டுஜக் டுஜக்
ஒரு அப்பாவின் டைரி
ஆசிரியர்.தேனி சுந்தர்
பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் 112
தோழர் தேனி சுந்தர் அவர்களுக்கு பேரன்புடன் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
தோழருடைய புத்தகங்களில் நான் படித்த இரண்டாவது புத்தகம் இது. குழந்தைகளின் மழலை பேச்சை நாம் எந்த அளவிற்கு தவறவிடுகிறோம் (கண்டுகொள்வதில்லை) என்பதை ஆசிரியர் இந்த புத்தகத்தின் மூலம் நமக்கு நினைவுபடுத்துகிறார். ஆழமாக நம்மை சிந்திக்க வைத்துள்ளார்.
குழந்தைகளுடைய கேள்விகள் எவ்வளவு பொருள் மிக்கது எவ்வளவு நம்மை சிந்திக்க வைக்கிறது ஆய்வுக்குரியது என்பதை புத்தகத்தில் உள்ள பல உரையாடல்களில் இருந்து நம்மால் கற்றுக் கொள்ள முடியும் குழந்தைகளிடமிருந்து ஆயிரம் ஆயிரம் கேள்விகள் முளைத்து கொண்டே இருக்கிறது. நாம் அதற்கு பதில் சொல்ல முடியாமல் இருக்கும் பொழுது ஏதாவது காரணத்தைக் கூறி அவர்களை உதாசீனப்படுத்திவிட்டு கடந்து விடுகிறோம். அது எவ்வளவு தவறானது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.
என் மகனுக்கு தற்பொழுது 12 வயது அவன் பிறந்ததிலிருந்து இதுவரை என்னவெல்லாம் எங்களிடம் பேசி இருக்கிறார் என்பதை திரும்பவும் நினைவு கூற வைத்துள்ளார் ஆசிரியர். நன்றி தோழர் 🙏 வீட்டில் குழந்தைகளின் உரையாடல்களை படித்ததும் வகுப்பறைக்குள்ளும் கலகலப்பான திருவிழாக்கள் வேண்டும் என்ற நம் கனவு மறுபடி துளிர்க்கிறது என்கிறார்.கல்வியாளர் ஐயா ச.மாடசாமி.
குழந்தை டார்வின் கேட்கிறான் நாங்க தான் உங்க லெவலுக்கு வரணுமா கொஞ்சம் கூட இறங்க மாட்டீங்களா என்றான். பெரியவர்கள் எப்போதும் குழந்தைகள் லெவலுக்கு இறங்கி வருவதில்லை என்பது சாட்டையடி கேள்வி.
பறவைகெள்லாம் கிளையை நம்பி உட்காருவதில்லை சிறகை நம்பி உட்காருகிறது
மனிதர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் சொல் தோழருடையது.
புத்தகம் வேணுமா….புத்தகம்
புத்தகம் வேணுமா….. புத்தகம் வீட்டுக்குள்ளேயே ஒரு புத்தக சந்தை…. அற்புதம் என் செல்ல அப்பத்தா செத்துப் போயிருச்சு….
என் தங்கை அப்பத்தா செத்துப் போயிருச்சே….
தன் இறப்பிற்கு முன்பே பேத்தியுடைய ஒப்பாரி குரலை கேட்டு மகிழ்ந்த அப்பத்தா…. உறவுகளில் மேன்மை🙏 புத்தகத்துடைய தலைப்பிற்கு என்ன அர்த்தம் என்று சிந்திக்க… புத்தகத்தின் 78 ஆம் பக்கத்தில் அதற்கான விளக்கம் தருகிறார் ஆசிரியர்
குடும்பமாக வட்டமாக உட்கார்ந்து சாப்பிடுவதில் குழந்தைகளுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கிறது…
குழந்தைகள் தரும் தண்டனைகள் வித்தியாசமானது தான், உடனடி மன்னிப்பு… இலவச இணைப்பாக இருக்கமான அணைப்பு…. பெற்றோர்களின் புரிதல சமாதானப்புறவாக செயல்படும் குழந்தை பாப்பா….
வெரி குட் என்ற ஒற்றை சொல்லுக்காக ஏங்கும் குழந்தைகள்…
இப்படி பல பல…… சிந்தனைகளை தூண்டும் உரையாடல்களை சொல்லிக்கொண்டே இருக்கலாம்…. டார்வினும் பாப்பாவும் அவ்வளவு கேள்விகள் கேட்டு இருக்கிறார்கள்.
குழந்தைகளின் பேச்சுகளுக்கும் கேள்விகளுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் திணறும் பள்ளிக்கூடங்களுடைய ரியாலிட்டி தெரியப்போகிறது என்ற கேள்வியோடு முடிக்கிறார் ஆசிரியர்.
நன்றி
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/dujak-dujak-oru-appavin-diary/