குறையும் கூரையும் – ஏ. ஆகாஷ்குறையும் கூரையும்
————————————-
குறைகள்
இருந்த வீடு
எங்கள் கூரை வீடு

குறைகள்
பல இருந்தன – ஆனால்
அது குறைகளாக
தெரியவில்லை…

கூரைகள் பலமுறை
பிய்ந்தன – ஆனால்
அது பாரமாகத்
தெரியவில்லை…

மழையில்
கூரை ஒழுகியது-ஆனால்
அப்படி வாழ்ந்தே
எங்களுக்குப் பழகியது..

நீட்டிப் படுப்பதற்கு
இடமில்லை
ஆனாலும் தூக்கம்
என்பதற்குத் தடையில்லை…

மின் விளக்கில்லை
படிப்பதற்கு…
தடையில்லை அது
நாங்கள் படிப்பதற்கு..

காலை பசியை
போக்கும் கஞ்சி
உணவேதும் உண்டோ
இவ்வுணவை மிஞ்சி…

வீடெங்கும்
சாணம் மெழுகி

இருக்கும்-எங்களை விட்டு
நோயெல்லாம்
விலகியிருக்கும்…

வீட்டுக் கவலை
ஏதுமில்லை-நாங்கள்
கூட்டுக்குடும்பமாய்
வாழ்ந்ததினால்..

குறைகளில் இருந்தாலும்
கூரைகளில் இருந்தோம்
மகிழ்வுடன் – இன்று

மெத்தை வீட்டில்
அமர்ந்துகொண்டு
நினைத்துப்பார்க்கிறேன்
அந்த நாள்
வாழ்க்கையை…

ஏ. ஆகாஷ்
கடுக்கலூர்