சோம.வள்ளியப்பன் (Soma Valliappan) எழுதிய இட்லியாக இருங்கள் - எமோஷனல் இன்டெலிஜென்ஸ் (Emotional Intelligence) - நூல் அறிமுகம் - https://bookday.in/

எமோஷனல் இன்டலிஜென்ஸ் (Emotional Intelligence) – நூல் அறிமுகம்

எமோஷனல் இன்டலிஜென்ஸ் (Emotional Intelligence) – நூல் அறிமுகம்

 

*இட்லியாக இருங்கள்!*

*இட்லியுடன் இருங்கள்!!*

ஆனால் பிறர் வீட்டிலும் இட்லி இருக்கும் என நினைக்காதீர்கள்.

வெற்றி பெற, நிம்மதியாக இருக்க வெறும் புத்திசாலித்தனம் IQ மட்டும் போதாது. உணர்வுகளை கையாள்வதற்கும் ஆளுமை செய்வதற்கும் எமோஷனல் இன்டெலிஜென்ட் [EI] தேவைப்படுகிறது.

இந்த எமோஷனல் இன்டெலிஜென்டை நூலாசிரியர் *இட்லி* என எடுத்துக்கொண்டு நூல் முழுவதும் பயணித்திருக்கிறார்.

EI பற்றி நறுக்குன்னு எழுதி இருக்கிறார் திரு. சோம வள்ளியப்பன் அவர்கள்.

*உடல் வயதுக்கு* ஒத்துபோக சில நேரம்
*மன வயது* தள்ளாடும் நிலை உள்ளது.
உறவுகளிலும் அலுவலகங்களிலும் பலதரப்பட்ட மனிதரை சந்திக்கும் பொழுது EI (இட்லியை) கட்டாயமாக சட்டைப்பையில் வைத்திருக்க வேண்டும்.

ஏனெனில் நம்மிடம் பழகுவோர் எல்லோரும் *உண்மையாக இருப்பார் என்று நினைத்தால் இட்லி கருகிவிடும்*.

முன்னொன்று பேசிவிட்டு பின்னொன்று பேசுபவரிடம் எதிர்வினை நாம் புரிய கூடாது .

*அவர்களது மனவளம் அப்படித்தான் என புரிந்து கொண்டு நமது இட்லியை மென்மையாக்க வேண்டும்*.

கோவப்படுவதால்
பெருமை அல்ல.!
பலவீனத்தால் மட்டுமே வெளிவரும் மொழி அது.

மறுநாள் பேசி பாருங்கள் ,நானா இப்படி செய்தேன்? என்று இட்லி அவரை பார்த்து
*ஏளனமாய் சிரிக்கும்.*

இட்லியை புரிந்து கொள்வது ஒண்ணும் பெரிய ராக்கெட் சயின்ஸ் இல்லை என எளிமையாக ஆரம்பித்து உணர்வுகளை கட்டுப்படுத்துவது தான் அது என தன்னிலையை உணர்ந்து கொள்ளும் முறையை தெளிவாக்கியுள்ளார்.

காதல் என்பது ஒரு உணர்வு ,கோபம், பயம் என்பது வேறொரு உணர்வு. இப்படி பல உணர்ச்சிகள் எல்லோருக்கும் இருக்கும் ஆனால் அதை எல்லாம் அப்படியே வெளிக்காட்டாமல் சிலர் இடம் பொருள் ஆள் தெரிந்து கவனமாக தேவைப்படும் நேரத்தில், தேவையான அளவு பயன்படுத்துவர்.
அவர்கள் தான் சாமர்த்தியசாலிகள் இவர்களால் தான் *இட்லி நன்றாக பூப்போல வேகிறது*.

சிலருக்குத்தான் இந்த இட்லியை வேக வைக்க பெரும்பாடு இருக்கிறது.

இட்லி பானையில் தண்ணீர் இல்லாமல் சிலரும் , தட்டுகள் இல்லாமல் சிலரும், பானையே இல்லாமல் சிலரும் கோபத்திலும் பொறாமையிலும் வெந்து கொண்டிருப்பர். மல்லிகை பூ போன்று இட்லி கிடைப்பது நம் சுயமனது நினைத்தால் சாத்தியமே என்று நூல் சொல்கிறது.

அறிவு மிகுந்தால் ஆனந்தம். உணர்ச்சி மிகுந்தால் ஆபத்து.

இட்லி என்ற ஹீரோ ஜொலிப்பதற்கு அமிக்டலா [Amygdala] என்ற வில்லன் தேவைப்படுகிறது.

மூளையில் இரண்டு பக்கமும் பக்கவாட்டு பகுதியில் பாதுகாப்பாக புதைக்கப்பட்ட பாதாம் பருப்பு இதுதான் மனித *உணர்வுகளின் ஸ்பெஷலிஸ்ட்*.

இதுதான் நமக்கு காதலைச் சொல்லிக் கொடுக்கிறது, காதலிக்காக தாஜ்மஹால் கட்டச் சொல்கிறது , எல்லாம் துறந்த பட்டினத்தார் தன் தாயின் இறப்புக்கு வருத்தப்பட்டதற்கு இதுதான் காரணம்.

நமது கோபம், பயம், வெறுப்பு, ஆத்திரம், அன்பு, கனிவு ,துக்கம் எல்லாத்திற்கும் இதுவே ஃபேக்டரி.

ஒரு போட்டி என்று வரும்போது பெரும்பாலும் அறிவை மனம் சுலபமாக ஜெயித்து விடும் ஆனால் எல்லா சமயமும் மனதை ஜெயிக்க விடக்கூடாது._

நீங்கள் ஒரு இட்லி ஸ்பெஷலிஸ்ட் ஆவது இந்த புத்தகத்தை நோக்கமே!.

கோபத்தையும் பொறாமையும் சற்று நேரம் தூரம் தள்ளிப் போட்டால் இட்லி மிருதுவாய் கிடைக்கும். ஒரு வெற்றியாளர் தன்னை சரியாக எடை போட்டு வைத்திருக்க வேண்டும் .

புகழ்தல், அவமானப்படுத்துதல், துரோகம் செய்தல் அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு தேவையானதை மட்டும் சிந்தித்துக் கொள்ள வேண்டும். அதிகமாக உணர்ச்சி வசப்படும் பொழுது மனம் பாதுகாப்புக்கு வழி தேடி தானாக ஓடி ஒளியும் .

இந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு *எமோஷனல் ஹைஜாக்* என்று பெயர்.

விமான கடத்தல் போன்று இது அறிவை கடத்துவது.

எனவே அமிக்டலா சொல்வதைக் கேட்டு உடனடியாக செயல்பட்டு விட வேண்டாம். கொஞ்சம் பொறுங்கள் யோசிக்க அவகாசம் எடுங்கள். இட்லிக்காக காத்திருங்கள். நமக்குள் நாமே ஆட்டோ சஜக்ஷன் செய்து கொள்ள வேண்டும். நான் நிதானத்தில் இருக்கிறேன் என்று நாமே நம்ப வேண்டும்.

இட்லியுடன் ஒரு புன்னகை செய்யுங்கள். உங்களுக்குள்ளும் ஒரு புத்தர் இருப்பதாக தோன்றும். அழகோ அறிவோ பணமோ மட்டுமில்லாமல் நம்பிக்கைதான் பிறரை கவரும்.

இட்லியாக இருப்பவர்களின் நம்பகத்தன்மை தன்னைச் சார்ந்தவரிடத்தும் ஏற்படுத்தக்கூடும். நாம் பிறரை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்பது மிக முக்கியம் ஏனெனில் அதுதான் (Trust Building).

இட்லி specialist எப்போதும் பாராட்ட வேண்டிய இடத்தில் தயங்காமல் பாராட்டுவார்கள். எவரையும் முன்கூட்டியே எடை போடாமல் தான் பழகிய பின் எடை போடுவர்.

செய்தவற்றை கவனிக்க வேண்டும். செய்த வரை அல்ல_ என்பார்கள் அடுத்தவர்கள் செய்த தவறை EI யால் நிறுத்தினால் நலம்.

இட்லியை மென்மையாக வளர்க்க முயற்சி கொள்ளும்…..

நூலின் தகவல்கள் : 

நூல் : எமோஷனல் இன்டலிஜென்ஸ் (Emotional Intelligence)
நூலாசிரியர் : சோம.வள்ளியப்பன் (Soma Valliappan)
பதிப்பகம்: கிழக்கு
பக்கம் :104
விலை :  135

நூல் அறிமுகம் எழுதியவர் : 

யாழுகிருஷ்
பட்டதாரி ஆசிரியர்
ஆடுதுறை

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *