மொழிபெயர்ப்புக் கவிதை: எமிலி ஜேன் ப்ரான்ட் (Emily Jane Bronte) எழுதிய “கடைசி வரிகள் (Last lines)” கவிதை - தமிழில் முனைவர் பத்மா ஸ்ரீ்தர் (நாங்குநேரி வாசஸ்ரீ்) | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | www.bookday.in

மொழிபெயர்ப்புக் கவிதை: எமிலி ஜேன் ப்ரான்ட் எழுதிய “கடைசி வரிகள் (Last lines)” கவிதை – தமிழில் நாங்குநேரி வாசஸ்ரீ

“கடைசி வரிகள் (Last lines)” மொழிபெயர்ப்புக் கவிதை
(Emily Jane Bronte 1818 – 1848)

கவிதை அறிமுகம்:

புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் எமிலி பிரான்டே நோய்வாய்ப் பட்டு இறப்பதற்கு முன் எழுதிய கடைசிக் கவிதையாக இக்கவிதை அறியப்படுகிறது. இதன் காலம் 2 ஜனவரி 1846. மரணத்தைக் கண்டு அஞ்சாத அவரின் உறுதியான உள்ளத்தையும், அவருடைய கடவுள் நம்பிக்கையையும் இக்கவிதை நமக்கு வெளிப்படுத்துகிறது.

என்னுடைத்தாகா கோழையான எவ்வான்மாவும்
வன்புயலாய் வருத்தினும் மன்னுலகத்தே நடுக்கமிலை
மின்னும் மேலுலக மகிமைகளைக் காண்கிறேன் யான்
மின்னு நம்பிக்கையும் அதுபோல், அச்சம்நீக்கும் ஆயுதமாகியே.

எனது நெஞ்சுள் இருந்திடும் இறைவனே!
என்றும் நிலைபெற்ற எல்லாம்வல்ல ஆண்டவரே!
வாழ்வு, எனதான அதுவோ என்போல் ஓய்வெடுக்க,
அழியாத வாழ்வாக, ஆக்கிடும் சக்தி நினதாமே!

வீணாம் ஆயிரம் சமய நம்பிக்கைகளும்
அசைத்திடும் அவை மனித உள்ளங்களை: வீணாம் சொல்லொணா அளவிற்கு:
வாடிய மேன்மைஇல் களைகளாம் அல்லது
நெடுநீர்ப் பரப்பின் நடுநில் பயனிலா நுரையாம்

விடுத்து அயிர்ப்புஇல் விழிப்பித்திட ஒருவரை
திடமாய்ப் பற்றுவேன் எல்லையிலா நின்னை
உலைவிலாப் பாறையெனும் அமரத்துவத்தே
நிலையில் பிழையா நங்கூரமிட்டே

அனைத்தையும் அடக்கிய அன்புடன்
நின்தூய ஆவி உயிர்ப்பித்த நிலைபேறோ
மேலே ஊடுருவி எங்கும் நிறைந்திடும்,
மாறிடும், நிலைத்திடும், குலைத்திடும், படைத்திடும், வளர்த்திடும்

மேதினியும் மாந்தரும் மாண்டு மறைந்திடினும்
ஆதவனும் அண்டமும் அற்றுப் போகிடினும்
நீ தனித்து விடப்படினும்
இருப்பவை அனைத்தும் இருந்திடும் நின்னுள்

இறப்பிற்கு இடமில்லை இங்கே
இயலாது அவனது வல்லமைகொண் துகளை வெற்றாக்கிட
நீயே நீயே இருப்பும் உயிர்ப்பும்,
இருந்திடு நினதோ அழிவுறாது என்றுமே.

தமிழாக்கம்: முனைவர் பத்மா ஸ்ரீ்தர்
(நாங்குநேரி வாசஸ்ரீ்)

Last lines
No coward soul is mine,
No trembler in the world’s storm-troubled sphere:
I see Heaven’s glories shine,
And faith shines equal, arming me from fear.

O God within my breast,
Almighty, ever-present Deity!
Life, that in me has rest,
As I, undying Life, have power in Thee!

Vain are the thousand creeds
That move men’s hearts: unutterably vain;
Worthless as wither’d weeds,
Or idlest froth amid the boundless main,

To waken doubt in one
Holding so fast by Thine infinity;
So surely anchor’d on
The steadfast rock of immortality.

With wide-embracing love
Thy Spirit animates eternal years,
Pervades and broods above,
Changes, sustains, dissolves, creates, and rears.

Though earth and man were gone,
And suns and universes cease to be,
And Thou were left alone,
Every existence would exist in Thee.

There is not room for Death,
Nor atom that his might could render void:
Thou, Thou art Being and Breath,
And what Thou art may never be destroyed.

📚 எழுதியவர்:

– Emily Jane Bronte (1818 – 1848)
தமிழாக்கம் – நாங்குநேரி வாசஸ்ரீ

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *