E. Akash Writes a Poetry Unakkul Oruthi (Women Inside of You) in Tamil. Book Day Website is Branch Of Bharathi Puthakalayam.

‘உனக்குள் ஒருத்தி’ – ஏ. ஆகாஷ்



‘உனக்குள் ஒருத்தி’
……………………………….

பசியின்மை
படுத்தும் தூக்கமில்லை
பித்துபிடித்தது-இப்
பிறவி மறந்தது

இருமுறை குளித்தல்
இருதய குமுறல்
நடைகளில் மாற்றம்-புது
உடைகளில் தோற்றம்

வாயிருந்தும் பேசமுடியாதவன்
கண்ணிருந்தும் பார்க்கமுடியாதவன்
காதிருந்தும் கேட்கமுடியாதவன்
உயிரிருந்தும் சடலம்
உன் நினைவில் படலம்

புதிதாய் ஆன கண்ணாடி
காலியாகும் வாசனை திரவியங்கள்
கவிதை என்ற பெயரில் கிறுக்கல்
குடித்தவன் போல சறுக்கல்

பகல் இரவு மறத்தல்
தனிமை கொடுக்கும் இன்பம்
கூட்டத்திலும் தனிமை இதயம்
அழகானதாய் ஒரு திருப்தி

அத்தனையும் சொல்லி கேலி
செய்கிறான் என் நண்பன்
அவனிடம் சொன்னேன் நான்
வந்தால் தான் டா தெரியும்
“உனக்குள் ஒருத்தி”

ஏ. ஆகாஷ்
கடுக்கலூர்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *