நினைவஞ்சலி கட்டுரை: கல்விக் கலங்கரை விளக்கம் ச.சீ.இராசகோபாலன் (ச.சீ.ரா) – முனைவர் என்.மாதவன்

நினைவஞ்சலி கட்டுரை: கல்விக் கலங்கரை விளக்கம் ச.சீ.இராசகோபாலன் (ச.சீ.ரா) – முனைவர் என்.மாதவன்

கல்விக் கலங்கரை விளக்கம் ச.சீ.இராசகோபாலன் (ச.சீ.ரா)

தன்னைக் கல்வியாளர் என அழைக்கக்கூடாது என்று வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்த கல்வியாளர் முனைவர் சா.சீ ராஜகோபாலன் அவர்கள் காலமாகியுள்ளார். தனது வாழ்க்கையை தருமபுரி மாவட்டம் அந்தியூர் என்ற கிராமத்தில் ஆசிரியராக துவங்கியவர். பின்னாளில் மிகவும் இளைய வயதில் தலைமை ஆசிரியர் பொறுப்பேற்று தலைமை ஆசிரியர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். தொழிற்சங்க தலைவராகப் பல்வேறு உரிமைகளுக்கான போராட்டத்தை ஜாக்டீ அமைப்புடன் இணைந்து நடத்தியவர். தான் ஆசிரியராக வாழ்ந்த அனைத்துப் பகுதிகளிலும் முன்மாதிரி ஆசிரியராகத் திகழ்ந்தவர். மிகவும் இளைய வயதிலேயே அதாவது 24 வது வயதிலேயே தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றவர். இந்த அரிய எவ்வாறு வாய்ப்பு கிடைத்தது? என காரணம் என கேட்கப்பட்டபோது அவர் சொன்ன விளக்கம் அருமையானது. அவர் பணியில் சேரச் சென்ற நாள் பொதுப்புத்தியில் பொருத்தமான நாளாக இல்லாததாம். இதனால் அவருரடன் பணி ஆணை பெற்ற பலரும் அன்று பொறுப்பேற்கவில்லை.

ஆனால் அதனை மீறி தாம் பொறுப்பு எடுத்துக் கொண்டதால் கிடைத்த முன்னுரிமையால் 24 வயதிலேயே தலைமை ஆசிரியராக பதவியுயர்வு பெற்றதாகப் பகிர்வார். இவர் பாடங்களை நடத்துகையில் உரக்கச் சொல்லிப் பாடம் நடத்தும் பழக்கமுடையவர். இவ்வாறு குரல் உயர்த்தி பாடம் நடத்துவதை பார்த்த இவரது தலைமை ஆசிரியர்கள் ஏன் நீண்ட நாள் வாழ ஆசை இல்லையா ? ஏன் இப்படி தொண்டைத்தண்ணீர் வற்ற கத்தி பாடம் நடத்துகிறாய் என்று கேட்பார்களாம். மேலும் அவர் பணியாற்றிய காலங்களில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் மிகவும் அதிகமாக இருந்திருக்கிறது. அவ்வாறு தானே இருந்திருக்கும். அவ்வாறு பள்ளிக்கு வராத மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பள்ளிக்கு அனுப்ப வேண்டி உள்ளார்.

அதற்கு பெற்றோர்கள் இவன் பள்ளிக்கு வந்தால் எங்களது வீட்டு வேலைகளை செய்வது யார்? என்று கேட்டனராம் அதற்கு இவர் அவன் வீட்டு வேலைகளையும் செய்வான். பள்ளிக்கு வருவான் என்று உறுதி அளித்து பலரை பள்ளிக்கு மீள வரச் செய்துள்ளார். ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் விடுமுறை நாட்களில் மாணவர்களை அழைத்துக் கொண்டு களப்பயணம், சமூகப் பணி என பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். ஒருமுறை அவ்வாறு சாலை அமைக்கும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தாராம். அந்த நேரம் அந்த வழியாக மரியாதைக்குரிய துணை ஆட்சியர் அமரர் திரு ஐராவத மகாதேவன் அவர்கள் தமது பணி நிமித்தமாகக் கடந்துள்ளார்.

இவர்கள் பணியாற்றிய இடத்தைக் கடந்தபோது, என்ன ஒரே தூசி படலமாக இருக்கிறது என்று இறங்கி பார்த்துள்ளார். மாணவர்களோடு சாலை அமைக்கும் பணியில் ஆசிரியர் ஒருவர் ஈடுபடுவதை பார்த்து மகிழ்ந்துள்ளார். அந்த நேரம் அங்கிருந்த பொது மக்களைப் பார்த்து இவ்வாறு உழைக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு என்ன தரப் போகிறீர்கள்? என்று துணை ஆட்சியர் கேட்டுள்ளார். பொதுமக்கள் கையைப் பிசைந்து கொண்டு நின்றுள்ளனர். உடனடியாக பொதுமக்கள் அனைவரும் இணைந்து உப்புமா தயாரித்துப் பரிமாறியுள்ளனர்.

மூத்த கல்வியாளர் ச.சீ. ராசகோபாலன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

அந்த நாட்களில் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் சங்கங்கள் அவ்வளவாக வலுவடையவில்லை. சவுத் இந்தியன் டீச்சர்ஸ் அசோசியேஷன் என்ற ஒரே சங்கம் தான் இருந்திருக்கிறது. அந்த சங்கம் ஆசிரியர்களுக்கான இதழ் ஒன்றையும் நடத்தியுள்ளது. அனந்தபூரில் அந்த அமைப்பு நடத்திய மாநாட்டுக்கு சென்ற மாஸ்டர் ராமுண்ணி அவர்கள் தான் ஆரம்பப் பள்ளிக்கு என்று தனியான சங்கம் ஆரம்பித்தார் என்பது இவர் பகிர்ந்த கூடுதல் தகவல். இவற்றையெல்லாம் தனது நேர்காணல் ஒன்றில் அவர் பகிர்ந்து உள்ளார்

இவ்வாறு வாழ்நாள் முழுவதும் மாணவர்களோடும், தொழிற்சங்க வாதியாகவும் செலவழித்த அனுபவங்களின் அடிப்படையில் பின்னாட்களில் அரசு அமைத்த பல குழுக்களிலும் இவர் அங்கம் வகித்துள்ளார். முத்தாய்ப்பாக சமச்சீர் கல்விக்காக முன்னாள் துணைவேந்தர் அமரர் முத்துக்குமரன் குழுவில் அங்கம் வகித்து பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை அளித்த பெருமைக்குரியவர். கல்வி வணிகமயமாவது குறித்து வாழ்நாள் முழுவதும் கவலைப்பட்டவர், கல்வி உரிமைச் சட்டம் வந்தபோது அதனை வரவேற்ற போதிலும், அதிலிருந்த தனியாருக்கு சாதகமான அம்சங்களை சமரசம் இன்றி எதிர்த்தவர்.

தனது வாழ்நாளில் வாய்ப்புள்ள காலம் வரை பல்வேறு கல்வி அமைப்புகள், ஆசிரியர் சங்கங்கள் நடத்திய மாநாடுகளிலும் கருத்தரங்களிலும் தனது சொந்த செலவில் பயணித்து கருத்துரை ஆற்றிய பெருமைக்குரியவர். வயது மூப்பின் காரணமாக துணைவியாரை கடந்த ஆண்டு இழந்த இவர் இடதுசாரி நண்பர்கள் சிலருக்கு ஆதரவோடும் தனியார் இல்லத்தில் வசித்து வந்தார். தான் வாழ்ந்த பிறகும் தனது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கில் தனது உடலையும் தானமாக வழங்கிய காலமாகியுள்ளார் எஸ் எஸ் ராஜகோபாலன் என்ற ச,சீ ராஜகோபாலன் அவர்கள்.

தினமணி உள்ளிட்ட பல்வேறு முன்னணி பத்திரிகைகளிலும் தலையங்க கட்டுரைகளையும் வாசக கடிதங்களையும் படைத்து மகிழ்ந்தவர். தனக்கடுத்து கல்விகளத்தில் பணியாற்றும் பல முன்னணி கல்வி செயல்பாட்டாளர்களையும் பாராட்டி வழிநடத்த அவர் தயங்கியதே இல்லை. இக்கட்டுரையாளர் உட்பட பலரும் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுத அணுகினர். யாருக்கும் அவர் அனுமதி தந்ததாக தெரியவில்லை. அவர் அவரது ஆழமான கருத்துக்களாலும் வெளியிட்டுள்ள கல்விக்கொள்கைகளாலும் அவர் என்றும் கல்விக் கலங்கரை விளக்கமாக வாழ்வார்.

எழுதியவர்:

– முனைவர் என்.மாதவன்
76 மதூர் கிராமம் மற்றும் அஞ்சல்
வழி எலப்பாக்கம் – 603 201
செங்கற்பட்டு மாவட்டம்
thulirmadhavan@gmail.com

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *