இன்றைய நவீன 21ம் நூற்றாண்டில், மக்கள் எதையோ ஒன்றை நேரடியாகவும், மறைமுகமாகவும் தேடிக்கொண்டு ஒரு மாயா சுழலில் சிக்கி, சிக்கியதே தெரியாமல் அந்த பெரும் தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
ஒரு மனிதனின் மனதினுடைய அடிப்படை இயல்புகளை, இயற்கை கோட்பாடுகளை, உண்மையான ஆன்மீகத்தின் ஆணி வேரை, அறிவியல் பூர்வமாகவும், நேருக்கு நேராக நம்மிடம் நாமே , சுயமாக கேள்வி கேட்டு , பதிலை எளிய வார்த்தைகளில் அனைவராலும் புரிந்து கொள்ளும் வகையில் , பற்பல உதாரணங்கள் , கதைகளின் வழியே விவரிக்கிறார் “ஞானி ஸ்ரீ பகவத் அய்யா” அவர்கள் .
நிகழ் காலத்தில் வாழும் ஞானி ஸ்ரீ பகவத் அய்யா அவர்கள் ஒரு மனிதன் எதை அடைந்தால் தன் வாழ்க்கையின் நிறைவு /முக்தி /ஞானம் அடைவானோ அதனை “எளிது எளிது ஞான விடுதலை மிகவும் எளிது ” எனும் நூலில் 6 தலைப்புகளில் 136 பக்கங்களில் தன்னுடைய 40 ஆண்டு தேடல் மூலம் கிடைத்த ஞானத்தை, படிக்கும் ஒவ்வொருவரும் ஞானியாகும் விதத்தில் நூலை எழுதியுள்ளார்.
எந்த ஒரு மதத்தின் சார்பும் இல்லாமல், பொதுவாக எல்லா மனித குலத்திற்கும் ஏற்றவாறு அறிவியல் பூர்வமாகவே இந்த நூல் அமைந்துள்ளது .
ஒவ்வொரு மனிதரும் கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகம் ….
வாழ்க வளமுடன் , நலமாக …..
நன்றி
காட்டுப்பாக்கம், சென்னை – 56.
ஆசிரியர் : ஸ்ரீ பகவத்
வெளியீட்டார் : திருமதி T . கோமதி , பிரவாகம் பப்ளிகேசன்ஸ் , சேலம்
செல் : 99942 05880, 97891 65555
விலை : ரூ . 100/-

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

