நீ
பொய் விற்க வந்தவன்போல்
தெரியவில்லை.
உன்னிடம்
பழைய பொய்கள் ஏதுமில்லை.
புதிது புதிதாகத்தான்
ஒவ்வொருமுறையும்
இறக்குமதி செய்கிறாய்.
ஒவ்வொரு பொய்யிலும்
ஏதோ ஒரு போதையை
ஒளித்துத் தருகிறாய்.
போதை தெளிந்தபின்தான்
பொய் என்கிற உண்மை புரிகிறது.
ஆனாலும்
அடுத்த பொய்க்கு
ஆவலாகக் காத்திருக்கிறது
அடி மனது.
அடுத்தமுறை வரும்போது
மறக்காமல் கொண்டுவா
பைநிறைய
பொய்..
—————————-
துரை வசந்தராசன்
—————————-
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


போதையால் பொய்யும் உண்மையாகும்….
அருமை அய்யா 🌹