டிராகனின் கண் – ஏற்காடு இளங்கோ
டிராகன் என்பது புராணக் கதைகள் மற்றும் கட்டுக்கதைகளில் காணப்படும் ஒரு விலங்கு ஆகும். டிராகனின் கண் (Dragon’s Eye) போன்ற ஒரு அமைப்பு இயற்கையாகவே ஓர் இடத்தில் காணப்படுகிறது. இது அமெரிக்காவின் அரிசோனா மற்றும் உட்டாவின் எல்லையில் அமைந்துள்ள ஒரு அற்புதமான இடமாகும். குறிப்பாக இது வெர்மிலியன் கிளிஃப்ஸ் (Vermilion Cliffs) என்னும் தேசிய நினைவுச் சின்னத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
அரிசோனாவில் உள்ள வெர்மிலியன் பாறைகள் ஒரு தேசிய நினைவுச் சின்னம் ஆகும். இது மைனர் எர்ட்ட்ரீயின் (Minor Erdtree) தெற்கே உள்ள பிராந்தியத்தின் மையப் பகுதியில் உள்ளது. இது ஜுராசிக் காலத்தில் இருந்து மெதுவாக ஏற்பட்ட அரிப்பின் விளைவாக இந்தப் பாறைகள் தோன்றின.
இது மணற்கல் துண்டாக்கப்பட்டு தனித்துவமான வடிவங்களாக விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இது வெள்ளை நிறத்துடன் பல்வேறு துண்டுகளாக, அலை அலையாக காணப்படுகின்றன. இது தலையனைகளை வரிசையாக அடுக்கி வைத்தது போன்ற நிலப்பரப்பைக் கொண்டுள்ளன. இதன் வெள்ளை பாக்கெட் பகுதிகள் (White Pocket Section ) இயற்கை அன்னையின் ஒரு சிறந்த வேலைப்பாடாக பார்க்கப்படுகிறது.
இது ஒரு புவியியல் அற்புதமாகும். வெள்ளை பாக்கெட்டின் ஓரிடத்தில் ஒரு குளம் போன்ற பகுதி அமைந்துள்ளது. இதில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இது மை குளம் (Inky Pool) போல் காட்சி தருகிறது. இந்த இடம்தான் டிராகனின் கண் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த திரவக் கண்ணாடியின் அடிப்பகுதி மர்மங்களை மறைப்பதாகவும் உள்ளது. இது பத்து ஆண்டுகளுக்கு முன்பு தான் கண்டுபிடிக்கப்பட்டது.
வெர்மிலியன் கிளிஃப்ஸ் பகுதியை ஆய்வுச் செய்து, புகைப்படம் எடுக்கும் நேஷனல் ஜியோகிராஃபிக் புகைப்படக் கலைஞர்களால் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த டிராகனின் கண் புகைப்படம் மிகவும் பிரபலமானது. இந்த இடத்துக்குச் செல்ல சாலை வசதி கிடையாது. எனவே பார்வையாளர்கள் நடந்து செல்கின்றனர். இந்த இடத்திற்கு வருபவர்கள், இந்தப் பகுதியின் அழகைக் கெடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
கட்டுரையாளர் :
– ஏற்காடு இளங்கோ
அறிவியல் எழுத்தாளர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.