பல நேரங்களில் வித்தியாசமாக நடந்துக் கொண்டான் பரிபாலன்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் பயந்து
போய் இருந்தனர்.
வேறு வேறு உடல்மொழிகளில் பல குரல்களில் பேசினான்.
தனியே யோசித்தபடியே இருந்தான். பார்வையில் ஒரு பதட்டம் இருந்தது.
தங்களின் மகனுக்கு பேய் பிடித்து விட்டது. இவனை எப்படி காப்பாற்ற போகிறோம்? என கவலையில் மாய்ந்தனர்.
முதலில் பேசி பார்ப்போம்.! என அம்மா
பரிபாலனிடம் வந்தார்.
குரூரமாக முகத்தை வைத்துக் கொண்டு
பேசிய பரிபாலனை பயத்துடன் பார்த்தார்.
அம்மா., இன்னைக்கு “சினிமா ஆடிஷன்”
இருக்கு. என்னை ஆசீர்வாதம் பண்ணுமானு காலில் விழுந்தான் பரிபாலன்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

