Subscribe

Thamizhbooks ad

என் பெயர் ராஜா – வாசிப்பு அனுபவம் – சு.டார்வின், நான்காம் வகுப்பு



நாங்க சென்னைக்கு, புத்தகக் கண்காட்சிக்கு போயிருந்தப்ப வாங்குன புத்தகம் என்  பெயர் ராஜா.. அந்தக் கதை தான் இது.

நான் ஒரு கோம்பை நாய். எங்க அம்மா பெயர் ராணி. என் அம்மா ஒரே சமயத்தில் ஐந்து குட்டிகள் ஈன்றாள். அதில் முதல் குட்டி நான் தான். என் பெயர் ராஜா. நான் மூன்று மாத குட்டி. ஆனால் ஒன்று, என்ன ஆனாலும் என் தங்கச்சி மீது தான் அம்மா ரொம்ப பாசமாக இருப்பாள். ஒரு நாள் என் அம்மா ராணி உடைய எஜமான் நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது, என் தம்பிகள் மூன்று பேரையும் தூக்கிப் போயி விட்டார்.  என் அம்மாவிடம் கேட்ட போது, அவர்களை விற்பனை செய்ய போவதாக சொன்னாள். எனக்கு விற்பனை என்றால் என்ன என்று தெரியாது. தாயாரிடம் கேட்டேன். அதாவது மகனே, விற்பனை என்றால் இப்போது நம்மிடம் இருக்கும் பொருளை இன்னொருவருக்கு கொடுத்து விட்டு பணம் வாங்கிக் கொள்வது என்று கூறினாள். விற்பனைக்கு என்று சந்தை இருக்கும். அங்கே காய்கறி, மீன், கறி என்று நிறைய இருக்கும். அங்கே தான் என்னையும் என் எஜமான் வாங்கி வந்தார். அங்கே தான் உன் மூன்று தம்பிகளையும் விற்பனை செய்யப் போகிறார்கள் என்று அம்மா சொன்னாள்.

அடுத்து எங்க அம்மா சொன்ன மாதிரியே என்னையும் ஒருவர் வாங்கிட்டுப் போயிட்டார். அவங்க வீட்டில் அவருடைய பொண்ணும் அவருடைய வீட்டுக்கார அம்மாவும் இருந்தாங்க. கொஞ்ச நாளில் அதே வீட்டுக்கு என் தம்பியும் வந்து விட்டான். கொஞ்ச நாளில் நாங்கள் பெரிதாகி விட்டோம். எங்க எஜமான் வேட்டைக்குப் போவார். அவர் போகும் போது நாங்களும் கூட போயி வேட்டையாடிவிட்டு வருவோம். ஒரு நாள் எங்க எஜமான் ஒரு மரத்தில் குரங்குகள் இருக்கும் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் ஜீப்பை நிப்பாட்டினோம். அங்கே  கழுதைப் புலிகள் விளையாடிக் கொண்டிருந்தன.   மெதுவாக நடந்து வேட்டையாடச் சென்றோம். ஆனால் அந்த கழுதைப் புலி இரண்டும் என் மீது பாய்ந்து நகத்தை வைத்து பரண்டி வைத்து விட்டன. ஆனாலும் என் பின்னங்காலை இழுத்து இழுத்துச் சென்று அதைக் கடித்து குடலைப் பிடுங்கி விட்டேன்.

என் தம்பி டாமி, என் எஜமானைப் பார்த்து ஒரு மிருகம் தாக்க வந்த போது என் தம்பி டாமி தான் போய் தாக்கி அந்த மிருகம் செத்து, என் தம்பியும் செத்து விட்டான். ஆனால் என் எஜமான் அங்கிருந்து போய்ட்டார். பயம் இருந்தால் அவர் ஏன் வேட்டைக்கு வர வேண்டும். என் பின்னங்காலை நொண்டி நொண்டி வீட்டிற்கு வந்துட்டேன். முகப்பு கேட் பூட்டி இருந்தது. அதனால் நான் வெளியவே தூங்கிட்டேன். காலையில் முகப்பு கேட்டைத் துறந்தாள் என் எஜமானின் மனைவி. நான் கேட்டுக்கு நேரா படுத்து தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போ ராஜா என்று கூவினார். என் எஜமான் ராஜா சாகப் போறான் என்று சொன்னார். ஆனால் நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது என் கனவில் என் தம்பி வந்து, நிய்யும் செத்துடு அண்ணா என்று சொன்னான்..

புரியாத வார்த்தைகள் : இந்தக் கதையில் இருந்த துஷ்ட ஜந்து, புதல்வி, காரை போட்ட வாசல், சொல்கையிலேயே, பிணைந்து, பறித்து வாகாய், அதட்டல் போடுவார், மாறுகையில், நிகழ்த்துவேன், கவிந்து விட்ட, பிதற்றி, முழுகீட்டாத்தான், போசியில், முன்னறிவிப்புமின்றி, ஊத்தை, ஓலம், கிலுவை, விசையை, கிஞ்சிக் காட்டியது, அமளி பண்ணி, வெங்கச்சாங் கற்கள், உதாசீனப்படுத்தி, சமிக்ஞை, எள்ளும் கொள்ளும், திராணியற்று, ஊடுவாடி..

கருத்து : உயிரினங்களை கொடுமைப் படுத்தக் கூடாது. உங்களை யாராவது கொடுமைப் படுத்தினால் போலீசுக்கு சொல்லிடலாம். ஆனால் வாயில்லா ஜீவன் யாரிடம் சொல்லும். அதனால் வாயில்லா ஜீவனை கொடுமைப் படுத்தாதீர்கள். வேட்டையாடாதீர்கள்..

சு.டார்வின்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 

Latest

தொடர் 32: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

  ஆரோக்கியம்  என்பதும் சுற்றுசூழல் சவால் தானே!!!? உலக மயமாக்கம், பல்வேறு விளைவுகளை, கடந்த...

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

தொடர் 32: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

  ஆரோக்கியம்  என்பதும் சுற்றுசூழல் சவால் தானே!!!? உலக மயமாக்கம், பல்வேறு விளைவுகளை, கடந்த முப்பது ஆண்டுகளில், நம்மை சந்திக்க வைத்துள்ள நிலை ஓரளவு நாம் அறிந்து வைத்துள்ளோம். பொருளாதார மாற்றம் ஏற்பட்டு, பொருட்கள் வீட்டுக்கு,...

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

2 COMMENTS

  1. அடடே… என்ன ஒரு அருமையான விமர்சனம்… நான்காம் வகுப்பு படிக்கும் மாணவனின் விமர்சனமா இது… கதை விளக்கிய பாங்கும், புரியாத வார்த்தைகளை பட்டியலிட்டுள்ள விதம், தனது கருத்தாய் மிக எதார்த்தமான வார்த்தைகளுடன் பதிவிட்டுள்ள நேர்த்தி… சபாஷ் டார்வின் சபாஷ் …
    புலிக்கு பிறந்தது பூனையாகுமா? … தேனி சுந்தரின் மகன் என்பதை நிரூபித்து விட்டான்… குழந்தைகளின் திறனறிந்து ஊக்குவிக்கும் பெற்றோர் ஆசிரியர்கள் கிடைத்தால் நிச்சயமாக எந்த குழந்தையும் நட்சத்திரமாய் ஜொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை அந்த வகையில் அப்பாவின் வழிகாட்டுதலில் எதிர்காலத்தில் டார்வின் ஜொலிக்கும் ஒரு தலைசிறந்த எழுத்தாளனாக உருவாகும் திறன் உள்ளது… ஊக்குவித்து வழிக்காட்டுங்கள் சுந்தர்… எழுத்தாளனாய் பரிணமிக்க போகும் டார்வின் குட்டிக்கு என் அன்பு நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

  2. டார்வினின் கதை உள்வாங்கும் திறன் அபாரமாக உள்ளது. ஆசிரியர் சொல்ல வந்த கருத்தை கச்சிதமாக படம் பிடித்து எழுதி இருக்கிறார். அவருக்கு புரியாத வார்த்தைகளை நேர்மையாக வெளிப்படுத்திய விதம் பாராட்டத்தக்கது.

    பிற உயிரினங்களின் மீது அன்பு செலுத்த வேண்டும் என்ற உன்னதமான உள்ளம் கொண்ட டார்வினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் 🥰

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here