இந்தியாவின் மிகப்பழங்காலத்தை ஆய்வுசெய்வதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்டகுழு அறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் விமர்சனங்களை ஈர்த்துவருகிறது: அந்தக்குழு பின்பற்றப் போவதாகக் தோன்றும் நிகழ்ச்சிநிரல் பற்றிய சந்தேகங்களை அவர்கள் எழுப்புகிறார்கள்.
முன்னர் 2014 அக்டோபரில் பிரதமர் நரேந்திர மோடி கணேஷாவின் (விநாயகரின்) (பிளாஸ்டிக்) நெகிழி அறுவை சிகிச்சை பற்றிய அவரது (இ)புகழ்பெற்ற குறிப்புரையைக் கூறினார்: “ நாம் அனைவரும் மகாபாரதத்தில் கர்ணனைப் பற்றிப் படித்திருக்கிறோம் நாம் இன்னும் கொஞ்சம் அதிகமாகச் சிந்திப்போமானால், கர்ணன் அவனது தாயின் வயிற்றிலிருந்து பிறக்கவில்லை என்று மகாபாரதம் கூறுவதை உணர்ந்திருப்போம். இதன் பொருள் அந்தக்காலத்திலேயே மரபணு அறிவியல் இருந்திருக்கிறது என்பதுதான். அதனால்தான் கர்ணனால் அவனது தாயின் வயிற்றுக்கு வெளியே இருந்து பிறந்திருக்க முடிந்தது. நாம் பிரபுகணேஷா (விநாயகர்)வை. வழிபடுகிறோம். அந்தக்காலத்தில் அங்கே ஒரு நெகிழி(பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சை நிபுணர் கட்டாயம் இருந்திருக்கவேண்டும், அவர் ஒரு யானையின் தலையை மனித உடலின்மீது பெற்றார்: நெகிழி (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சையைத் துவக்கினார்.” மோடி இதை மும்பையில் ஒரு மருத்துவர்கள் கூட்டத்தில் கூறினார். அப்போதிலிருந்து வரலாற்றுக்கும், புராணக்கதைகளுக்கும் இடையே இருந்த வேறுபட்ட தனித்தன்மை மங்கியது: மேலும் வரலாற்றைத் திருத்தி எழுதுவதற்கு அடிக்கடி முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.
இப்போது பழங்கால இந்தியக் கலாச்சாரத்தை ஆய்வுசெய்வதற்கு ஒரு குழு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது வரலாற்றுக்கும், தொல்பொருள் ஆராய்ச்சிக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளை மங்கச்செய்துவிடும்.: அது வரலாற்றை ஆய்வு செய்யும் பணியைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்துள்ளது.பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான ஒருபதிலில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை துணை அமைச்சர் பிரகலாத் படேல். ’12,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்றுவரையான இந்தியக் கலாச்சாரத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றியும், உலகின் மற்ற கலாச்சாரங்களோடு அதன் உள்ளார்ந்த தொடர்புகள் பற்றியும் ஒரு முழுமையான ஆய்வை நடத்த 16 உறுப்பினர்கள் கொண்ட ஒருகுழு அமைக்கப்பட்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். அந்தக்குழு கே.என்.தீக்ஷித் -தலைவர். இந்தியத் தொல்பொருள் ஆய்வுக்கழகம். புதுடெல்லி, மற்றும் முன்னாள் இணை இயக்குநர், இந்தியத் தொல்பொருள் அளவைக்கழகம், ஆர்.எஸ். பிஷ்ட் – இந்தியத் தொல்பொருள் அளவைக்கழக முன்னாள் இணை இயக்குநர் ஜெனரல், பி.ஆர் மணி – தேசிய அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநர் ஜெனரல்,டெல்லி, சந்தோஷ் சுக்லா – ஜவஹர்லால் பல்கலைக்கழக சமஸ்கிருத ஆய்வுமையம், பி.என்.சாஸ்திரி- ராஷ்ட்ரீய சான்ஸ்கிரிட் சன்ஸ்தான் துணை வேந்தர், எம்.ஆர்.சர்மா – உலக பிராமணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ் குமார் பாண்டே – லால் பகதூர் சாஸ்திரி ராஷ்ட்ரீய சன்ஸ்கிரிட் வித்யா பீட துணைவேந்தர் அகியோரைக் கொண்டுள்ளது.
திராவிடக் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவதைக் குறிக்கும்வகையில், அங்கே தென்னிந்தியாவிலிருந்து எந்தவொரு பிரதிநிதித்துவமும் இல்லை. அங்கே அந்தக்குழுவில் எந்த ஒரு பெண்ணும் இல்லை. முஸ்லீம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள் போன்ற சிறுபான்மை சமூகத்திலிருந்தும்கூட எந்த ஒரு பிரதிநிதியும் இல்லை.அந்தக்குழு குற்றம்சாட்டப்படுவதைப்போல,பன்மைத்துவம் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றைத் திறம்பட ஒதுக்கிவிட்டு, ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்ற ஆளும் தரப்பின் கண்ணோட்டத்தை முன்னெடுத்துச்செல்கிறது.
புகழ்பெற்ற அரசியல் அறிவியலாளர் நீரா சந்தோக்கின் நூல் ‘பன்மைத்து வத்தைத் திருத்தி எழுதுதல்’ மிகவும் வசீகரமாக இந்தியாவின் பகிர்ந்து கொள்ளப்பட்ட கலாச்சார சமுதாயப்பண்பின் அடிப்படைக்கூறுகள் பற்றிப் பேசுகிறது : ‘ இவை அனைத்தும் கலாச்சாரம் என்பதை அரசு எவ்வாறு பொருள்கொள்கிறது என்பதைச் சார்ந்தே உள்ளது. இந்தக்குழு இந்தியக் கலாச்சாரத்தை ஆய்வு செய்யவா? அல்லது இந்துக்கலாச்சாரத்தை ஆய்வுசெய்யவா, அமைக்கப்பட்டுள்ளது?. மேலும் வரலாற்றை ஆய்வுசெய்யும் முறையான ஆதாரச்சான்றுகள் இல்லாத நபர்களைக்கொண்டு – புகழ்பெற்ற கண்ணியமான வரலாற்று ஆய்வாளர்கள் குழுவில் இல்லாமல் இதைச்செய்வது இது ஒரு சிக்கலான செயல். இது மிகவும் ஆபத்தான முயற்சி. ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என்பது மிகவும் சர்வாதிகாரமான கருத்தாக்கம் ஆகும்.இந்தக்குழுவில் உள்ள மக்கள் அவ்வாறு இருக்க நாம் ஏன் அனுமதிக்க முடியாது? நாம் பல்வேறு கலாச்சார, பல்வேறு மதங்களைக்கொண்ட சமுதாயமாக உள்ளோம். ஒரு பெண்கூட இல்லாமல், தென்னிந்தியாவிலிருந்தோ அல்லது சிறுபான்மையினரிடமிருந்தோ ஒரு பிரதிநிதிகூட இல்லாமல். இது மிக அதிகமாக விவாதிக்கப்பட வேண்டிய செயல். இது மதச்சார்பின்மை சவப்பெட்டியின்மீதான இன்னொரு ஆணியாகக் காணப்படுகிறது.
தவிர்ப்புக்களைக் கூறுதல்
பேராசிரியர் ரொமிலாதாப்பர். ’அரசாலோ அல்லது எந்த ஒரு அதிகாரம் பெற்ற அமைப்பாலோ என்னிடம் இந்தக்குழுவைப்பற்றிக் கூறப்படவில்லை’ என்று கூறினார். அவர் மேலும், ‘அதைப்பற்றிய விவரங்கள்கூட எனக்குத் தெரியாது’ என்கிறார். புகழ்பெற்ற வரலாற்றாளர் டி.என்.ஜா கூட, இந்தக்குழுவைப்பற்றி,“பத்திரிக்கைச் செய்திகள் மூலம்” மட்டுமே அறிந்து கொண்டதாகக் கூறுகிறார். ‘இந்தக்குழுவில் உள்ளவர்கள் அவர்களுடைய சமச்சீரான கண்ணோட்டங்களுக்காக அறியப்பட்ட அறிஞர்களை அல்ல, ஆனால், இந்தியாவின் கடந்தகாலத்தைப்பற்றிய வலதுசாரிப் பிரிவின் கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களையே கொண்டிருக்கிறது. அவர்கள் இதுவரை இருந்திராத ‘இந்து இந்தியா’”வை பெருமைப்படுத்துவதில் விருப்பமுள்ளவர்களாக இருக்கிறார்கள்” என்பதை அவர் உற்றுநோக்குகிறார்,
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் குறிப்பிடத்தக்க வரலாற்று ஆய்வாளரான சையத் அலி நதீம் ரெஸாவி இந்தக்குழுவின் தேர்வையும் அதன் விவரங்களையும் கேள்விக்குள்ளாக்குகிறார். அவர் கூறுகிறார்: அந்தக்குழுவுக்கு ஆய்வு செய்வதற்காக அரசு நிர்ணயித்துள்ள காலகட்டம் அதனளவில் புதிரானது: சிக்கலானது. அந்தக் காலகட்டத்தில் நாம் உயிர் வாழ்ந்திருந்தோமா என்பதையே ஒருவர் அறிந்திருக்கமாட்டார்! வரலாற்று ஆய்வாளர்கள்கூட உறுதிப்படுத்த முடியாத காலத்தை அவர்கள் ஆய்வு செய்யப்போகிறார்கள்!

மேலும், அந்தக்குழு சந்தேகத்துக்குரிய சில பெயர்களைக் கொண்டிருக்கிறது. ஒரு தலித் அல்லது முஸ்லீமை மறந்துவிட்டது: வேறுவகையில் இந்தக்குழு புகழ்பெற்ற நற்பெயருடைய எந்த ஒரு அறிஞரையும் பெற்றிருக்கவில்லை. அவர்கள் அனைவரும் சர்ச்சைக்குரிய நபர்கள். அவர்கள் ஒருதரப்பான ஒருசார்பான அறிவைப் பெற்றிருப்பவர்கள்.பி.ஆர்.மணியோ அல்லது வேறு எந்த ஒருவராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டம் கொண்டவர்கள். அதனால்தான் அவர்கள் அந்தக்குழுவில் உள்ளார்கள். அது ஏதோ ஒன்றை ’எதிரொலிக்கும் அறை’யாக உள்ளது. வேறு எதுவும் இல்லை:”
ஏ.பி.வாஜ்பேயி அமைச்சரவையில் முரளி மனோகர் ஜோஷி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது,பாட நூல்களில் வரலாற்றைத் திருத்தி எழுதும் பணியை ஏற்றுக்கொண்டிருந்த பேராசிரியர் மக்கன்லால் அந்தக்குழுவில் சேர்க்கப்பட்டிருப்பதைப் பேராசிரியர் .ரெஸாவி கவனத்துக்குக் கொண்டுவருகிறார். ”(அந்தக்குழுவில்) தலித்துகள் இல்லை: சிறுபான்மையினர் இல்லை. பெரும்பாலும் தொல்பொருள் ஆய்வாளர்களே உள்ளார்கள். வரலாற்றாளர்கள் யார்? அவர்களுடைய தகுதிகள் என்ன? அங்கே பேராசிரியர் மக்கன் லால் இருக்கிறார்………அவர்தான்ஜோஷி அமைச்சராக இருந்தபோது .என்சிஇஆர்டி( கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி தேசியக்குழு)வின் பாட நூல்களைத் திருத்தி எழுத முயற்சி செய்த அறிவுலகமேதை!இதைவிட ஒருவரால் என்ன கூறமுடியும்!”
இந்தக்குழுவைப் பற்றியும், ஆளும்கட்சியின் கண்ணோட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உள்ள அதன் பாத்திரம் பற்றியும் பல கல்வியாளர்கள் குரல் கொடுத்துள்ளார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும்கூட கட்சி வேறுபாடு இல்லாமல் ஆட்சே[பணை செய்துள்ளார்கள் மேலும், குடியரசுத் தலைவரிடம் அந்தக்குழுவைக் கலைக்குமாறும் வேண்டியுள்ளார்கள். ஊடகச் செய்திகளின்படி, 32 பாராளுமன்ற உறுப்பினர்களும், பலரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அவரது தலையீட்டை எதிர்நோக்கியும், மத்திய அரசால் இந்தியாவின் கலாச்சார வரலாற்றை ஆய்வுசெய்ய அமைக்கப் பட்டுள்ள நிபுணர்கள் குழுவை, அதன் உறுப்பினர்கள் நாட்டின் பன்முக சமுதாயத்தைப் பிரதிபலிப்பவர்கள் அல்ல என்ற அடிப்படையில் கலைக்க ’அறிவுரை” வழங்குமாறும் எழுதியுள்ளார்கள். அதில் கையொப்பமிட்டவர்களில் ப,சிதம்பரம், கனிமொழி ஏ.எம்.ஆரிஃப், எஸ்.ஜோதி மணி . மற்றும் டி.சுமதி ஆகியோர் உள்ளார்கள்.
“ அந்த 16 உறுப்பினர் ஆய்வுக்குழுவில் அத்தகைய பன்முக சமுதாயத்தைப் பிரதிபலிப்பவர்கள் யாரும் இல்லை என்பதை தங்கள் அன்பான கவனத்துக்குக் கொண்டுவர நாங்கள் விரும்புகிறோம். அங்கே தென் இந்தியர்கள் இல்லை: வடகிழக்கு இந்தியர்கள் இல்லை.: தலித்துகள், பெண்கள் இல்லை. சொல்லப்பட்ட அந்தக்குழுவில் கிட்டத்தட்ட எல்லா உறுப்பினர்களும் குறிப்பிட்ட சிலசமூகக்குழுக்களைச் சார்ந்தவர்கள்: அவை இந்தியச் சமூகத்தின் சாதிய படிநிலையில் உச்சத்தில் உள்ளவை” என்று அந்தக்கடிதம் கூறியுள்ளது. அந்தக்கடிதம் மேலும் கூறியுள்ளது: “அந்தக்குழு புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டுள்ளதும், மத்திய அரசால் செம்மொழி என அங்கீகரிக்கப்பட்ட மொழியுமான தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளின் ஆராய்ச்சியாளர்கள் யாரையும் கொண்டிருக்கவில்லை.”
பெண்கள் அமைப்புக்கள் மற்றும் சிறுபான்மை அமைப்புக்களின் எதிர்வினைகள் ஊமையாக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், நாட்டின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கத் தவறிய அந்தக்குழுவைக் கலைத்துவிடுமாறு திராவிட அமைப்புக்களின் கூட்டமைப்பு கோரியுள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம், இந்தியச் சமூக ஜனநாயகக்கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட்) உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட அமைப்புக்கள், இந்தியக்கலாச்சாரத்தில் உயர் தன்மைக்கான போராட்டம் போட்டியற்ற தல்ல என்பதை உறுதிப்படுத்துவதற்கான இலட்சியத்துக்காக ‘திராவிட கலாச்சார கூட்டமைப்பு’ என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆளும் தரப்பின் சித்தாந்தத்துடன் இணைந்து சொந்தம் கொண்டாடும் அறிஞர்கள், ’ஆரியர்கள் இந்தியாவைத் தாய்நாடாகக் கொண்டவர்கள்: இதுவரை நம்பப்பட்டதுபோல மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் அல்ல’ என்று அடிக்கடி கூறிவருகிறார்கள். பேரா.தாபர் தனது ‘A History of India’ நூலில் எழுதுகிறார்: ‘ ஆரியன் என்பது உண்மையில் இந்தோ-ஐரோப்பிய மூலத்தோற்றம்கொண்ட ஒரு குழுவினரின் பேச்சைக் குறிக்கும் ஒரு பொழியியல் வார்த்தை. வரலாற்றுக்கு முந்தைய இந்திய மக்கள் மற்றும் கலாச்சாரத்துக்கு எதிரான பின்னணியில்தான் ஆரியமொழி பேசும் பழங்குடியினர் வட இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார்கள்.: இந்திய நாகரிகத்துக்கு தங்கள் பங்களிப்பைச் செய்தார்கள்”
ஜாமியா மிலியா இஸ்லாமியாவின் புகழ்மிக்க வரலாற்றாளர் ரிஸ்வான் கெய்ஸர், இந்தக்குழுவின் அமைப்புமுறை அரசின் தொகுதியை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் ஒரு மக்கள் தொடர்பு செயல்பாடாகும் என்கிறார். அவர் கூறினார்: ‘இது ஒரு பழைய விளையாட்டு ஆகும். அது பின்பற்றப்படுகிறது. அவர்கள் ராக்கிஹாரியில் கண்டுபிடிக்கப்பட்டவைகளுக்கு வித்தியாசமான பொருள் விளக்கத்தைத்தர விரும்புகிறார்கள். அக்பருக்கு ஒரு வித்தியாசமான பொருள்விளக்கம், தாஜ்மஹாலுக்கு என மற்ற பலவற்றுக்கும் அவர்கள் வித்தியாசமான பொருள் விளக்கங்களைத் தரவிரும்புகிறார்கள். இந்த வகையான வரலாறு ஒருபோதும் எந்த ஒரு குற்ற உணர்வையும் கொண்டிருக்காது. இத்தகைய ஒருகுழுவின் அறிக்கை வரலாற்றாளர்களின் மீளாய்வில் மீண்டெழ முடியாது. தங்கள் தொகுதியினருக்கு, ’இதோ பாருங்கள், வரலாற்றுத்தளத்திலும்கூட நாங்கள் தீவிரமானவற்றைச் செய்துகொண்டிருக்கிறோம்’ என்று சொல்வதற்காக இது அரசால் நடத்தப்படும் ஒரு மக்கள் தொடர்புப் பயிற்சி, மேலும் நீங்கள் பின்தொடர்வதற்கான ஆர்வமூட்டக்கூடியவை பலவும் வர உள்ளன. அந்தக்குழு எந்தவொரு குற்ற உணர்வையும் கொண்டிருப்பதாக நான் பார்க்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே தீவிர கவனம் செலுத்துபவர்களாக இருந்திருந்தால், அவர்கள் ஒரு வரலாற்றாளரை… தங்கள் வாழ்வையே வரலாற்று ஆய்வுக்காக அர்ப்பணித்துள்ள ஒன்று அல்லது இரண்டு வரலாற்று ஆய்வாளர்களைப் பெற்றிருப்பார்கள். ஆனால் அரசு ஒவ்வொன்றையும் ஒளி ஊடுருவமுடியாத இருளில் வைத்துக்கொண்டிருக்கிறது.: அது கொரோனா நோய்ப்பரவலுக்கு நடுவே ஒரு குழுவை அமைத்துள்ளது.
“ நாளை இந்த அறிக்கை வரும்போது, மக்கள் அதிர்ச்சி அடைவார்கள். இந்த அரசு நோய்ப்பரவலையோ அல்லது மக்களின் துயரங்களைப் பற்றியோ கவலைப்படவில்லை: தங்களைத்தவிர வேறு எவரையும் அவர்கள் மகிழ்ச்சிப்படுத்தப் போவதுமில்லை.”
நன்றி: ‘ஃப்ரண்ட் லைன் 2020 அக்டோபர் 23 இதழ்.
https://frontline.thehindu.com/the-nation/inventing-a-past/article32734799.ece

