நூல்: டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி
ஆசிரியர்: தேனி சுந்தர்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 100
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com
வீடுகளுக்குள் இருக்கும் குழந்தைகளின் உலகத்தை கண்டுகொள்ளாத சூழலில் அவற்றை கவனித்து நமக்குக் கைகளில் தந்திருக்கிறார் எழுத்தாளர். தேனி சுந்தர் அவர்கள். உள்ளே படிக்கப் படிக்க சிறுவயதில் நான் செய்த குறும்புகள், வீம்புகள் எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது. மிக முக்கியமாக ஒரு சம்பவத்தை குழந்தைகள் சொல்கிற போது “நேத்து நாளைக்கு ” என்று படிக்கும் போது எவ்வளவு மகிழ்ச்சி பொங்கி வருகிறது. இரசிக்கக்கூடிய பிழைகள், திருத்த மனசு வராத வார்த்தைகள் எல்லாம் குழந்தைகளிடம் இருக்கிறது. அப்படி இருப்பது தானே குழந்தைமை.!
பெரும்பாலும் சிறுகதைகளில் நம்மை குழந்தையின் உலகத்திற்கு அழைத்துச் சென்றவர் கு.அழகிரிசாமி அவர்கள். அதுவும் அன்பளிப்பு கதை முழுவதும் ஒரு வீட்டிற்குள் நடக்கிறது.. குழந்தைகளின் களேபரங்களை மிக சிறப்பாக காட்டியிருப்பார். நம்மைச் சுற்றிலும் குழந்தைகள் விளையாடுவது போன்ற ஒரு உணர்வினை அதில் இருக்கும். அந்த உணர்வினை நான் டுஜக் டுஜக் படிக்கும் போது உணர முடிந்தது.
“ஒனக்கு தெரியுமா பாப்பா
நீ இந்த வயித்துல தான் இருந்த? ”
“அப்ப அண்ணன் அப்பா வயித்துல இருந்தானா?”
என்ன ஒரு தர்க்கமான கேள்வி பெண் வயித்துல இருந்து பொன்னு வந்தா. அப்ப ஆம்பளை வயித்துல இருந்து தான பையன் வரனும். உண்மையாவே அப்டி ஒரு சம்பவம் நடந்தா இந்த ஆம்பளைங்க ஆணவம் கொஞ்சமாச்சும் குறையுமில்ல. சூப்பர் கேள்வி பாப்பா.
அப்பா திண்டுக்கல் மீட்டிங் போனத தெரிஞ்சுக “எப்ப வருவாருனு கேட்குற கேள்வி அப்பா மேல இருக்க பாசத்தையும் அப்புறம் அவரு லேட்டாவே வரட்டும்னு சொல்றதுல ” வந்தா அத எழுதுனியா இத எழுதினியானு கேட்பாருனு அதுக்குள்ள நான் தூங்கிருவேனு” சொல்லும் போது அப்பாவை பிடிக்கும் ஆனா வாத்தியார் அப்பாவை தான் பிடிக்குறதுல்ல என்பதை புரிய வைக்கிறாப்ல நம்ம டார்வின் தம்பி.
“தீவாளிக்கு சீனி வேட்டு போடுற மாதிரி உப்பு வேட்டு போடுவமாப்பா?”
புலல்[புகழ்] பாப்பா கேள்வி கரெக்ட்டு தான சீனி இருந்தா உப்பு இருக்கனும்ல நம்மை அறியாமல் சிரிப்பு வருது.
“அம்மா..
நீ எனக்கு தான அம்மா..
என் பக்கம் திரும்பிக்க..
என் மேல மட்டும் கை போடு..
எனக்கு மட்டும்
தட்டிக் குடி னு சொல்லி “ அண்ணன வெறுப்பேத்துறது எவ்வளவு அழகு.. அப்புறம் “அண்ணன் பக்கம் திரும்புமா னு விட்டுக் கொடுக்குறதும் எவ்வளவு அழகு!” குழந்தைகளின் உணர்வுகளை குறிப்புகளாக நமக்கு இந்த டுஜக் டுஜக் கொடுக்குது. அவசியம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம் .
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

