கைவிடப்பட்டதா கிழக்கு மலைத்தொடர்..? (Eastern Ghats Abandoned) - முனைவர். பா. ராம் மனோகர் | மலை பகுதியில் மக்கள்

கைவிடப்பட்டதா கிழக்கு மலைத்தொடர் (Eastern Ghats)..? – முனைவர். பா. ராம் மனோகர்

கைவிடப்பட்டதா கிழக்கு மலைத்தொடர் (Eastern Ghats)..?

– முனைவர். பா. ராம் மனோகர்

இந்தியாவின் இயற்கை வளங்கள், பல்வேறு உயிரின பல்வகைமை கொண்டு சிறப்பான ஒன்று என்பதை நாம் அறிவோம். எனினும், ஒரு சில பகுதிகள், முழுமையாக ஆய்வு செய்யப்படாத நிலையில், அவற்றைப் பற்றிய தகவல்கள் அறியப்படாமல், இருப்பதும் உண்மை!. ஆம், அத்தகைய ஒரு பகுதி “கிழக்கு மலைத்தொடர்” (Eastern Ghats) ஆகும்.

நம் நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியில், கேம்பிரியரின் காலத்துக்கு முன் மிக தொன்மையானது ஆகும். மேலும், கிழக்கு மலைத்தொடர், ஆங்காங்கே, துண்டிக்கப்பட்டுள்ளது இமாலய மலை தொடர் மற்றும் நம் இந்திய மேற்குபகுதி மலைத் தொடர்களைவிட, மிகவும் பழமையான ஒன்று என, கருதப்படுகிறது. மகா யாத்ரிஸ் என்ற இந்த மலை, பூமியின் மேல் பகுதி உருவாக்க தருணங்களில், இந்த மலை தொடர் உருவாகியிருக்க வாய்ப்புகள் இருந்ததாக அனுமானித்து இருக்கின்றனர்.

இங்கு கொண்டாலைட், சார்கோலிட் என்ற பாறைகள் அதிகம் உள்ளன. இவை அதிக ஆழத்தில், உயர் வெப்பம், அழுத்தம் ஆகிய வற்றால் இங்குள்ள உரு மாற்ற பாறைகள் தோன்றியிருக்கலாம். இவை உருவாக பல மில்லியன் ஆண்டுகள் ஆகியிருக்க வாய்ப்புகள் நிறைய உள்ளன. கிழக்கு மலைத்தொடர் (Eastern Ghats) பகுதியில், கிராபைட், சலவைக்கல், மாங்கனீசு தாது, வைர கற்கள், ஆக்சிடைஸ்டு பொருட்கள் குவிந்துள்ள கிழக்கு மலை பகுதியில், அலுமினிய, பாக்சைடு தாது 70% ஆந்திர, ஒடிசா மாநிலங்களில் அதிகம் காணப்படுகிறது.

கைவிடப்பட்டதா கிழக்கு மலைத்தொடர்..? (Eastern Ghats Abandoned) - முனைவர். பா. ராம் மனோகர் | மலை பகுதியில் மக்கள்

எனவே இந்த இயற்கையான சுற்றுசூழல் மிகவும் பாதிக்கப்படும் நிலையும் உண்மை ஆகும். மேலும் கிழக்கு கடற்கரை சார்ந்து,கோதாவரி, மகா நதி, கிருஷ்ணா, மற்றும் காவேரி ஆகிய ஆண்டு தோறும் பாய்ந்து கொண்டுள்ள ஆறுகள் காணப்படுகின்றன. மேற்கண்ட ஆறுகள், அணைகள் கட்டமைப்பு, கழிவு மாசுபாடு ஆகியவற்றால் முன்னரே பாதிக்கப்பட்டு வரும் நிலை உள்ளது.

சமீபத்தில், கோதாவரி ஆற்றில், இந்திரா சாகர் திட்டம் என்ற போலா வரம் அணைக்கட்டு திட்டத்தின் காரணமாக, அதிக அளவில் மக்கள் வன பகுதி கிராமங்களிலிருந்து வெளியேற்றப்படக்கூடிய அவல நிலை ஏற்பட்டு மிகுந்த பிரச்சனைகள் வந்துள்ளது. குறிப்பாக 200 மலை கிராமங்களின், பழங்குடியினர், பாதிப்பதும், 4000 ஹெக்டர் காடுகள் மூழ்கிவிடும் நிலையும் தவிர்க்க இயலாது. நகர மயமாக்கம், காரணமாக,காடுகள் அழியும் நிலையில், இருக்கின்றன.

குறிப்பாக விசாகப் பட்டினம் நகரம் விரிவடைந்து கொண்டு, கிழக்கு மலைத்தொடர் (Eastern Ghats) காடுகள் ஆக்கிரமிப்பு, அழிப்பு தொடர்கிறது. ஆங்காங்கே மக்கள், தன்னார்வ இயக்கங்கள் மூலம், இயற்கையினை காப்பாற்ற ஓரளவு எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் புலிகள் வசிக்கும் நல் கொண்டா காட்டில், யூரனியம் தாது சுரங்க திட்டம் முன்னெடுப்பு துவங்கி பின்னர் கைவிடப்பட்டது.

இதே போல், ஒடிசா ராய கடா பகுதியில், பழங்குடியினர் எதிர்ப்பு மூலம் (டோங்கோ ரிட், கோண்ட்ஸ்) அவர்களின் கலாசாரம், மதம், ஆன்மீக உரிமைகளின் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் ஆணைக்கிணங்க, வேதாந்த நிறுவனத்தின் பாக் சைடு தாது பிரிக்கும் திட்டம் நிறுத்தப்பட்டது. கிழக்கு மலை தொடர் காடுகளில், மரங்கள் குறைந்து, காடழிப்பு ஏற்பட்டு புதர் செடிகள் மண்டி, புல்தரையாக மாறுகிறது. பின்னர் மோனோ கல்ச்சர், செய்து, ரப்பர், காஃபி, தேக்கு பயிரிடப்படுகிறது.

மேலும் 60 க்குமேல் ஆக்கிரமிப்பு தாவர இனங்கள், லாண்டானா, பார்த்தீனியம், கருவேல மரம், ஆகாய தாமரை (EICCHORNIA) போன்ற களைத்l தாவரங்கள் காட்டின் உயிர்ப்பு நிலையினை சிதைத்து வருகிறது. பொதுவாக, கிழக்கு மலைத்தொடர் (Eastern Ghats) பகுதியில், இயற்கை சூழல், உயிரின வேற்றுமை, அங்கு நெடுங்காலம் வசிக்கின்ற பழங்குடி மக்கள் பற்றிய தரவுகள்,, தகவல்கள் பெற்றிட முறையாக ஆய்வுகள் இங்கு நடைபெறவில்லை. புலி, யானை, சிறுத்தை உட்பட 100 பாலூட்டி சிற்றினங்கள் மற்றும் 2600 சிற்றினங்களுக்கான பூக்கும் தாவரங்கள் இருப்பதாக தெரிகிறது.

செம்மரம், சந்தன மரம், மருத்துவ மூலிகை தாவரங்கள் காணப்படுகின்றன. மேலும் இங்கு சிறுதானியங்கள், காட்டு எள், துவரை, காராமணி, அரிசி, கத்தரி, கிழங்கு வகை,, இஞ்சி, மஞ்சள் போன்ற தாவரங்கள் பயிரிடப்படும் பகுதி உள்ளது. 60 குழுக்களை சேர்ந்த 5 மில்லியன் பழங்குடியினர் வசிக்கின்றனர். 1200 கோயில் காடுகள் பல்வேறு அரிய தாவரங்களின் பிறப்பிடமாக உள்ளது.

