1.
அளவோடு பெறுவோம்
அரசியல்வாதியின் உறுதி
பிரச்சாரத்தில் கல்லடி
2.
வளையும் முதுகெலும்புகள்
வணங்கும் அரசியல்வாதி
தேர்தலின் கரிசனம்
3.
தெருவெங்கும் கட்சி
தேடியும் கிடைக்கவில்லை
தெளிவான தொண்டன்
4.
மண்டபங்கள் நிரம்பின
மதுக்கடையும் நிரம்பின
பிரமுகரின் பிரச்சாரம்
5.
குவிந்து கிடக்கின்றன
எல்லாக் கொடிகளும்
நடுகின்றான் கூலி
6.
தெருவெங்கும் தென்படுகிறது
தலைவரின் காலடி
தேர்தல் திருவிழா
7.
வாக்குறுதிகள் தயார்
திரும்பத் திரும்பக் கேட்கின்றன
ஏமாற்றத்தின் பேரோசை
8.
பிடிபடும் பணங்கள்
நெருங்க முடியவில்லை
தெருவில் விநியோகம்
9.
எதிர்க்கட்சிகள் இணைந்தன
அடித்துக் கொண்ட தொண்டன்
வாக்கு வங்கியில் கவனம்
10.
விரலில் வைத்த மை
உலர்ந்து போகிறது
விலை பேசிய வாக்கு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.