என் குழந்தைகளை யார் எனக்கு திருப்பித் தர முடியும்?
கலீத் சமீர்
தமிழில்: இந்திரன்
—————————————
ஹலோ… ஹலோ.. என் பெயர் கலீத் சமீர்.
நான் காசா நகரில் இருந்து வருகிறேன்.
இந்த நகரத்தின் பெயரை நீங்கள் செய்திகளில் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஒரு நாள் நான் என் ஒரே குழந்தையின் பிறந்த நாளுக்காக வீட்டை அலங்கரித்தேன். கேக் வாங்கி வருவதற்காக வீட்டை விட்டுப் புறப்பட்டேன். குழந்தை கையசைத்தது.
வெளியே வந்து சிறிது தூரம் நடந்ததும் குண்டுகள் பொழியும் சத்தம் கேட்டது. மேலும் மேலும் அருகில் கேட்டது. நான் வீட்டை நோக்கி ஓடினேன்.
ஒரே புகை மண்டலம்.
புகையில் நுழைந்து பார்த்தேன்.குழந்தை உட்பட எல்லோரும் சடலமாகிக் கிடந்தார்கள்.
எப்படி என் துயரத்தை ஆற்றிக் கொள்வேன்?
வேறு வழி இல்லாமல்
நான் எனது துயரத்தை ஒரு பாடலாகப் பாடினேன். வலிக்கும் இதயத்தோடு அந்த பாடலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இதோ அந்த பாடல்
* * * * *
“சிதைவுகளில் நின்றேன்.
எங்கு என் வீடு ஒரு காலத்தில் இருந்ததோ அங்கு புகை எழுந்து கொண்டிருந்தது.
இரவு இந்த நகரத்தை இடம் மாற்றியது. அதிகாரத்தின் கண்கள் அதிலிருந்து விலகின குழந்தைகளின் சிரிப்பொலிகள்
இடிபாடுகளில் ரத்தமாய் வடிந்தன.
குண்டுகள் பொழிந்து ஆன்மாக்களைப் பிளந்த போது அவர்கள் எல்லைக் கோடுகள் பற்றியும் கட்டுப்பாடுகள் பற்றியும் பேசினார்கள்.
பேராசை பிடித்த கைகள் அவற்றின் தீய பாவனைகளையும்,
அவர்களின் கைகள் ஏந்தியிராத உடைந்த இதயங்களையும் நோக்கி நகர்ந்தன.
ஆனால் நான் இன்னும் கனவு காண்கிறேன்.
துப்பாக்கிகள் தொலைந்து போன உலகத்தைக் கனவு காண்கிறேன்.
தந்தையர் தங்களின் ஒரே மகன்களை இனியும் இழக்காத உலகத்தைக் கனவு காண்கிறேன். கொடிகள் இல்லை. சங்கிலிகள் இல்லை.
வெறுமனே எல்லா குரல்களும் ஒன்றாய் இணைந்து நின்று பாடுகின்றன. எல்லோருக்கும் சமாதானம் சூரியனைப் போல் ஒளி வீசுகிறது.
📚 எழுதியவர் :
✍🏻 கலீத் சமீர்
தமிழில்: இந்திரன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