கைவிடப்பட்டதா கிழக்கு மலைத்தொடர்..? (Eastern Ghats Abandoned) - முனைவர். பா. ராம் மனோகர் | மலை பகுதியில் மக்கள்

இவை உண்மையில், மரபணு குழுக்களின் கருவூலமாக விளங்குகிறது எனில் ஐயம் இல்லை. ஒரிசா மாநிலத்தில் உள்ள கொராபுட், கால ஹந்தி மாவட்டங்களில் இவை காணப்படுகின்றன. தென்னிந்திய ஒடிசா, ஆந்திர, தெலுங்கானா, கர்நாடக, தமிழ் நாடு ஆகிய மாநிலங்கள்,ஒருங்கிணைந்து, கிழக்கு மலைத்தொடர் (Eastern Ghats) பற்றிய முழுமையாக ஆய்வு செய்ய, சிறப்பாக ஒரு திட்டம் மேற்கொள்ள வேண்டும். இங்கு காணப்படும், உயிரின வேற்றுமை மிகவும் முக்கியமானது.

அவற்றிலிருந்து கிடைக்கும், பலன்கள், குறிப்பிட்ட ஐந்து மாநிலங்களில் மலைப்பகுதியில் வசிக்கும் அனைத்து பிரிவினருக்கும் முறையாக கிடைக்க உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பன்னாட்டு உயிரின வேற்றுமை குறிக்கோளின் படி பழங்குடி மக்கள் பயன் அடைவது, அவர்களின் ஆர்வம், உழைப்பு மூலம் இயற்கை பாதுகாக்க இயலும், என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். கிழக்கு மலை தொடர் காடுகள் என்பது ஆங்காங்கே தூண்டிகப்பட்டு, கவனிக்க, கண்காணிக்க, கடினமாக இருப்பதும் ஒரு காரணம் ஆக இருக்கலாம்.

எனினும் அரசுகள், கொள்கையளவில் கிழக்கு மலைத்தொடர் (Eastern Ghats) இயற்கையின் அரிய தன்மை உணர்ந்து முடிவுகள் எடுத்து அவற்றை பாதுகாக்க உரிய திட்டங்களை எடுக்க வேண்டும். பல்கலைக்கழக ஆராய்ச்சி நிறுவனங்கள், அங்கு ஆய்வு செய்வது  பற்றிய சிந்தனை கொண்டு தமது கல்வி நிறுவன மாணவர்களுக்கு விழிப்புணர்வு தருவதும் அவசியம் ஆகும்.  சமீப காலமாக பெரும் தொழில் நிறுவனங்கள் நம் நாட்டில் இயற்கை வளங்களை ஆக்கிரமித்து அழித்து, பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டு வருவது நாம் அறிந்து வருகிறோம்.

ஆனால் அடிப்படை கட்டமைப்பு இயற்கை என்பது புரிந்து கொள்ளாமல் , சிதைப்பது, அங்கு வசிக்கும் பழங்குடி மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வரும் நிலை உணருவோமா!? இந்தியாவில் இமாலய பிரதேசம், மேற்கு தொடர்ச்சி மலை, வட கிழக்கு மலை பகுதி, அந்தமான் நிகோபார் தீவுகள், மற்றும் கிழக்கு மலைத்தொடர் (Eastern Ghats) ஆகிய ஐந்து இயற்கை பகுதிகளுமே உயிரின வேற்றுமை வளத்தில் சிறப்பு வாய்ந்தவை ஆகும். ஆனால் மற்ற நான்கு பகுதிகளை விட கிழக்கு மலைத்தொடர் பாதுகாப்புக்கு தரும் முக்கியத்துவம் குறைவு என்பது தெளிவாகிறது. இந்நிலையில் உரிய விழிப்புணர்வு, ஆய்வு, மக்கள்  பங்கேற்பு திட்டங்களை மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய அரசு இணைந்து மேற்கொள்ள முயற்சிகள் எடுப்பது நன்று!!!

கட்டுரை எழுதியவர்:-

முனைவர். பா. ராம் மனோகர்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *