தோழர்  ஈ.வெ.ரா – வே .மீனாட்சிசுந்தரம்

 

 ஒருவரை  தோழர் என்று அழைப்பதற்கு அவர் கம்யூனிஸ்ட்டாக இருக்க வேண்டிய அவசிமில்லை. பெரியாரை  தோழர் என்று அழைப்பதற்கு காரணம் எது ? அவரிடம் தோழமைக்கு  எடுத்துக்காட்டான ஆளுமை அவரிடமிருப்பதால் அவரைத் தந்தை என்பதைவிட  தோழர்  என்று  அழைக்கவே  விரும்புகிறேன் 

    அவரோடு உடன்படாத கருத்துக்கள் எனக்குண்டு  அவரது ஆளுமை முன்னால் நான் ஒரு தூசு. அவரிடமிருந்த  தீவிரம், துணிச்சல், உறுதி, எளிமையாக மனிதர்களை அணுகியமுறை, பூடகமற்றதன்மை.. பெரிய தத்துவ சொல்லாடல்களின்றி பாமரனின் மொழியில் உண்மைகளை அறியவைக்கும் ஆற்றல், பதவியையும் புகழையும் தேடி அலையாத மனப்பாங்கு, அதாவது ஒரு கம்யூனிஸ்ட்டிற்கான  குணங்களை எவ்வாறு பெற்றார் என்பதை விளக்குவதே எனது எழுத்தின் நோக்கமாகும்

  1904 ஆம் ஆண்டு .வெ ராமசாமிக்கு அப்போது வயது 25  ,இனி வீடு திரும்புவதில்லை  என்ற முடிவோடு காசிக்குச் செல்கிறார். அன்னதான சத்திரங்களில் உண்டு  சாமியாராக வாழ்வதென முடிவு செய்கிறார்ஆனால் காசியில் நடந்த ஒரு நிகழ்வு அவரின் எதிர்கால  போராட்ட வாழ்விற்கு  வித்திட்டது.

அங்குதான் பசியின் கொடுமையை உணர்கிறார். பசி ஒரு விநோதமான வேதனைஒருவனை உடனடியாக பசியாற எதையும் செய்யத்தூண்டும், அதே பசி  சிந்திக்கவும் வைக்கும். காசியில் அன்னதான சத்திரங்கள் பல உண்டு, அச்சத்திரங்களில் பிராமணர் அல்லாதோருக்கு  உணவு கிடையாது. பிராமணர் அல்லாதார் நடத்தும் சத்திரங்களிலும் இதே நிலைதான். இதனை அறியாது பிராமணரல்லாதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் ஓரு அன்னச்சத்திரத்திற்கு சென்றார்,  இவர் பிரமணராக இல்லை என்பதால் உணவு வழங்க மறுத்தனர். இருப்பினும் பசியின்கொடுமை தாளாமல்  பூணூல்  அணிந்து உள்ளே நுழைய முயன்றார்,ஆனால் அவரது மீசை காட்டி கொடுத்து விட்டதால் விரட்டி அடிக்கப்பட்டார். எச்சல் இலையிலிருந்த உணவை உண்டு பசியாறினார்அந்த பசியே  பார்ப்பனீய ஆதிக்கம், அதை ஏற்கும் பார்பானல்லாதவர்களின் அடிமைபுத்தி ஆகிய  இரண்டையும்  பெரியார் உணர்ந்தார்

  அதோடு குண்டைவிட பசி உறுதியாகவும் குறிதவறாமலும் கொல்லும் என்ற உண்மையும் தெரிந்தது.(“Hunger kills  better and surer than a Bullet”) .  எனவே ஒரு மனிதன் பசியால் சாவதைவிட போராடுவது மேல் என்ற  போராட்ட உணர்வு அவரைப் பற்றிக் கொண்டது. பசியால் பெரியாருக்கு ஏற்பட்ட சமூக விழிப்புணர்வு  அவரை  ஊர் திரும்ப வைத்தது சமூக சேவையில் ஈடுபடவைத்தது அதன் விளைவாக நகராட்சி தலைவராகிறார்.

பெரியார் எதிர்ப்பாளர்களின் கருத்தும்; உண்மையும்... | periyar e v ramasamy 141th birthday | nakkheeran

 இருந்தும் பசியால் வந்த அறிவுக்கூர்மை அவரைத்  தூங்க  விடவில்லை. பிரிட்டீஷ் அரசின் சூழ்ச்சியால் பார்ப்பனிய வர்ணாஸ்ரம தர்மம் அதிகார வட்டத்தில் ஆட்டம் போடுவதை அவரால் சகித்துக்கொள்ள  முடியவில்லை. பிரிட்டீப்ஷ் அரசே பார்ப்பனியத்தை வளர்க்கிறது என்று உணர்கிறார். விடுதலை மற்றும் பார்ப்பனியப் பண்பாட்டை எதிர்ப்பது என்றால் அது அரசியல் இயக்கத்தால்தான் முடியும் என்று கருதுகிறார் .வெறும் சமூக சீர்திருத்தமாக இயங்கலாம் என்று கருதியிருந்தால்  1919ல் காங்கிரஸ் தொண்டனாக மாறுவதற்கு  நகராட்சி தலைவைர் பதவியை துறந்திருக்கமாட்டார்., அதற்குப் பதிலாக அன்று சமூக சீர்திருத்த இயக்கம் ஒன்றில் சேர்ந்திருப்பார்    19ம் நூற்றாண்டிலேயே  மத மறுப்புசாதி மறுப்பு இயக்கங்கள்   நாடெங்கிலும் இருந்தன. சென்னை லவுகிக சங்கம்  (1878- 1888)  அதில் ஒன்றாகும்

       அவை அறிவியல்  கண்டுபிடிப்புகளை  பிரச்சாரம்செய்தன, டார்வின் கோட்பாட்டை விளக்கி  பிரம்மன்  படைப்பு என்ற பொய்மையை வெளிச்சம் போட்டு காட்டினஅதோடு பிற மதங்கள் பரப்பும் மூட நம்பிக்கைகளையும்  கண்டித்து எழுதின , தியாசிபிக்கல் தத்துவத்தோடு  கருத்துப்போர் நடத்தின. பெரியாருக்கு முன்னரே  பார்ப்பனியத்தை எதிர்த்து பாரதியின் குரல்  ஓங்கி ஒலித்தது . பார்பனிய சூதுவாதை எதிர்க்கும் இயக்கத்தை மக்கள் இயக்கமாக்கியவர்  பெரியாரே.

 பதவிகளை பெறுவதற்காகவே அரசியல் கட்சியில் சேருகிற பண்பாடு உள்ள காலத்தில் ஒருவர் பதவியை துறந்து போராட்ட களத்தில் குதிக்கிறார் என்பது கம்யூனிஸ்ட் குணமாகும் . அதிகாரியாக இருப்பதைவிட அரசியல் வாதியானால் எல்லா வகையிலும் உயரலாம் என்று பதவி துறப்பவர்கள் இன்றும் உண்டு. மக்களின் மதிப்பை பெற்ற நகராட்சி தலைவர் பதவியை துறந்து ஒருவர் காங்கிரஸ் தொண்டனாகிறார் என்பது அந்த பதவி, புகழ் பெறும் ஆசையின் அடையாளமல்ல. சேவை மனப்பாங்கின் அடையாளமாகும்

  காங்கிரஸ் இயக்கம்  நாத்திக கருத்திற்கோ  சாதிமறுப்பிற்கோ சமத்துவத்திற்கோ  பார்ப்பணிய நடைமுறைகளை ஒழித்து கட்டுவதற்கோ  உடன்படவில்லை  என்ற அனுபவம் ஏற்பட்டவுடன்  அதிலிருந்து வெளியேறி ஜஸ்டிஸ் கட்சியில் சேர்கிறார்

 மெட்ராஸ் ராஜதானியின் நிர்வாக கவுன்சிலில்  சர், சி ,பி ராமசாமி ஐயரை சட்ட  உறுப்பினராக பிரிட்டீஷ் அரசு நியமித்தது, அதனை கண்டித்து இவர்  கொண்டு வந்த தீர்மானத்தை ஜஸ்டிஸ் கட்சி நிராகரிக்கவே, அதிலிருந்தும் வெளியேறுகிறார்.

  ராமநாதன் என்பவர் துவங்கிய பிராமண எதிர்ப்பு  சுயமரியாதை இயக்கத்தை பெரியார் கையிலெடுத்தார்,சிங்காரவேலர், ஜீவானந்தம்  ஆகிய இருவரும் பங்களிக்க சுயமரியாதை இயக்கம் சோசலிசத்தை இலக்காக கொண்ட  இயக்கமாக மலரத் தொடங்கியதுசுயமரியாதை இயக்கதின்  உயிர்மூச்சாக    பெரியார் இருந்தார்

 52 வயதில் ஒரு கம்யூனிஸ்ட் இளைஞனைப் போல் பிரிட்டீஷ் அரசின் கண்ணில் மண்ணை தூவி, ஐரோப்பிய பயணம்  என்ற பெயரில் சோவியத்திற்கு சென்று திரும்பியதற்கு மிகுந்த துணிச்சல் வேண்டும். இது பற்றி திராவிட இயக்க வரலாற்றை எழுதும் வெங்கடாசலபதி செப்டம்பர 18 . 2017 தேதியிட்ட ஆங்கில இந்துவில் , “பிரிட்டீஷ் உளவுத்துறையின் குறிப்பை வைத்து “தளபதி ,பெரியாரை ஆபத்தானவர் என்று கண்காணிக்க பிரிட்டீஷ் அரசு முடிவு செய்ததை குறிப்பிடுகிறார்”.

 சோவியத் சென்று திரும்பிய பின் பெரியார் . சாதிமறுப்பு விதவைத் திருமணங்கள் ஆகியவற்றை  இயக்கமாக்குகிறார், புராணங்களை மறுவாசிப்பிற்கு  உட்படுத்தி மக்களை சிந்திக்க வைக்கிறார். இராமாயணத்தின்  கேலிக் கூத்தை  சிந்திக்க வைக்கும்  இயக்கம் பரவுகிறது.. பெரியார் கம்பனை இழிவுபடுத்தவில்லை ராமாயனத்தில் புதைந்து கிடக்கும் புழுகு மூட்டைகளை அம்பலப்படுத்தினார்.  பெரியாரின் மத எதிர்ப்பு  மேலை நாட்டு நாத்திகமல்ல இயக்கவியல் அறிவியலோடு அமைந்திருந்தது .

Periyar's letter in contemporary situation : Writer Marudhan

அண்ணாவின் நாத்திகம் மேலை நாட்டு இங்கர்சால் பணியாகும். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திற்கும்  அண்ணாதுரைபெரியார் இணைந்து உருவாக்கிய பகுத்தறிவு இயக்கத்திற்கும் உள்ள வேறுபாட்டை வரலாறு காட்டுகிறது. பகுத்தறிவு இப்பொழுது துதிபாடும் அரசியலுக்கு சேவை செய்கிறது

    குடிஅரசுபுரட்சி,சமதர்மம் போன்ற இதழ்களும் , வெடிகுண்டு என்ற புனைப் பெயர் எழுத்துக்களும்,கபடமற்றமேடைபேச்சுக்களும், சொற்பொழிவுகளும்  பிரிட்டீஷ் அரசை தூக்கி எறி  என்ற தலையங்கமும், பிரிட்டீஷ் அரசின் கவனத்தை ஈர்த்தது.

 பெரியார் காங்கிரஸ் கட்சியிலிருக்கும் தீவிர வாதிகள் போல் பூர்ண சுதந்திரத்திற்கு மனுப் போடும் ரகமல்ல மக்களை புரட்சி செய்ய தூண்டுகிற ரகம் என்று கணித்தது

அதன்வினைவாக 9மாத  சிறைத்தண்டனையும் 3000 ஆயிரம் ரூபாய் அபராதமும்  பரிசாக அரசு கொடுத்தது.

 சுயமரியாதை அமைப்பு இயங்க இயலாத நிலையில்தான் அவர் பகுத்தறிவு அமைப்பை அண்ணாவோடு இணைந்து உருவாக்குகிறார். கம்யூனிச உணர்வுடன் உருவான சுயமறியாதைக் கருத்தின்  தாக்கம் நீடிக்கவே செய்கிறது பகுத்தறிவு இயக்கம் பிசுபிசுத்து நிற்கிறது..அதற்கு இரண்டு நிகழ்வுகளை சான்றாக காட்டலாம்

1956ல் காங்கிரஸ் ஆட்சியின் போது இராமாயன கதாபாத்திரமான ராமன் பொம்மை எரிப்பை மெரினாவில் நடத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

 1979 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு சென்னை பல்  கலை கழக  துணைவேந்தராக இருந்த நெ..து. சுந்தரவடிவேலுவை .வெ.ரா வாழ்க்கை வரலாற்றை சிறுவர்களுக்காக எழுதப்பணித்தது.பாடமாக இடம் பெறும் வகையில்  அவரும் எழுதித்தந்தார்  அவை எக்காரணம் கொண்டோ வெளிவரவில்லை. பாடமாகவும் ஆகவில்லை.

Debate: Periyar Offered No Real Solutions to the Caste Evils He Was Fighting

  காம்ரேட் ஈ.வெ. ராவின் தனித்துவம் 

 19ம் நூற்றாண்டில் பிறந்து 20 நூற்றாண்டில் வாழ்ந்து இன்றும் உலக நாடுகளின் அறிவுலகத்தின் கவனத்தை ஈர்த்துவரும் சமூக அறிவியல் சிந்தனையாளர்களை  வயது அடிப்படையில் வரிசை படுத்தினால்

  காந்தி (1869),  லெனின்( 1870), பெரியார் (1879), ஹோசிமின் (1890), மாசேதுங்(1893),  அம்பேத்கர் (1891)

அறிவியலை விதைத்து உலகம் போற்றுபவர்களாக மேலைநாடுகளின்  விஞ்ஞானிகள் இருப்பதுபோல், மேலே கண்டவர்கள் மானுட மனங்களின் மிருக உந்துதல்களுக்கு  பலியகாமல்   மனிதாபிமான  உணர்வுகளை மேம்படுத்தும் சமூக அறிவியலை மக்கள் பங்கேற்கும் இயக்கமாக்கினர்எனவேதான்  மேலை நாட்டு அறிவுலகமும் இவர்களை பாராட்டுகிறது.  

மேலை நாட்டவர்கள் மத நம்பிக்கைகளோடு போராடி அறிவியலை வளர்த்து நாகரீக வாழ்க்கைக்கு வித்திட்டாலும்  மனிதனை மனிதன்  யுத்தங்களாலும், ஆக்கிரமிப்பாலும்  கொன்று குவிக்கவே அறிவியலை திருப்பிவிட்டனர்

இந்த சமூக சிந்தனையாளர்களே சுரண்டலுக்கும், சொத்துக்குவிக்கும் பேராசைக்கும்,முடிவுகட்டும் வழிகளை அவரவர் தத்துவ கண்ணோட்டத்திற்கு ஏற்ப முன் மொழிந்து மக்களை திரட்டினர். மானுடம் கூட்டுணர்வை பெற பயிற்சி அளித்தனர்  மேற்கண்ட ஆறு சிந்தனையாளர்களில் .வெ. ரா ஒருவர்தான் யாருடைய தயவுமில்லாமல் உலக முழுவதும் உள்ள அறிவுலகத்தின் கவணத்தை கம்யூனிச கருத்தால் ஈர்த்தவர் மற்ற மேதைகள் ஒரு அமைப்பின் ஆசானாக இருந்ததால் உலகமறிந்தது.

 சுயமரியாதை இயக்கத்தை பெரியார் ஒதுக்கி பகுத்தறிவு இயக்கத்தை வளர்த்தார் பகுத்தறிவியக்கமோ அவரை கைகழுவிவிட்டது. பாடபுத்தகத்தில் அவர் இடம் பெற தகுதி இருந்தும் “பகுத்தறிவு” சனாதன அரசியலின் அடிமை ஆகிவிட்டது.

இப்பொழுது கூறுங்கள் தந்தை பெரியரா?  தோழர்  பெரியாரா?   தோழர் .வெ.ரா எது அவரது ஆளுமைக்கு பொருந்தும்       

உரக்கச் சொல்லுவேன் தோழர் பெரியார் !, தோழர் பெரியார்!