“எல்லோரும் வடம் பிடிப்போம்” சிறுகதை
சுடுகாட்டு ஓரமாக உள்ள காயாம்புவின் கல்லறையை பார்க்கும் போதெல்லாம் பெரிய கருப்பன் மனதிற்குள் ஏதோ ஒரு குறுகுறுப்பு அடி மனதில் ஏதோ ஒரு சலசலப்பு ஏற்படும் ஆனாலும் கடந்து போய் விடுவார்கள்
புளிய மரத்தின் அடியில் தான் பெரும் கூட்டம் கூடி சீட்டு விளையாடுவது கஞ்சா சிகரெட் அடிப்பது குடிப்பது என்று சகல விதமான காரியங்களும் நடந்தது.
பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டுவிட்டு நிறைய பிள்ளைகளும் கல்லூரிக்கு செல்லாமல் நிறைய ஆட்களும் வேலைக்கு போகாத ஆட்களும் அந்த புளியந்தோப்பில் கூடி விடுவார்கள்
அளவுக்கு அதிகமான போதையில் தள்ளாடும் ஒரு கூட்டம் சாதிய வன்மத்தையும் சேர்த்துக்கொண்டது.
எத்தனை விதமான தற்கொலைகள் எத்தனை விதமான திருட்டுகள் எத்தனை விதமான பாவமான செயல்பாடுகள் எல்லாம் அந்த புளியந்தோப்பில் நாள்தோறும் அரங்கேறிக் கொண்டிருந்தது.
இதைப் பற்றி சிந்தித்தும் கவலை இல்லாமல் ஊருக்குள்ள ஒரு கூட்டம் ஓய்வு பெற்ற பரிசுகள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து கோவிலில் பஜனை பாடுவது தெருவில் நடத்துவதற்கு முடிவு செய்வது ஊர் மக்களிடம் பொதுவழி போடுவது வரி போடுவது இதைப் பற்றி எல்லாம் சிந்தித்துக் கொண்டு காலையிலிருந்து மாலை வரை கோவிலில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருப்பார்கள்.
கிராமம் தன்னளவில் கொஞ்சம் கொஞ்சமாக சிதலமடைந்து நகரமாக மாறிக் கொண்டிருந்த சூழல் எல்லா இடங்களிலும் போல் அருள்சாமிபுரத்தையும் ஆக்கிரமிக்க தொடங்கியது.
சில்லென்று வீசி வரும் தென்றல் காற்றும் கொத்தமல்லி வாசமும் வாழை இலையும் வசந்த அசைவும் காணுகிற பாக்கியம் அடுத்த தலைமுறைக்கு கிடைக்குமா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு என் ஏற்ற பிளாட்டுகள் போடத் தொடங்கி விட்டார்கள்
100 நாள் வேலை திட்டம் அரைகுறையாக வேலை செய்து அவர்கள் வரும் பணத்தை வாங்கிக் கொண்டு குடி சாலையை நிரப்புகின்ற வேலையை உள்ளூர் இளைஞர்கள் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். எல்லோருக்கும் வேலை செய்யாமல் பணம் வர வேண்டும் எப்பொழுதும் போதையிலே காலம் கழிக்க வேண்டும் என்பதுதான் பெரும் சிந்தனையாக இருக்கிறது. உழைப்பின் மகத்துவத்தை அறியாத ஒரு தலைமுறை போதையின் பாதையில் தடுமாறிக் கொண்டு இருக்கிறது. கிராமத்தை சிதைக்கும் பல்வேறு நச்சுகளில் சாதியும் ஒன்று அதன் ஆணிவேரை அது தெரிய இங்கு யாருக்கும் பொழுதுகள் இல்லை.
இயற்கை எழில் மாறாமல் இருக்க வேண்டும் என்று எல்லோரும் நினைத்தால் தான் அது சாத்தியம்.
அருள்சாமி புரத்தில் உள்ள பெருங் கோயிலுக்கு தேர் செய்ய வேண்டும் என்று ஊர் கூட்டத்தில் முடிவானது. பக்கத்து ஊரில் 60 லட்சம் செலவில் தேர் செய்து விட்டார்கள். அவர்கள் பிரமாண்டமாக திருவிழா நடத்துவார்கள் நமது ஊரில் தேர் செய்யவில்லை என்று சொன்னால் நமக்கு அவமானம் என ஓய்வு பெற்ற பரிசுகளும் உள்ளூர் இளசுகளும் தேர் செய்ய வேண்டும் என பேசிக் கொண்டிருந்தார்கள்.
எப்படியும் ஒரு கோடிக்கு மேல ஆகாது நமது ஊருக்கு இவ்வளவு செலவு தேவையா இன்னும் சில ஏரியாக்களில் பேருந்து நிறுத்தம் இல்லை இன்னும் காலணி பக்கம் கரண்ட் கம்பங்கள் இல்லை இன்னும் சாலை வசதி சரியாக இல்லை இவ்வளவு விவசாயம் நடக்குற இடத்துல குடி தண்ணீருக்குபற்றாக்குறை ஏற்படுகிறது.
பக்கத்து ஊர்ல எல்லாரும் படிச்சு வேலைக்கு போய்ட்டாங்க அவங்க பணம் நிறைய வச்சிருக்காங்க அதனால அவங்க ஊர்ல தேர்விடுறாங்க நமக்கு இங்கே செய்ய வேண்டிய வேலைகளை நிறைய இருக்கு இந்தத் தேர் இந்த பகுமானம் எல்லாம் கொஞ்ச காலம் கழிச்சு பார்த்துக்கலாம் என்று சொன்ன காயாம்புவை யாருக்குமே பிடிக்கவில்லை.
இவன் சொல்வதில் நியாயம் இருப்பதை போல் தெரிந்தாலும் ஊரின் பெருமைக்கு சாதிய வழமைக்கு தேர் கட்டுவதுதான் சரி என்று ஒருமனதாக தீர்மானம் போடப்பட்டது .அதில் பெரிய கருப்பன் பங்கு பெரும் பங்காக இருந்தது அவன்தான் இந்த விஷயத்தை மிக முக்கியமானதாக எடுத்து ஊர் ஊரா பரவச் செய்தான்.
பக்கத்து ஊரில் அவர்களே தேர் விட்டு விட்டார்கள் ஆனால் நமது ஊரில் தேர் விடத்தான் வேண்டும் என ஆவேசமாக ஆக்ரோஷமாக கத்தினான் பெரிய கருப்பன்
பல பெருசுகளுக்கு இதில் உடன்பாடு இல்லை ஊரின் வளர்ச்சி விவசாயத்தின் பங்களிப்பு தண்ணீர் பற்றாக்குறை இதை சரி பண்ணுவதற்கு தான் ஊர் பணம் பயன்பட வேண்டும் தேரெல்லாம் தேவையில்லாத செலவு தேவையற்ற ஆடம்பரம் என்று பல பேர் மனதுக்குள்இருந்தாலும் அதனை வெளி காட்டிக் கொள்ளவில்லை
பெரிய கருப்பன் ஊரில் பெரியகரை அவன் அரசியல் செல்வாக்கு உள்ளவன் அவனை பகைத்துக் கொண்டார் நாளைக்கு ஏதாவது அரசியல்வாதிகளும் காரியம் சாதிக்க வேண்டும் என்றால் பெரிய பிரச்சினையாகி விடும் சாதிக்காக சில செலவுகளை உதவிகளை செய்யக்கூடியவன் அவன் எதையும் அவன் போக்கில் விட வேண்டும் என்று நினைப்பவன்.
காயாம்பு ஊர் கட்டுமானத்தை பற்றி சிந்திப்பவன் எது ஊருக்கு நன்மையோ எது நல்வழிப்படுத்துமோ அதை மட்டுமே யோசிப்பவன் வீண் ஆடம்பரம் வெட்டி பந்தா இவற்றை விரும்பாதவன் அவ்வப்போது யார் தவறு செய்தாலும் அதை மென்மையாக திருத்த வேண்டும் என்று நினைப்பவன் கடுமையான உழைப்பாளி சாதிய மறுப்பு திருமணம் செய்தவன் அதனாலேயே அவன் பேச்சை சில பேரமதிப்பதில்லை
பெரிய கருப்பன் பணம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று தவறான காரியங்களில் ஈடுபடுபவன். கஞ்சா அபின் கொக்கின் போன்ற போதை பொருட்களை கிராமப்புறங்களில் அதிகமாக புழங்க விட்டவன் பெரிய கருப்பன். அதன் மூலம் உழைக்காமல் அதிக சொத்து சேர்த்து ஏகப்பட்ட நிலங்களை வாங்கி போட்டு நிறைய பிளாட்டுக்கு கட்டி விலை நிலங்களை அழிக்கும் செயல்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறான்.
இது யாரும் கண்டு கொள்ள கூடாது என்று எல்லோருக்கும் பணம் கொடுத்து அவ்வப்போது இலவசமாக பார்ட்டி நடத்தி யாரும் அதைப்பற்றி பேசாத அளவுக்கு பார்த்துக் கொண்டான்.
அவன் செய்யும் தவறான செயல்பாடுகளையும் அரசியல் செல்வாக்கு ஜாதியை செல்வாக்கு இரண்டும் தடுத்துக் கொண்டிருந்தது பலபேர் கண்டும் காணாது இருந்தார்கள். விரைவில் ஒப்பந்ததாரராகவும் அரசியலில் அமைச்சராகவும் ஆக துடிக்கும் பெரிய கருப்பன் மனதுக்குள் தீராத தலைவலியாக காயம் போல் இருக்கிறான்.
இவன் செய்யும் பல்வேறு தவறுகளை எல்லாம் சுட்டிக் காட்டுகிறான் அந்த ஊரில் யாராவது சாதி மாற்றி திருமணம் செய்தால் அவர்களை சட்டத்தின் படி சேர்த்து வைக்கிறான் இவையெல்லாம் பெரிய கருப்பனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை எப்படியாவது இந்த காயாம்புவை சரி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.

ஊருக்குள் பல இளைஞர்களை ஒன்றாக இணைத்து ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் மடைமாற்றம் செய்ய வேண்டும் அவர்களை அரசாங்க வேலைக்கு அனுப்ப வேண்டும் விவசாயத்தில் ஆர்வமாக உள்ளஇளைஞர்களை இயற்கை விவசாயத்திற்கு திருப்ப வேண்டும் என்றெல்லாம் காயாம்பு பல திட்டங்களை மனிதர்கள் வைத்திருக்கிறார்கள்.
உடற்பயிற்சி கூடம் ஒன்று அமைத்து அதில் அனைத்து விதமான இளைஞர்களை ஒன்றாக இணைத்து ராணுவத்திற்கு ஆள் எடுப்பது அரசாங்க வேலைக்கு அனுப்புவது இந்திய அளவில் நடைபெறும் தடகளப் பயிற்சிகளுக்கு செலுத்துவது என்று பல நடவடிக்கைகள் காயாம்பு கையில் இருந்தது.
ஜாதியை பாகுபாடு பார்க்காமல் எல்லா இளைஞர்களையும் ஒருங்கிணைக்கும் வேலையை அந்த ஊரில் பிறந்து வளர்ந்த அத்துணை மக்களையும் சரி செய்யும் நோக்கத்தோடு அவன் செயல்பாடுகள் இருந்தது பெரிய கருப்பு எனக்கு பிடிக்கவில்லை.
ஊரில் பாதிப்பேர் மனசாட்சியின் படி காயாம்பு செய்வது தான் சரி என்று நினைத்தார்கள். ஆனாலும் பெரிய கருப்பனை பகைத்துக் கொள்ள முடியாது
தன் மேல் உள்ள குறைபாடுகள் எல்லாம் நீக்குவதற்கு தேர்செய்து கொண்டு வந்தால் தான். ஊரில் தன் மதிப்பு உயரும் வரும் தேர்தலில் இடம் பிடித்து வெற்றி விடலாம் என்று பெரிய கருப்பன் பெரிய திட்டம் போட்டு ஊரைக் கூட்டினான்
எல்லோரும் அவன் அழைப்புக்கு இணங்கி வந்திருந்தார்கள் அங்கே தேருடைய செலவு பெரும்பங்கு தான் ஏற்றுக் கொள்வதாகவும் ஒரு குறிப்பிட்ட பங்கு ஊரை கொஞ்சம் வசூல் செய்து கொள்ளலாம் என்று சொன்னான்.
பக்தி கடவுள் ஊரின் நன்மை ஊரின் பெருமை என்றெல்லாம் வித்தாரமாக பேசி அங்குள்ள பெரியவர்களை வசீகரிக்க நினைத்தான்.
எல்லோரும் அவன் பேச்சுக்கு மயங்கி மகுடிக்கு மயங்கிய பாம்பு போல மண்டை ஆற்றினார்கள் முடிந்த பின்பு ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்து அனைவருக்கும் குடியும் உணவும் தாராளமாக கறி விருந்து மணந்தது.
ஆனாலும் காயாம்பு ஊரின் நன்மையை சிந்தித்தான் இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள் அதை மாற்ற வேண்டும்.
இந்த ஊரில் நூலக வசதி முன்பு இருந்தது இப்பொழுது இல்லை நன்றாக படிப்பதற்கு ஒரு பெரிய கட்டிடம் கட்டி அங்கு நிறைய நூல்களை வர வைத்து படிக்க வைக்கலாம்.
இந்த பணத்தை எல்லாம் வீணாக செலவு செய்யாமல் நல்ல காரியங்கள் ஆயிரம் செய்யலாம் மேலும் நம்மூரில் போதை பழக்கம் இளைஞர்களை சீரழிக்கிறது அதை தடுக்கலாம் என்றெல்லாம் காயம் சொன்னார் செவிடன் காதில் ஊதிய சங்கு போல கறிமணத்திலும் சாராய நெடியிலும் யாருக்கும் அவன் சொல் எடுபடவில்லை.
என்ன இருந்தாலும் அவன் வேறு ஜாதிகள் திருமணம் முடித்தவன் என்கிற ஒரு காரணத்தை வைத்து அவன் பேசுகிற அத்தனையும் கேட்கக் கூடாது என்று பெரிய கருப்பன் பரப்பி வைத்திருந்தான்.
அரசாங்கத்திற்கு மனு போட்டு தான் சில முயற்சிகள் செய்து வைத்திருக்கிறேன் ஒரு மக்களும் ஒத்துழைத்தாள் நல்ல மாற்றங்கள் இங்கே கொண்டு வரலாம் நம்ம ஊருக்கு இரண்டு பேருந்து வசதி பேருந்து நிறுத்த வசதி நூலக வசதி குடிநீர் வசதி அத்தனையும் செய்யலாம் என்று காயாம்பு ஆர்வத்தோடு பேசினான்.
சில இளைஞர்கள் அவன் பேசுவதில் நியாயம் இருக்கும் என்று யோசித்தார்கள் ஆனால் பல பேர் அவன் சாதி மாறிய திருமணம் செய்தவன் என்று பெரிய கருப்பன் தூவிய விஷ விதையை வளர்த்து வைத்திருந்தார்கள்.
அந்தக் கூட்டம் முடிந்த நள்ளிரவில் போதை தலைக்கு ஏறிய பெரிய கருப்பன் எப்படியாவது இவன் ஒருவனை காலி செய்து விட்டால் இவன் பின்னால் இருக்கும் 10 இளைஞர்கள் பயப்படுவார்கள்.
நாம் நினைத்தது எல்லாம் சாதிக்கலாம் இவன்தான் இடையூறாக இருக்கிறான் என்று அன்று இரவு ஒரு முக்கியமான வேலையாக புளியந்தோப்புக்கு வருமாறு தகவல் கொடுத்துவிட்டு அந்த புளியந்தோப்பில் பின்னாலிருந்து 10 பேர் சரமாரியாக தாக்குதல் நடத்தி இரத்த வளத்தில் காயாம்பு மிதக்க விட்டு சென்று விட்டார்கள்.
ஊரின் நன்மையைப் பற்றி சிந்தித்த ஒருவன் ஊரில் உள்ள போதை எல்லாம் ஒழிக்க நினைத்த ஒருவன் ரத்தவளத்தில் மிதந்து கிடந்தான். அவன் யோசித்ததை அவன் சிந்தித்ததை செய்து இருந்தால் எவ்வளவு நன்மை ஏற்பட்டிருக்கும்.
ஆனாலும் தான் நினைத்த சித்தாந்தத்தை கொஞ்ச பேரிடமாவது அவன் பரப்பு இருந்தால் அதில் சிலர் படித்தவர்கள் வழக்கறிஞர்கள் இருந்தார்கள் சட்டப்படி பெரிய கருப்பு எனக்கு தண்டனை வாங்கித் தந்தார்கள்.
அவன் கல்லறையை புளியந்தோப்பிலே ஏற்பாடு செய்தார்கள்.
தற்காலிகமாக தேர் செய்யும் வேலை ஒத்திவைக்கப்பட்டது.
கல்லறை ஓரமாக ஒரு நாள் பெரிய கருப்பன் விடுதலை பெற்று வரும் பொழுது காயாம்பின் புகைப்படம் அவன் கண்களை உறுத்தியது சொந்த மகனே போதையின் அடிமையாகி கோமாளி நிலைக்குப் போய் விட்டான் என்பது பெரிய கற்பனையில் தாங்கிக் கொள்ள முடியாத வேதனை ஆகிவிட்டது.
காயாம்புவின் சிந்தனைகளை முன்னெடுக்கும் இளைஞர்களை சந்தித்து தானும் ஊரின் நன்மைக்கு உதவுவதாக பெரிய கருப்பன் சொன்ன ஊர் கூடி வடம் பிடித்து நல்ல பல செயல்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள்
எழுதியவர் :
✍🏻 யாழ் எஸ்.ராகவன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
