கன்னட மொழிபெயர்ப்புக் கவிதை: டாக்டர் சித்தலிங்கய்யாவின் "என்னுடைய மக்கள்" கவிதை | தமிழில் : வசந்ததீபன் | Dr. Siddalingaiah’s Ennudaiya Makkal (My People) Poem in Tamil Translation | www.bookday.in

கன்னட மொழிபெயர்ப்புக் கவிதை: டாக்டர் சித்தலிங்கய்யாவின் “என்னுடைய மக்கள்” கவிதை | தமிழில் : வசந்ததீபன்

டாக்டர் சித்தலிங்கய்யாவின் “என்னுடைய மக்கள்” கவிதை

பசியால் சாகுபவர்கள் , கற்களை சுமப்பவர்கள்
அடிபடுபவர்கள் , அடிபட்டு _ அடிபட்டு விழுபவர்கள்
கை _ கால்களைக் கழுவுபவர்கள்
தலையின் மீது கை வைப்பவர்கள் ( ஆசீர்வாதம் பெறும் முத்திரையில்)
எப்படியோ இருக்கிறார்கள் பக்த சகோதரனே பார் என்னுடைய மக்கள்
வயலை உழுபவர்கள், விதை விதைப்பவர்கள், முற்றிய தானியங்களை அறுவடை செய்பவர்கள்
பெருமூச்சுடன் அமர்ந்திருப்பவர்கள்
வேர்வையைப் பெருக்கெடுக்க வைப்பவர்கள் , வெப்பத்தில் கொதிப்பவர்கள் என்னுடைய மக்கள்
வயிற்றை அறுத்துக் கொண்டு வாழ்பவர்கள் என்னுடைய மக்கள்
மாடி மேல் மாடி நிற்கச் செய்பவர்கள், பங்களா கட்டுபவர்கள்
அஸ்திவாரக் கற்களில் சிக்கிக் கொள்பவர்கள் என்னுடைய மக்கள்
தெருக்கள் _ தெருக்களாய் அலைபவர்கள், குரலற்றவர்கள்
உள்ளுக்குள்ளே அழுபவர்கள் என்னுடைய மக்கள்
எப்போதும் வட்டி தந்தபடி வாழ்பவர்கள்
சொற்பொழிவுகளின் நெருப்பில் எரிந்து சாம்பலாகுபவர்கள் என் மக்கள்
பரமாத்மாவின் பெயரைச் சொல்லி பலகாரங்கள் தின்பவர்களின்
பூட்ஸ் _ செருப்பை தைப்பவர்கள் என்னுடைய மக்கள்
தங்கத்தைத் தோண்டி எடுப்பவர்கள்
தானியங்களைப் பார்ப்பதற்கும் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள்
துணிகளை நெய்பவர்கள் , நிர்வாண உடலுடன் அலைபவர்கள்
எதைச் சொல்வார்களோ அதைச் செய்பவர்கள் என்னுடைய மக்கள்
காற்றின் மீது வாழ்பவர்கள் என்னுடைய மக்கள்.

**********************************************
டாக்டர் சித்தலிங்கய்யா

பிறப்பு : 3 பிப்ரவரி 1954 மான்சினபேல்லே, மைசூர் மாநிலம் (இன்றைய கர்நாடகா), இந்தியா
இறப்பு : 11 ஜூன் 2021 (வயது 67) பெங்களூர், இந்தியா
கல்வி: எம்.எஸ். மற்றும் பி.எம்.டீவில் கன்னடாவில் – பெங்களூர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் :
ஹோலிமடிகரா ஹாடு, சாவிரரு நதிகுலு மற்றும் மெரவனிகே குறிப்பிடத்தக்கது
பெற்ற விருது : பத்ம ஸ்ரீ
இவர் கவிஞர், நாடக ஆசிரியர் மற்றும் தலித் ஆர்வலர், கன்னட மொழியில் எழுதுதல். கன்னட மொழியில் தலித்-பண்டய இயக்கத்தை தொடங்கி, தலித் எழுத்தின் வகையைத் தொடங்கி வைத்தார்.

**********************************************

📚 எழுதியவர் : 

✍🏻 கன்னடத்தில் : டாக்டர் சித்தலிங்கய்யா
ஹிந்தியில் : அஜய் குமார் சிங்
தமிழில் : வசந்ததீபன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *