என்.சங்கரய்யா
அவர்
எங்கள் சங்கரய்யா
பிரிட்டீஷ் அரசுக்கெதிராய்
நின்றவரய்யா
பிற்போக்குதனத்தை வெறுத்தவரய்யா
விடுதலைப் போராட்ட வீரரய்யா
தியாகி பென்சனை மறுத்தவரய்யா
மதத்தை மறுத்து வாழ்ந்தவரய்யா
சாதியை ஒழிக்க மணம் புரிந்தவரய்யா
தமிழை சுவாசித்த தலைவரய்யா
வாசிப்பை நேசித்த வரலாறய்யா
போராட்ட குணம் கொண்டவரய்யா
தொண்டால் பொழுதளந்த
எங்கள் சங்கரய்யா
பொதுவுடைமை
அவர் சித்தாந்தமய்யா-அது
மனிதம் காக்கும் தத்துவமய்யா
பாட்டாளி வர்க்கத்தின் அரசியலை
பள்ளி காலம் முதல் பேசியவரய்யா
பேசியதை நடைமுறைப்படுத்திய
பெரியவரய்யா
தொழிலாளி நலன் காக்க
பலநாள் களம் கண்டவரய்யா
சமூகநீதியோடு
சமநீதியையும் போதித்தவரய்யா-
எங்கள் சங்கரய்யா
ஏகாதிபத்திய ஏதிரியய்யா..
அடக்குமுறைகளுக்கு அஞ்சாதவரய்யா
எட்டாண்டுகள் சிறை கண்டவரய்யா
நூறாண்டுகள் வாழ்ந்த சங்கரய்யா
தோழர் என்.சங்கரய்யா
தொண்டில் பழுத்த எங்கள் தங்கமய்யா..
வாழ்ந்தும் முடியாத வரலாறய்யா…
அவர்
வாழ்வே செங்கொடி வாய்பாடய்யா
பிச்சுமணி