சர்வதேசக் கதை மலர் 10 என்ற எண் கொண்டு எட்டணா வைத் தாங்கி 1940களில் வந்த புத்தகம் இது .இது ஒரு பழைய நூலகத்திலிருந்து ஏலத்தின் வழியாக நான் பெற்றேன் அதில் வேறு எந்த பதிப்பித்தத் தகவல்களும் இல்லை .ஆனால் நூலகர் கையொப்பமிட்டு இருக்கிறார் 21 .4 48 என்று அதாவது 1948ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி அப்போது இந்த புத்தகம் அதற்கு முன் வந்ததா என்ன என்று எனக்கு தெரியவில்லை . இதை எழுதியவர் ஹிரண் மய கோஷால் என்பவர், இதைத் தமிழில் மொழிபெயர்த்தவர் த. நா குமாரசுவாமி, என்பவர் .திருவல்லிக்கேணியில் ஜோதி நிலையம் என்ற பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது அச்சுக்கூடத்தின் பெயர்கூட கபீர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது சர்வதேச கதை மலர் 10 என்று எண்ணிட்டு இது முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது.
நூலாசிரியர் குறித்து ..
டாக்டர் ஹிரண்ய கோஷால் இவர் நமது இந்திய நாட்டை சேர்ந்தவர் ,போலந்தில் வார்செள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்திருக்கிறார். கல்கத்தாவில் 1908 ஆம் ஆண்டு பிஏ படித்து முடித்து ,மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றிருக்கிறார். போலந்து பெண்மணியை மனைவியாகப் பெற்றுள்ளார். செஹோவைப் பற்றி ஒரு ஆராய்ச்சி நூல் எழுதி இருக்கின்றார். அதற்கு வார்செள கழகத்தார் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளனர் .
நூல் பற்றி ….
இது பிறநாட்டு வாழ்க்கைச் சித்திரத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட மூலக்கதை. பிரச்சினைகள் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன.காடுகளை அழிப்பதும் மரங்களை வெட்டுவதும் அங்குள்ள வனத்துறையின் பணியாக இருக்கின்றது. ஆனால் வனத்திலேயே வாழ்ந்த மனிதர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை அவர்களில் துர்லக் என்ற கதாபாத்திரமான ஒருவன் , வனத்துறைக்கு அதிகாரியாக வரும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு முறையும் குடும்பத்துடன் அழிக்கும் நிலையில், புதிதாக ஒரு குடும்பம் வனத்துறை அதிகாரியாக வருகிறது .
அவர்களுக்கும் துர்லக் என்ற கதாபாத்திரத்திற்கும் இடையேயான போராட்டம்தான் இந்த கதை. நாம் இங்கு கவனிக்கவேண்டியது அங்குள்ள இயற்கை சூழல், மரங்களின் நிறைய வகைகள் , செகோஸ்லாவேகியா வினுடைய மொழி, அங்கு வாழும் மக்கள் உணவு , மரங்களின் பெயர்கள் இப்படி பலவாறு புதியதாக கொடுக்கப்பட்டுள்ளது .
செக்கோஸ்லாவேக்கியா மக்கள் போராட்டம்
மேலும் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வந்த புத்தகமாக இருப்பதால் , இன்றைய தமிழ்ச் சொற்களைப் போல் பெரும்பாலும் இல்லாமல் வித்தியாசமான சொற்கள் இடம்பெற்றுள்ளன.
சில இடங்களில் செக்கோஸ்லாவேக்கியா மொழியின் சொற்கள் இடம் பெற்றுள்ளன. மற்றபடி வனத்துறை அதிகாரி உள்ளிட்ட அவரது குடும்பம், பணியாள், பயணி, துர்லக் அனைவரும் பொதுவாக மனிதரின் மன இயல்புகள் உடன் சித்தரிக்கப்பட்டுள்ளனர் .
– உமா
தோழர் உமாவுக்கு சிறப்பு வாழ்த்துகள்….
மிகப் பழைய நூலை இப்படி சுவாரசியமான குறிப்புகளோடு வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துவது பாராட்டுக்குரியது.
த நா குமாரசுவாமி அவர்கள் பன்மொழி அறிந்திருந்தவர் என்று நினைவு. அற்புதமான மனித நேயர். நெருக்கடி நிலை இந்தியாவில் இருந்த காலத்தில் என நினைக்கிறேன், வந்தே மாதரம் நூற்றாண்டு விழா ஒன்று நடைபெற்றது. ஆனந்த மடம் எனும் நூலுக்கான விழாவும் அது. கல்லூரி மாணவரான நான் அதில் ஒரு கவிதை வாசித்தேன், படி இறங்கி வருகையில், முன் வரிசையில் அமர்ந்திருந்த த நா கு அவர்கள் எழுந்து என்னருகே வந்து என்னைக் கட்டியணைத்து மிகுந்த வாஞ்சையோடு,’ நிறைய மொழிகள் கத்துக்கோ, நிறைய எழுது… ‘ என்று வாழ்த்தினார்.
ஒரு நூலைத் தொடும்போது அதன் படைப்பாளிகள் நம் உள்ளத்தைத் தொட வேண்டும் என்று விரும்பி வாசிக்கிறோம். பழைய நூலாக இருந்து விட்டால், நமது கரங்கள் பின்னோக்கிப் போய் அவர்களைத் தொட்ட உணர்ச்சி ஏற்பட்டு விடுகிறது சமயங்களில்…..
வாழ்த்துகள் தோழர்
எஸ் வி வேணுகோபாலன்
9445259691