ஏகாதசி எழுதிய 'வெள்ளை எருமை' சிறுகதை குறித்த விமர்சனம் | Ekadasi's Vellai Erumai Tamil Short Story | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

ஏகாதசி எழுதிய ‘வெள்ளை எருமை’ சிறுகதை குறித்த விமர்சனம்

‘வெள்ளை எருமை’ சிறுகதை – ஏகாதசி
(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில மாநாட்டு மலர்)

– இரா.இரமணன்

கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் ஏகாதசி அவர்கள் ‘வெள்ளை எருமை’ என்கிற சிறுகதையை எழுதியுள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் சரவணன் இரவு பகலாக வேலை செய்ய வேண்டியதிருக்கிறது. மனைவி மேசையில் கொண்டு வைத்தால்கூட சாப்பிட முடிவதில்லை. குழந்தையிடம் பேசக் கூட நேரமில்லை. மனைவி, தந்தைக்கும் அதே கதிதான். மேசையிலேயே தூங்கும் அவர் தன் வீட்டிற்குள் ஒரு வெள்ளை எருமை வருவதை பார்க்கிறார். அது மேசை மீது இருக்கும் உணவுகளை சாப்பிடுகிறது. அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் கோழிக்குஞ்சுகளையம் சாப்பிடுகிறது.

எருமை நான் வெஜ் சாப்பிடுமா என்று ஆச்சரியப்படுகிறார். “எங்கேடா உன் அப்பனும் மனைவியும் மகளும்?’ என்று கண்கள் சிவந்து கோபத்துடன் கத்திக்கொண்டு அவர்களின் அறை நோக்கி செல்கிறது. ‘என் குடும்பத்தை எதுவும் செஞ்சுடாதே பிளீஸ்….. என் குடும்பத்தை எதுவும் செஞ்சுடாதே பிளீஸ்’ என்று கெஞ்சுகிறார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அப்பாவும் மனைவியும் ஓடி வருகிறார்கள். மருத்துவரிடம் அவரை அழைத்து செல்கிறார்கள். மன அழுத்தம்தான் காரணம் என்கிறார் அவர். பிறகு சரவணன் கூடுதல் சம்பளம் கிடைக்கும் அந்த வேலையை விட்டுவிட்டு 8 மணி நேரம் வேலை உள்ள ஒரு நிறுவனத்தில் சேர்கிறார். குழந்தையுடன் விளையாடுகிறார். இனி அவரது கனவில் வெள்ளை எரும வராது என்று முடிக்கிறார்.

கதாசிரியர் வெள்ளை எருமை என்று குறிப்பிடுவது ஊழியர்களை இரவு பகலாக பிழிந்து எடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்று சொல்ல தேவையில்லை. அது ஊழியர்களின் உணவை மட்டுமல்ல, குடும்பத்தாரையும் தாக்குகிறது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களை பெருமையாக பார்ப்பது பலரின் மனப்பான்மை. அவர்களை பொறுத்தவரை அவை ‘வெள்ளை எருமை’ . அவை புல் வைக்கோல்,பருத்திக்கு கொட்டைதான் சாப்பிடும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியில் மனுஷனையும் கடிக்கும்’ என்று அவர்களுக்கு தெரிவதில்லை. ஐ டி ஊழியர்கள் அமைப்பாக திரண்டு இத்தகைய கொடுமைகளை எதிர்த்து போராடாத தொடங்கியிருக்கிற இந்தக் காலத்தில் இந்தக் கதை ஒரு பொருத்தமான கலைப் படைப்பு. படைப்பாளியின் சமூக பொறுப்பைக் காட்டும் நல்ல சித்திரம்.

ஒரே வீட்டில் இருக்கும் தன்னிடம் மகன் எதுவும் பேசுவதில்லை என்று ஆதங்கப்படும் மாமனாரிடம் மருமகள் ‘நீங்கள் உங்களை பற்றியே கவலைப்படுகிறீர்களா. அவர் நிலாவிடம்(மகளிடம்) கூட பேசுவதில்லை என்று மருமகள் கூறுவது ஒரு கூட்டுக் குடும்பத்தில் ஒவ்வொருவரும் மற்றவர்களது உணர்வுகளை எவ்வாறு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நயமாக காட்டுகிறது.

இரண்டு நெருடல்களை மட்டும் சுட்டிக் காட்ட வேண்டும். ஒன்று எருமையை தீய சக்திக்கு உவமையாக்கியது. சிந்து சமவெளி நாகரீகத்தில் முன்னிறுத்தப்பட்ட காளையை பின்னுக்கு தள்ளி பசுவை தெய்வமாக்கிய வேத நாகரீகம் மற்றும் எருமையை எமனுக்கு வாகனமாக்கியதை குறித்தும் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, ஆசிரியர் வெள்ளை எருமை என்று தலைப்பிடாமல் வெள்ளைப்பசு என்றே அல்லது வேறு ஏதாவது தலைப்பு கொடுத்திருக்கலாம்.

இரண்டாவது இரவு பகல் வேலை வாங்கும் நிறுவனத்தை விட்டு வேறு நிறுவனத்தில் சேர்வது என்பது சரியான தீர்வாக இருக்காது. வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும்போது எத்தனை பேரால் தனியார் நிறுவன வேலையை விட முடியும். அந்த நிறுவனங்களிலும் 8 மணி நேர வேலையை உறுதி செய்வதுதான் சரியாக இருக்கும்.

எழுதியவர் : 

✍🏻 – இரா.இரமணன்

******************************************************************

புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு

2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை  49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது.  ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும்  ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும்,  புத்தக்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும்.  இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை  https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 1 Comment

1 Comment

  1. அருமையான கதையை அழகுடன் அறிமுகம் செய்துள்ளீர்கள்.
    காப்பரெட் நிறுவனத் தலைவர்கள் “நீங்கள் எவ்வளவு நேரம்தான் உங்கள் மனைவியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்” என்று கேட்பவர்கள்தானே!
    மாமிசம் சாப்பிடும் வெள்ளை எருமை நல்ல உவமானம்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *