கவிஞர் ஏகாதசி எழுதிய பத்தாயிரம் எறும்புகளும் ஒரே ஒரு நாற்காலியும் புத்தகம், பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன்-ல் வெளியிடப்பட்டது.

பத்தாயிரம் எறும்புகளும் ஒரே ஒரு நாற்காலியும் – நூல் அறிமுகம்

பத்தாயிரம் எறும்புகளும் ஒரே ஒரு நாற்காலியும் – இந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கு முன்னால் நண்பர் ஒருவர் அலைபேசியில் தொடர்பு கொண்டு என்னோடு பேசினார்.. பேசி முடித்ததும் செல்போன் வாட்ஸ் அப்பில் ஒரு தந்தையும் மகனுமாக உரையாடலைப் பார்த்தேன். மகன் தந்தை உரையாடல்….

அப்பா.. அப்பா…இங்க வாங்க.. நான் எழுதி இருப்பதை பாருங்கன்னு மகன் கூப்பிடுவான். அப்பா வீட்டுக்கு வெளியே வந்து பார்க்கிறார்… ஹேப்பி பொங்கல் என்று ஆங்கிலத்தில் எழுதியவன் கல் ஒன்றை வைத்து படிக்கச் சொல்கிறான்.. வர்ற வழியில் இவ்வளவு பெரிய கல்லு வெச்சா எப்படிடா அப்படின்னு அப்பா கேப்பாரு.. அது கல்லு இல்லப்பா பொங்கல் அப்படி என்று மகன் சொல்வான். பொங்கல் என்று ஆங்கிலத்தில் எழுதுவதற்கு பதிலாக கடைசி வார்த்தை பொ ங்கல் pon மட்டும் ஆங்கிலத்தில் எழுதி gal எழுதாமல் அந்த இடத்தில் கல் வைத்து விடுவான்.. இதான்பா..ஹேப்பி பொங்கல் என்று சொல்லுவான்.

அதேபோல அப்பாவைப் பார்த்து அப்பா அப்பா இன்று தான் மாட்டுப் பொங்கல் ஆயிற்றே, நீங்கள் இன்னும் குளிக்கவில்லையா புது ஆடை அணிய வேண்டியது தானே என்று கேட்பான். மாட்டுப் பொங்கலுக்கு எனக்கு எதுக்குடா என்று அப்பா கேட்பார். அப்பா அப்பா நீ தானே இந்த குடும்பத்துக்கு மாடா உழைக்கிறியே அதனால தான் இது உனக்கான பொங்கல் அப்பா என்பான் மகன்…

அடுத்ததா வருகிறபோது மகன் சொல்வான்… அப்பா… அப்பா…நானு டெஸ்ட்ல ஏ ப்ளஸ் வாங்கி விட்டேன் என்று சொல்வான்.. பையன்.. a+ வாங்கியதைக் கண்டு அப்பாவுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி… பள்ளிக்கூடத்திலேயே நீ மீடியமா தான் படிப்ப..ஆனாலும் கூட ஏ பிளஸ் வாங்கி இருக்கிற ரொம்ப மகிழ்ச்சி… இப்படியே படிச்சியனா, பின்னால நல்ல பெரிய வேலைக்குப் போகலாம் என்று அப்பா சொல்லுவார்.. பின்னர் அப்பா ஏதா அந்த டெஸ்ட் மார்க் கொடு என்று கேட்பார்.. பிளட் டெஸ்ட் பண்ணதுல எனக்கு பிளட் குரூப் ஏ ப்ளஸ் என்று சொல்லுவான்..! அப்பாவுக்கு ஒரே எரிச்சலும்.. வெறுப்புமாக இருக்கும்.. இப்படி பிள்ளைகளின் எகத்தாளமான, ஏகடியமான பேச்சு எல்லாம் கிண்டல்.. வெறுப்பு…என்றாலும் ஒரு பக்கம் சந்தோஷத்தையும் நம்முள் கண்டு கொண்டுதான் இருக்கிறது…
இந்த குதுகலங்களுக்கிடையில்…

பத்தாயிரம் எறும்புகளும் ஒரே ஒரு நாற்காலியும் எனும் சிறுவர்களுக்கான கதைகளை திரைப்பட இயக்குனர்,,கவிஞர்,கதாசிரியர்,பாடல் ஆசிரியர், நாவலாசிரியர்..என பன்முகத்தன்மை கொண்டவரும், தமுஎகச வின் மாநிலத் தலைவர்களில் ஒரு வருமான ஏகாதசி எழுதி புக் ஃபார் சில்ட்ரன் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலில் உள்ள எட்டு கதைகளும் எட்டு திசை நோக்கி சிறுவர்களை மட்டுமல்ல பெரியோர்களையும் சிந்திக்க வைக்கிறது….
ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள்,சுதா..சுகந்தி…இருவரும் நன்கு படிக்கும் மாணவிகள். ஆறு மாத காலமாக பேசாமல் வகுப்புக்கு வந்து படிக்கிறார்கள்…

கலகலப்போடு இருந்த வகுப்பறை சலசலப்பின்றி இருப்பதை ஆசிரியர் பால்ராஜ் அறிந்திட சமூகவியல் பாடம் நடத்தும் போது அவர்கள் இருவரை மட்டும் அழைத்து நிற்க வைக்கிறார். மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.அவர்களை மட்டும் ஏன் அழைத்தார் ஆசிரியர் என்று யோசித்தனர். பால்ராஜ் ஆசிரியர் சுதா சுகந்தியைப் பார்த்து நீங்கள் இருவரும் பேசிக் கொள்வது இல்லை யாமே? என்று கேட்க இருவரும் தலையசைத்தனர். உடனே ஆசிரியர் இருவரின் கைகளையும் மேசையில் வைக்க சொல்கிறார். ஒரு மாணவரை அழைத்து நூல் கொண்டு வரச் சொல்லி இருவரின் சுண்டு விரல்களையும் நூலால் கட்டி விட்டு, கிராமத்து வீதி வழியாக 300 மீட்டர் நடக்கச் சொல்லுகிறார். இருவரும் நடந்து முந் நூறு மீட்டர் சென்று திரும்பி வருகிறார்கள். திரும்பி வரும்போது இவர்களுடைய தொண்டைக் குழிக்குள்.. வார்த்தைகளும் பேச்சுகளும்… சிக்கித் திணறுகிறது.. ஒருவருக்கொருவர் பேச ஆரம்பித்து, ஏன்? எதற்காக? இப்படி பேசவில்லை என்பதை எல்லாம் விலாவாரியாக பேசி வகுப்பறைக்குள்ளே வந்து விட்டார்கள். இடையில் தங்களைப் பிரித்து வைத்த செல்வி குறித்தும் பேசிக் கொள்கிறார்கள். இனி யார் எதைச் சொன்னாலும் நாம் பேசாமல் இருக்கக் கூடாது என்று சூளுரையும் செய்கிறார்கள். தங்கள் விரல்களில் கட்டியி ருப்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை…

மாணவர்கள் எல்லாம் ஆச்சரியமாய்ப் பார்த்தனர். பால்ராஜ் ஆசிரியர்.. மாணவர்களைப் பார்த்து எதற்காக? என்று இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? என்று கேட்டார்.. மாணவர்கள் எல்லோரும் சந்தோஷமானார்கள்…. வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவர்கள் இப்படி பேசாமல் இருப்பது சரியானது அல்ல என்று வகுப்பாசிரியரே மாணவர்களை இணைத்து வைப்பதற்கு இப்படி எல்லாம் ஒரு புது விளையாட்டு காட்டுவது படிக்கும் ஆசிரியர்களுக்கு இது ஒரு பாடமாக அனுபவமாக அமையும். இது தோழிமார் கதைகள் சொல்லுகிற ஆசிரியர் மாணவர்களின் நட்புக்கான கதை….! இந்நூலுக்கு அணிந்துரை தந்துள்ள எழுத்தாளர் கமலாலயன் இந்நூல் ஆசிரியர் ஏகாதசி குறித்து தனது எழுத்தின் துவக்கத்திலேயே “ஆத்தா உன் சேலை… அந்த ஆகாயத்தைப் போல… என்ற பாடலைக் கேட்டு கண்கள் கலங்கி,மனம் நெகிழ்ந்து, போகாதவர் யார்? அதிலும், மறைந்த மேடை இசைக் கலைஞர் திருவுடையானின் குரலில் அதை கேட்கையில் கரையாத நெஞ்சமுண்டோ? கல் நெஞ்சம் கூட கரையும் இப்படிப்பட்ட பாடலை எழுதிய இயக்குனர் கவிஞர் ஏகாதசி எனும் அறிமுகத்தோடு சிறார் கதைகளில் மூன்று தொகுப்புகளை இப்போது அவர் எழுதி இருக்கிறார்.அவற்றுள் ஒன்றுதான் “பத்தாயிரம் எறும்புகளும் ஒரு நாற்காலியும் “என்ற நூல் எனும் குறிப்பையும் தருகிறார்.

ஒரு ரயில் பயணத்தின் போது தனது குழந்தையை ஹர்ஷினியின் ஜன்னலோர இருக்கைக்காக தாய் ஒரு 40 வயது மதிக்கத்தக்க ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருக்கும் அந்த இளைஞரிடம் கேட்டும் இருக்கை தராதவர், தாயின் பணிவு கண்டு பின் குழந்தைக்கு ஜன்னலோர இருக்கை தருவதும்… பயண அனுபவத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. இது “ஜன்னல் ஓர இருக்கை” கதையாகும்.

“முத்தப் பரிசு “கதையில் அப்பா அம்மாவை படம் வரைய வைத்து… மகிழும் பிள்ளைகளாக மதனும் அகிலாவும்,போட்டிக்கான பரிசாக முத்தத்தைப் பெற்றோர்களுக்குத் தந்து மகிழ்வதும்… குடும்ப உறவுக்கான பாச மகுடம் எனலாம்.

வேலை எதுவும் செய்யாமல் வெட்டியாக இருக்கும் மருதனுக்கு எறும்புகள் விளையாட்டு காட்டி… அவன் சோம்பலை முறித்து வேலைக்குச் சென்று வீட்டுக்குப் பல பொருள்கள் வாங்கி வந்ததோடு…மனைவி மகேஸ்வரியின் வீட்டு வேலையையும் உடன் பகிர்ந்து கொண்ட மருத னுக்குத் தாங்கள் ஒளித்து வைத்த நாற்காலியை பரிசாகத் தருகின்றன எறும்புகள்..

இப்படி “நட்சத்திர மிட்டாய்,” ” எறும்பின் ஓட்டப்பந்தயம்”.. “நிலாவும் கலாவும்”.. “ரப்பரைத் தேடும் மீன்” என சிறுவர்களுக்கான இந்தப் புத்தகம் வாழ்வியலோடு பள்ளிக்கூட வகுப்பறைப் பாடங்களின் இனிப்பையும் சொல்லித் தருகிறது.. ஆச்சரியங்களை அள்ளித்தரும் கதைகள் என்றும், சிறுவர் கதை எழுத புதிய பயணத்தைத் தொடங்கி இருக்கும் கவிஞர் ஏகாதசிக்கு எழுத்தாளர் உதயசங்கர் வாழ்த்துக்கள் தெரிவித்து தொடர்ந்து சிறுவர் கதைகள் எழுதிட உற்சாகப்படுத்தியுள்ளதும் சிறப்பு..

மேலும் பல சிறுவர் தொகுப்புகள் தந்து தமிழ் சிறுவர் சிறுகதை களுக்கான தளத்தில் சிறந்த இடம் பிடிக்க.. கவிஞர் இயக்குனர் ஏகாதசிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்…

நூலின் தகவல்கள் : 

நூல்: பத்தாயிரம் எறும்புகளும் ஒரே ஒரு நாற்காலியும்
ஆசிரியர்: ஏகாதசி
பதிப்பகம்: புக்ஸ் ஃபார் சில்ரன்
பக்கங்கள்: 48
விலை: ₹.50/-

எழுதியவர் : 

– ஆரிசன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *