“மேயாத மான்” நாவல் ஒரு உணர்ச்சிப்பூர்வமான மற்றும் சிந்திக்க வைக்கும் சமூகக் கதையாகும். மனிதநேயமே மகத்தானது என்கிற எண்ணங்களை இந்தக்கதையில் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் கதையாசிரியர்.
இந்தக் கதை உடற்கல்வி ஆசிரியரான முருகேசனை மையமாகக் கொண்டு அமைகிறது. நேர்மை, ஒழுக்கம் மற்றும் அன்பு ஆகியப் பண்புகளால் சிறந்தவர் முருகேசன். மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை. மைதானத்தை கோவிலாகக் கருதி பராமரிப்பது, மாணவர்களுக்கு ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வுகளைக் கற்பிப்பது போன்ற நிகழ்வுகள் அவரது உயர்ந்த குணநலன்களை வெளிப்படுத்துகின்றன.
மேலும், வெளிநாட்டு விதைகளைத் தவிர்த்து உள்ளூர் மரங்களை வளர்க்க வேண்டும் என்ற அவரது சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை சமூக பொறுப்புணர்வை எடுத்துக்காட்டுகிறது. கால்பந்து போட்டிக்காக மாணவி சங்கமித்ராவைத் தேர்வு செய்து, அவளது தலைமையில் அணியை உருவாக்கிப் பயிற்சி அளிப்பதும், பெண்களுக்கு ஊக்கமளிக்கும் அவரது முன்னேற்றமான எண்ணங்களைக் காட்டுகிறது.
இந்தக் கதையில் சங்கமித்ராவின் தாய் சுமித்ராவின் பாத்திரமும் முக்கியமானதாகும். முருகேசன் தனது மகளுக்கு செய்த உதவிகளுக்காக நன்றி கூற வருகிற ஒரு எளிமையானத் தாயாக சுமித்ரா வர்ணிக்கப்படுகிறார். அவரது நன்றியுணர்வு மற்றும் மரியாதை உணர்ச்சி, மனித உறவுகளின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. பின்னர் முருகேசனின் உடல்நிலை பாதிப்பு குறித்து மருத்துவர்களின் உரையைக் கேட்டு சுமித்ரா அதிர்ச்சி அடையும் தருணம், கதையின் உணர்ச்சித் தீவிரத்தை மேலும் அதிகரிக்கிறது.
கதையின் இறுதியில் உருவாகும் இவ்வாறான மனதை உலுக்கும் தருணங்கள் வாசகர்களை ஆழமாக பாதிக்கின்றன. இது கதைக்கு நிஜத்தன்மையையும் உணர்ச்சி வளத்தையும் அளிக்கிறது. கதையோட்டத்தினுடே, பல்வேறு பொதுத்தகவல்கள், காதல், பணிவு, பரிவு போன்றவற்றை மிக அழகாக கதையாசிரியர் வெளிப்படுத்தி இருப்பது அருமை.
மொத்தத்தில், “மேயாத மான்” மனிதநேயம், நன்றியுணர்வு, ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் சிறந்த படைப்பாகும். இது வாசகர்களுக்கு வாழ்க்கைப் பாடங்களையும் நல்ல சிந்தனைகளையும் வழங்கும் அருமையான கதையம்சம் கொண்டது மேயாத மான் என்று சொன்னால் அது மிகையாகாது.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “மேயாத மான்” நாவல் |
| ஆசிரியர்: | முனைவர் கோதண்டராமன் |
| வெளியீடு: | மின்னங்காடி |
| விலை: | ₹.110 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 Dr. மீனா கிருஷ்ணமூர்த்தி |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

