மரணம் என்று சம்பிரதாயங்களை தங்கள் குழுக்களுக்கே இருக்கும் பெரும் பேராக எண்ணி தலைக்கு மேல் வைத்து கொண்டாடியும் நேரத்தில் இறப்பிற்குப் பின் இந்த குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்கவோ தட்டிக் கொடுக்கவோ யாரும் வருவது இல்லை.

கொடைக்கானல் என்ற தலைப்பில் வந்த கதை என்னை மிகவும் யோசிக்க வைத்தது. மருத்துவம் படித்த ஒரு பெண்ணை மருத்துவம் படித்த ஒரு ஆணுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். படித்து பல பேருக்கு சேவை செய்ய வேண்டும் என்று எண்ணத்தில் பல கனவுகளோடு வந்த பெண்ணை திருமணம் என்ற சுறுக்கு கயிற்றில் ஏற்றி விடுகின்றது இந்த குடும்பம்.

வசதியான குடும்பத்தில் பெண் வேலைக்கு செல்லக்கூடாது. குழந்தைகள் பிறக்கும் வரை பெண் வேலைக்கு செல்லக்கூடாது. குழந்தைகள் பிறந்த பின்னர், குழந்தைகள் வளரும் வரை வேலைக்கு போகக்கூடாது. என்னடா உங்க குடும்பமும் கல்யாணமும்?

ஒரு பெண் ஒவ்வொரு முறையும் தன் கற்றுக் கல்வியை இந்த சமூகத்திற்கு பயன்படுத்த, தன் சுயத்தை உலகிற்கு வெளிக்காட்ட தன்மானத்தை நிரூபிக்க ஒவ்வொரு முறையும் முயன்று முயன்று கடைசியில் வெளியில் சொல்ல முடியாத மன உளைச்சலுக்கு ஆளாகி தன்னுடைய இறுதி முடிவையே தேடிக் கொள்கிறாள். அப்பொழுதும் அந்த பெண்ணிற்காக யாரும் அனுதாபப்படுவதில்லை. கோழைத்தனம் என்ற ஒரு பட்டப் பெயர் தான் வழங்கப்படுகிறது அவளுக்கு.

கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே பிரதானமாக பார்க்கப்படுகிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்து செய்யும் தவறில் இழப்பு என்பது பெண் மட்டுமே இருக்ககிறது. கருக்கலைப்பு என்பது ஒரு குடும்பத்தின் கௌரவமாக பார்க்கப்படுகிறது தவிர ஒரு பெண்ணின் நிலையிலிருந்தோ பிறக்கப் போகும் குழந்தையின் நிலையில் இருந்தோ யாரும் பார்ப்பதில்லை.

தன் மகளின் உயிர் போனாலும் பரவாயில்லை. ஆனால் தகாத உறவால் பிறக்கப் போகும் குழந்தையால் தங்கள் மானம் கப்பல் ஏறக்கூடாது என் நினைக்கும் பெற்றோர்கள் மகள் இறந்த பின்னர் ஒப்பாரி வைத்து மட்டும் என்ன பயன்? இது போன்ற எத்தனையோ பெண்களின் சொல்ல முடியாத மனதில் அடக்கி வைக்க முடியாமல் எத்தனையோ பெண்கள் தங்களது தவறான முடிவுகளை தேடிக் கொள்கின்றனர். அவர்களின் அக கண்ணாடியாக தான் இந்த டைரியை நான் பார்க்கிறேன்.

நூலின் தகவல்கள் : 

புத்தகம்: டைரி (Diary)
ஆசிரியர்: அருள்மொழி
வெளியீடு:
பக்கங்கள்:208
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/diary/

நூல் அறிமுகம் எழுதியவர் : 

✍️ நளினி மூர்த்தி

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. Mano

    எழுத்துப்பிழை அதிகம் உள்ளது.
    பிழை திருத்தம் செய்த பின் பதிவு செய்தல் நன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *