தேர்தல் ஹைக்கூ | Election Haiku | Sa Lingarasu | ச.லிங்கராசு

ஹைக்கூ மாதம்…..

தேர்தல் ஹைக்கூ

1.

கலர் கலராய் துண்டிருந்தும்
வேறு கலருக்கு காத்திருக்கும்
கட்சித்தலைவர்

2.

மன்னர்களையே ஏமாற்ற
வரும் மந்திரிகளின்
திருவிழா

3.

கை மாறியதும் நிறமாறி
இங்கு வாய் மாறுவது
சாதாரணம்

4.

ஒரே பெயர் கொண்டோரை
கொண்டாடும் காலம்
நாடகம் முடியும் வரை

5.

ஐந்து வருட ஆட்டத்திற்கு
மனதிற்குள் பாட்டெழுதும்
பாவலர்கள்

6.

குலத்தொழில் போல்
வரிசை கட்டும் வாரிசுகள்
கும்பிட பழகிக் கொள்கிறார்கள

 

எழுதியவர் 

–  ச.லிங்கராசு

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 1 Comment

1 Comment

  1. ச.லிங்கராசு

    உலக ஹைக்கூ தினத்திற்கு
    எனக்கும் வாய்ப்பளித்த மைக்கு
    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *