Duruvan Magan book review by Thachinamoorthi

அமர் மித்ராவின் “துருவன் மகன்”

 

துருவன் மகன் – சொல்வனம் | இதழ் 310|14 ஜன 2023
ஆசிரியர் : அமர் மித்ரா

அவந்தி நாட்டின் 2000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தவற்றை நம் கண் முன் கதைக்களமாக அமைத்துள்ளார். அவந்தி நாட்டின் தலைநகர் உஜ்ஜயினி அழகை பற்றியும், கம்பீரா என்ற கிராமத்தின் அழகையும் அக்கிராமத்திலிருந்து போருக்குச் சென்ற தன் மகன் கார்த்திக் குமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஊர் திரும்பாததும் அவன் மனைவி ரேகா, புதல்வி கந்தவதியோடு காத்திருப்பதும் தான் பாதுகாத்து வளர்த்த தன் நண்பன் துருவனின் மகனும் அவர்களை விட்டு சென்றதும், அரசவையில் பணிபுரியும் உத்தபன் தன் பேத்தி கந்தவதியை அபகரிக்க துடிப்பதும் சிவநாதரை மிகவும் வேதனைக்கு உள்ளாக்குகிறது. தன்மகன் கார்த்திக் குமார் குறித்தும் துருவன் மகன் குறித்தும் விசாரிப்பதற்காக ஆசாரியர் விருசபானுவை சந்திக்கச் செல்கின்றார் அங்கே அவரது சீடன் தசார்ன தேசத்து இளைஞன் தாமிரதுவஜனை சந்திக்கின்றார். அவன் கார்த்திக் குமார் குறித்தும் துருவன் மகன் குறித்தும், விண்மீன்களை வைத்து கணித்துக் கூறுவதற்காக கம்பீராவிற்கு செல்கின்றான், பிறகு குடும்பத்தில் ஒருவனாக மாறி விடுகிறான். கதையின் நாயகன் கதைக்களத்தில் இல்லாமல் மற்றவர்களின் அறிமுகத்தின் மூலமாகவே நம்மை அறிய செய்யும் விதம் மேலும் வாசிக்கத்தூண்டுகிறது.

அன்றைய காலகட்டத்தில் கோவில்களில் வாழும் தேவதாசிகளின் வாழ்வையும் அவர்கள் பொதுவாழ்வில் வாழ்வதற்கான ஏக்கங்களையும் , லலிதா, சுபத்ராவின் மூலம் உணர முடிகிறது. கோவில்கள் புனிதங்கள் என்று கற்பிக்கப்படும் சூழலில் அங்கு பிரதான புரோகிதர் கடவுளின் பெயரால் சூழ்ச்சிகளும், வஞ்சகங்களும் திட்டமிடப்படும் இடமாக இருப்பதை நாவலில் காண முடியும். அவந்தி நாட்டில் தேவதாசிகளின் நிலையும், அவர்கள் எவ்வாறு தேவதாசிகளாக உருவாக்கப்படுகின்றார்கள், அவர்களின் வாழ்நிலையும் சொல்லியுள்ளார்.நாட்டில் நிலவும் பஞ்சத்திற்கு அரசருக்கு குழந்தையின்மை தான் காரணம் என்று பரப்புவதும், சூத்திரர்கள் குடிசையை தீயிட்டு கொளுத்தி, அது கடவுளின் சன்னதியில் தேவதாசியே மன்னர் கற்பழித்ததன் விளைவாக தான் என்று சொல்லி ஆட்சி மாற்றத்தை நடத்துவதற்கு பிரதான புரோகிதர், சேனாதிபதி, வணிகர் சுபக்தத்தர் திட்டமிடுகின்றனர். நல்வாய்ப்பாக வணிகர் சுபக்தத்தரின் தேரோட்டி தான் தீ வைத்தான் என்பதை அவர்கள் பார்த்து விடுகின்றனர், மகாகாலரின் கோபத்தால் தான் என்று அவர்களால் பரப்ப முடியவில்லை அவர்கள் தப்பித்துக் கொள்ள தேரோட்டியை சூத்திரர்கள் பகுதியில் வைத்து தீயிட்டு கொளுத்துகின்றனர். அரசாட்சியை கைப்பற்ற கணிகை தேவதத்தையை கொலை செய்து அக்கொலையை மன்னரின் பேரில் போட்டு அதை பரப்புவது, அதை சந்தேகிப்பவர்களை கொலை செய்வது. மக்கள் வாழ்வதற்கு நீர் இன்றியமையாதது அதற்கு மழை முக்கியம்.

அவந்தி நாட்டில் துருவன் மகன் சென்றதிலிருந்து மழை இல்லை மழைக்காக மக்கள் ஒவ்வொரு நபரும் ஏங்குவதும். நாவல் முழுவதும் துருவன் மகனும் மழையும் மழைக்காக வான் நட்சத்திரங்களின் நிலைகளும் பயணிக்கின்றது. காலமுகி என்ற கிராமத்து மக்களுக்கு, தான் அவந்தி நாட்டின் பிரஜைகள் என்றும் தமக்கு அரசர் இருக்கிறார் என்பதையும் தாமிரதுவஜன் மூலம் அறிகின்றனர், அவர்கள் மழைக்காக ஆண் மயிலையும், பெண் மயிலையும் பழியிடுகிறார்கள் அவர்கள்.

அவந்தி நாட்டின் கடவுள் மகாகாலர் மட்டும்தான் என்று சொல்லும்போது அப்படி ஒரு கடவுள் இருப்பது தெரியாது என்கின்றனர் நமது இன்றைய தற்கொலை செய்து கொண்ட கடவுளை நம் எல்லோருக்குமானவராக மாற்ற முயற்சிப்பது நினைவுக்கு வந்தது. மழைக்காக மன்னர் பத்ருஹரி ஏங்குவதும் மற்றவர்கள் மதிக்கும் பண்பும் மனைவி தன்னுடைய இளைய சகோதரன் விக்ரமணிடம் ஆசை கொண்ட பின்பும் அவளிடம் அவர் கடைபிடிக்கும் ஒழுங்கை அருமையாக கூறியுள்ளார். மழையில்லாதால் சூத்திரர்கள் அவந்தி நாட்டை விட்டு செல்ல முயற்சி செய்கின்றனர் அங்கு கிழவன் பராசுரன் அவர்களை தடுத்து நிறுத்தி ஏரியை தோண்ட செய்கின்றான் தண்ணீர் கிடைக்கின்றது ஆனால் தண்ணீரை அவர்களால் பயன்படுத்த இயலவில்லை சூத்திரர்கள் என்பதால் மழை இல்லாததால் அவர்கள் குடியிருப்பில் யாரும் கர்ப்பம் தரிக்கவில்லை குழந்தைகள் பிறக்கவில்லை மழை பெய்தால் தான் அவந்தி நாட்டில் அவர்கள் தங்குவார்கள் ஆகவே மழை வேண்டும் சூத்திரர் பராசுரன் கிழவன் தவம் இருக்கின்றான் சூத்திரனுக்கு தவமிருக்கும் உரிமை இல்லை அங்கு மன்னனாக ராமன் இல்லை, பத்ருஹரி இருக்கின்றான் அதனால் அவன் தலை வெட்டப்படாமல் தவம்மிருக்கின்றார். தசரதேசத்து இளைஞன் தாமிரதுவஜனும், கந்தவதியும் கூடுகின்றனர், துருவன் மகன் மன்னனுக்கு காளிதாசரின் மேக சந்தோஷத்தை படிக்கின்றான், கந்தவதியின் கண்களில் இருந்து விண்மீன்கள் மறைகின்றன மேகங்கள் இடித்துக் கொள்கின்றது…..

நாவலில் விண்மீன்கள் நட்சத்திரங்கள் நதிகள், ஏரிகள் முத்துக்கள் என்று அனைத்தும் நம் கண்முன்னே பறந்து விறிகின்றது. மொழிபெயர்ப்பு அருமையாக உள்ளது வாசிப்பில் சளிப்பூட்டாமல் அவந்தி தேசத்திற்கு நம்மையும் அழைத்துச் செல்கின்றனர் மழை வேண்டி…..

                நூலின்  தகவல்

நூல்                : “துருவன் மகன்”

ஆசிரியர்    : அமர் மித்ரா

தமிழில்        : பானுமதி

வெளியீடு  : சாகித்திய அகாதமி

பக்கங்கள்  :  944

 விலை         : ரூ.550 

                  எழுதியவர் 

"துருவன் மகன்"
                இ.க.தட்சிணாமூர்த்தி




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *