இயக்குநர் ராமின் (Director Ram) "பறந்து போ ❤️ (Paranthu Po Movie Review in Tamil)" - திரை விமர்சனம் | Parandhu Po Review; பறந்து போ விமர்சனம் review; பறந்து போ விமர்சனம்

இயக்குநர் ராமின் “பறந்து போ ❤️ (Paranthu Po)” – திரை விமர்சனம்

இயக்குநர் ராமின் “பறந்து போ ❤️ (Paranthu Po)” – திரை விமர்சனம்

குழந்தைகள் மரம் ஏற முயற்சி செய்கிறார்கள், ஒரு வகையில் இயற்கையான சுதந்திரத்தின் ஒரு பகுதியாக அவை குழந்தைகளுக்கு உள்ளது. உயரமான இடத்திற்கு சென்று விட வேண்டும் என்பது மனிதனின் எப்போதைக்குமான என்னமாகவே உள்ளது நீட்சே குறிப்பிடுகிறார். “He who climbs upon the highest mountains laughs at all tragedies, real or imaginary.” (அதிக உயரத்தில் நின்று பார்க்கும் போது மனிதன் அவனின் துயரங்களை பரிதாபமாக பார்க்கிறான். அவை மிகவும் சிறியதா தெரிகிறது) என்பார். உண்மையில் மற்றவர்களின் பிரச்சனைகளை கேட்கும் போது நமது பிரச்சனை சிறியதா தெரிவது போல.

இரவுகளில் வேலை முடித்து நாலு செவுத்துக்குள்ள அடைபட்டுக்கொண்டாள் போதும் என பயத்தில் நடந்து வந்து தஞ்சம் அடையும் அன்புவின் அம்மாவுக்கு வேண்டிய சுதந்திரமும், நாலு செவுரு இல்லமா இரவில் எங்கோ ஒரு சாலையின் ஓரத்தில் இருக்கும் பழைய கல் மண்டபத்தில் (ஆண்களாக) தூங்கும் அன்புவும் அன்பு அப்பாவுக்கும் கிடக்கும் சுதந்திரம் வேறு தான்.

குழந்தைகள் உளவியல் என்ன எந்த வயதில் எப்படி இருப்பார்கள் என்று இணையத்தில் தேடி தகவலை வைத்து வளர்க்கப்படும் அன்புக்கு, அவனது சாலை பயணத்தில் எதார்த்தமான உலகின் சுதந்திரம் கிடைக்கிறது. அது அவனுக்கு பிடித்து விடுகிறது. அது வரை பிடித்த அம்மா அப்பா பிடிக்காமல் போய்விடுகிறது, அபார்ட்மெண்ட்டில் வளர்க்கப்படும் பிராணிகள் கூட வெளியில் சென்று வருகிறது, ஆனால் அபார்ட்மெண்ட் குழந்தைகள் வெளியில் வருவது இல்லை என இருக்கும் வாழ்வில் அன்பு-வுக்கு கிடைக்கும் சுதந்திரம் அவனுக்கு பிடிக்க செய்றது, தோழி விட்டில் தலை நனையாமல் சும்மிங் புல் குளியலில் குளித்து வந்த அன்புக்கு தலை நனைந்து குளத்தில் குளிப்பது சுதந்திரம் தான். 5000 ரூபாய் ஸ்கேட்டிங் போர்ட் விட 50 ரூபாய் பம்பரம் பிடிப்பது என்பது குழந்தைகளில் கற்றலின் தேடலின் தொடர்சி, வாத்து முட்டையில் இருந்து டைனோசர் வருமா இல்லையா என்பதை விட சில நம்பக்கையில் தான் வாழ்க்கையில் நகர்வு நம்மை நகர்த்தி கொண்டு வரும். நின்ற இடத்தில் மழை வராமல் ஒரு அடி தொலைவில் மழை வருவதை பார்க்க மலை உச்சியில் சூரிய உதயத்தை பார்க்க நாலு செவுருகளை விட்டு வெளிவரும் போதே இவற்றை அனுபவிக்க முடியும்.

இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் உண்மையில் பல உடல் பிரச்சினைகளை நிராகரிக்க முடியும் என்பது இரவில் பலூன் ஊதும் அன்புவின் அம்மா தான் குளத்திலும் குதிக்க முடிகிறது, மலையும் ஏற முடிகிறது. அன்புவின் அப்பா மூச்சிறைக்க ஓடி முடியாமல் படுத்து கிடக்கும் போது தோளில் தான் நீர் பட்டில் உள்ளது என்பதை சிந்திக்க வைக்காமல் சிகரெட் மூளையை மழுங்கடிது உடலையும் கெடுத்து விடுகிறது.

இயக்குநர் ராமின் (Director Ram) "பறந்து போ ❤️ (Paranthu Po Movie Review in Tamil)" - திரை விமர்சனம் | Parandhu Po Review; பறந்து போ விமர்சனம் review; பறந்து போ விமர்சனம்
“பறந்து போ ❤️ (Paranthu Po)”

நுட்பமான அரசியலாக பார்த்தால் வர்க்க வேற்றுமையை ஆழமாக காட்சிப்படுத்த படம் தவறிவிட்டது, ஒரு வேளை அதை இறகு போல லேசாக காட்சிக்படுத்த நினைத்துவிட்டார் போல ராம்.

சோவியத் எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி அமெரிக்கா சென்ற போது அங்கே உள்ள கட்டிடங்களை பார்த்து எழுதி இவ்வாறு இருப்பார் “அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை கிஞ்சிற்றேனும் இல்லாமல், சதுரம் சதுரமாக, வளைவு குழைவுகளின்றி இருக்கும் அந்தப் பலமான கட்டிடங்கள் அருள் கெட்ட தோற்றத்துடன் நிமிர்ந்து நிற்கின்றன. ‘நாம் உயரமாக இருக்கிறோம்’ என்று நினைப்பில் அவை அகம்பாவமும் கர்வமும் கொண்டுவிட்டது போல் இருக்கிறது. துணிச்சலும் உயிரோட்டமும் நிறைந்த ஒரு கனவு அங்கே பிறப்பதற்கு சாத்தியமே இல்லை” என்று எழுதி இருப்பார்.

காரணம் மனிதர்களிடையே இணக்கம் இல்லாத வாழ்க்கை முறை, இது முதலாளித்துவத்தின் வெற்றியாக கூட இருக்கலாம். அபார்ட்மெண்ட் குழந்தையும் முதலாளித்துவ நுகர்வு பிரச்சினையில் விழுங்கி EMI கட்டி போராடும் நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற என்ற குடும்பத்தின் வாழ்க்கை முறையையும் சிறுவனின் சுதந்திரதை பற்றியதும் தான் பறந்து போ கதை.

டோட்டோ சான் ஜன்னலில் சிறுமி, குட்டி இளவரசன், போன்ற சில பிரபலமான கதைகள் நமக்கு படம் பார்க்கும் போது வரலாம். அதை இயக்குனர் சில நேர்காணலில் கூட சொல்லி இருக்கிறார்.

படத்தில் நடித்த எல்லாரும் நன்றாக நடித்துள்ளார்கள், முக்கியமாக சிறுவர்கள் படத்தின் கூடுதல் பலம். படத்தில் அஞ்சலியும், அஞ்சலி கணவரும் சற்று கதையில் எதார்த்ததில் இருந்து விலகி இருப்பது போல தோன்றியது. ஆனால் உண்மையில் அஞ்சலியின் கணவர் நாவல்களில் வரும் கற்பனைவாதிகளாக (எதார்த்த உண்மையை பிரதிபலிக்காத) மனிதராக இருக்கிறார். ஆனால் அப்படி பட்ட மனிதர்கள் புரிதல் கொண்ட மனிதர்கள் தேவையும் கூட தான். யுவன் இசை இல்லாத ராம் படம் என்று சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை படத்தில் அனைத்து பாடல்களும் இசையும் படத்தை கதைமேல் வைத்து நகர்த்தி இருப்பதால் நன்றாக பொருந்தியே உள்ளது.

உண்மையில் பல இடங்களில் வாய் விட்டு சிரிக்கலாம், எதார்த்தமாக உள்ளது. ராம் எப்படி படம் எடுத்தாலும் பார்த்து விடுவோம் என்ற எண்ணம் கொண்ட எனக்கு பிடிச்சு இருக்கு, ஏன் என்றால் இது ராம் அண்ணா படம் அவ்வளவு தான். படம் முழுக்க வரும் landscape காட்சிகள் எல்லாம் அட்டகாசம், அன்புவின் பயணம் நீண்ட சாலையும், உயரமான மலைகளும், நீர் நிறைந்த குளங்களும் பறந்து விரிந்த உலகமும் பறந்த போக நினைக்கிறான். நகரத்தில் வாழும் அப்பாவின் வீட்டை விட கிராமங்களில் இருக்கும் அம்மாவின் (தத்தா பாட்டி) வீடுகள் பிடித்துவிடுவதும் பறந்து போ என்ற காரணம் தான்.

இறுதியாக டெட்சுகோ குரோயநாகி (ஜன்னலில் ஒரு சிறுமி) 📚புத்தகத்தில் எழுதியிருக்கும் சில வரிகள் “ஏற்கெனவே முடிவு செய்த வார்ப்புகளில் குழந்தைகளைப் பொருத்தாதீர்கள். இயற்கையாகவே அவர்களை வளர விடுங்கள். அவர்களின் ஆவல்களை அடக்காதீர்கள். கற்பனைகளை நொறுக்காதீர்கள். அவர்களின் கனவுகள் உங்களுடையவையை விடப் பெரியவையாகக்கூட இருக்கலாம்”

அன்புடன்
நவீன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *