சா மாடசாமி (S.Madasamy) எழுதிய என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா (En sivappu baalpoint penaa) - நூல் அறிமுகம் - https://bookday.in/

என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா – நூல் அறிமுகம்

என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா – நூல் அறிமுகம்

ஆசிரியர் கல்வி சிந்தனையாளராகவும் பேராசிரியராகவும் பணியாற்றியதாலும் என்னவவோ ஆசிரியர் மற்றும் மாணவர்கள் ஆகியோரின் மனநிலையை மிகச் சரியாக ஆராய்ந்துள்ளார்.

ஆசிரியரின் சிவப்பு நிற பேனா மாணவர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்க வேண்டுமே தவிர ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கக் கூடாது.

இன்றைய கால கல்வி நிலையானது மாணவர்களை அவர்களின் முகம் மறைந்து முகமூடிகளை அணிவித்து தான் வெளி வருகின்றனர். மதிப்பெண்கள் மட்டுமே மாணவர்களுக்கு வாழ்க்கை அல்ல. அவர்களின் வாழ்க்கையை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் உந்த சக்தியை மட்டுமே நாம் அளிக்க வேண்டும்.

வெட்டி கதைகள் பேசி பொழுதைப் போக்கி மாணவர்களை ஒரு கேலிக்குள்ளாகவும் அவர்களின் மனநிலையை அறிந்து கொள்ளாத எத்தனையோ ஆசிரியர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

ஒரு மாணவனுக்கு வகுப்பறையில் என்ன வேண்டும்? அவன் படிக்கும் பாட புத்தகங்கள் அவனை நல்வழியில் நடத்துகின்றதா? ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் எவ்வாறு அணுக வேண்டும்? ஒரு வகுப்பறை எவ்வாறு இருக்க வேண்டும்? போன்ற பல கேள்விகளுக்கு பதில் புத்தகத்தில் உள்ளது.

இப்புத்தகத்தை படித்து பின்பு கண்ணாடி முன்பு நின்று என்னை நான் பார்க்கிறேன். நான் ஒரு சரியான ஆசிரியரா? மாணவர்களிடம் கற்பித்தலுக்கு அப்பால் ஏதேனும் அவர்களுக்கு நடத்தி இருக்கிறோமா அல்லது அவர்களிடம் கற்பித்தலை வேறு விதமாக அணுகியிருக்கிறோமா? என்று எனக்குள் நான் கேள்விகளை கேட்டுக்கொள்கிறேன்.

கண்டிப்பாக இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை என்று தான் சொல்வேன்.

ஆசிரியர்: சா மாடசாமி
                                            ஆசிரியர்: சா மாடசாமி

ஆசிரியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுப்பதற்காக என்னென்ன காரணங்கள் சொல்லலாம் என யோசித்து பொய்யான காரணத்தைக் கூறி விடுப்பு எடுத்துக் கொள்ளும் போது அதை தவறாக எண்ணாத ஆசிரியர்,ஒரு மாணவன் அவன் ஒரு விடுப்பு எடுப்பதற்கு அல்லது வீட்டுப்பாடம் செய்யாமல் வருவதற்கும் ஒரு பொய் சொல்கிறான் என்றால் அதை ஒரு பெரிய தவறாக சித்தரித்து அவன் மீது தேவையில்லாத விமர்சனங்களும் பழிகளையும், தண்டனைகளையும் வழங்குவது சரியா?

ஒரு மாணவன் காப்பி அடித்தால் அதை பார்த்து கோபம் கொள்ளும் ஆசிரியர் தன் வேலை பார்க்கும் பள்ளியிலோ அல்லது கல்லூரிகளிலோ நடக்கும் கல்வி சார்ந்த அவலங்களை எதிர்த்து கேள்வி கேட்காமல் இருப்பது சரியா?

வகுப்பறையில் தூக்கம் வருவது எதனால்? ஆசிரியர்கள் சொன்னதையே திரும்பத் திரும்ப சொன்னாலும் தூக்கம் வரும். வகுப்பறையில் காற்றோட்டம் சூரிய ஒளியே இல்லாமல் அடைத்து இருந்தாலும் தூக்கம் வரத்தான் செய்யும் உண்மைதானே….

மாணவர்கள் குழுவாக கற்பதும் ஆசிரியர்களுடன் உரையாடுவதும் கற்றலில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் இன்றைய கல்வியானது மாணவர்கள் குழுவாகவும் இருக்க முடியவில்லை ஆசிரியர்களுடன் உரையாடவும் முடியவில்லை. பின்னர் அங்கே எப்படி கற்று சிறப்பாக நடைபெறும்.

ஒவ்வொரு ஆசிரியரும் தன்னுடைய வகுப்பறையில் புதுமைகளை செய்ய தயங்குகின்றனர். தன் சக ஆசிரியர்களின் கிண்டல் கேடிகளுக்கு ஆளாகின்றனர். அதுமட்டுமின்றி அதிகாரிகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பிற்கு ஆளாகின்றனர்.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஓரளவிற்கு சுதந்திரமானவர்களாகவும் தங்களுடைய கருத்தை வலுவாக எடுத்துக் கூறுபவர்களாகவும் இருப்பது சிறப்பு. என்னதான் பணம் கட்டி மிகப் பெரிய பள்ளிகளில் சேர்த்தாலும் மாணவர்களின் சுதந்திரம் அங்கு கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஒரு கருத்தை முன் வைக்கும் போது அவர்கள் அதில் வலுவாக இருப்பதில்லை என்று கூறுகிறார் ஆசிரியர்.

வகுப்பறையில் ஆசிரியர்கள் மட்டும்தான் பாடம் எடுக்க வேண்டுமா என்ன? ஒரு பள்ளியில் பணியாற்றும் அனைவரும் அந்த மாணவர்களின் கற்றலுக்கு துணை புரிபவர்களே.

ஆசிரியர்கள் அல்லாது எத்தனையோ பெற்றோர்கள் படித்தவர்களாகவும் பல்வேறு துறைகளில் வேலை செய்பவர்களாகவும் இருக்கும் பட்சத்தில் அவர்களை வகுப்பறைகளுக்கு அழைத்து அவர்கள் மூலம் ஒரு கற்பித்தலை நிகழ்த்தலாம். மாணவர்களுக்கும் இது ஒரு புது அனுபவமாகவும் இருக்கும் கற்பித்தலும் அங்கு வேறு ஒரு நிலைக்கு எடுத்துச் செல்லும்.

வகுப்பறையை தாண்டிய வாசித்து என்றால் அது அரசு பள்ளி ஆசிரியர்களும் மட்டுமே இருப்பதாக ஆசிரியர் கூறுகிறார். ஒரு விதத்தில் இது உண்மையாகத்தான் இருக்கிறது. தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பெரும்பாலும் தங்களுடைய மாணவர்களை மதிப்பெண்கள் வாயிலாக மாணவர்களை வெளிக்காட்டுவதற்கு தேவையான தேர்வுகள், விடை தாள்களைதிருத்துதல் என நிர்வாகம் அவர்களை எந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஆனால் அரசு பள்ளிகளில் இது ஓரளவுக்கு குறைவாகவே உள்ளது அவர்களுக்கான நேரம் அதிகமாகவும் உள்ளது என நினைக்கிறேன். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மேற்கண்ட வேலைகளை செய்வதில்லை என்பது இதன் பொருள் அல்ல. மாணவர்களை மதிப்பெண்களை நோக்கி அணுகாமல் அவர்களை சுதந்திரமாக செயல்பட வைக்கின்றனர் என்பதே இதன் பொருள்.

டோட்டோசான் மற்றும் பகல் கனவு என்றும் இரண்டு புத்தகங்களை ஆசிரியர் மிகச் சிறப்பாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
அதில் வரும் ஆசிரியர்களையும் மாணவர்களையும் உடனே படித்தாக வேண்டும் என்பது போல் இருந்தது.

பாடத்திட்டம் குறித்து மாவோ அவர்கள் கூறிய மிகக் கடுமையான வார்த்தைகள் “பாடத்திட்டம் மிகக் கடுமையாக இருக்கிறது மாட்டின் மேல் வளர்ந்துள்ள முரட்டு மயிர் போல இதை எப்படி குழந்தைகள் சுமக்க முடியும்”? உண்மையில் ஒவ்வொரு குழந்தையின் பையிலும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

ஆனால் அவை அனைத்தையும் அந்த குழந்தை படிக்கின்றதா ?அந்த புத்தகப் பையை அந்த குழந்தையால் தூக்கிக் கொண்டு பள்ளிக்குச் செல்ல முடிகிறதா?

இன்றைய கால கல்வி ஆனது பணத்தைக் கட்டி எப்படியாவது ஒரு நல்ல பள்ளிக்கு சேர்ந்து படித்து முடித்து வெளியே வந்த பிறகு கல்விக்காக போட்ட பணத்தை எல்லாம் பெற என்னவெல்லாம் செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் மாணவர்களே அதிகம்..

பள்ளிக்கூடங்கள் பிள்ளைகள் வெறும் படித்து மதிப்பெண்களை பெறுவதற்கு மட்டுமே அல்ல. குழந்தைகளின் பாதுகாப்பும் இதில் அடங்கும். கல்வி வெறும் மதிப்பெண்களை மட்டுமே நோக்கி ஓடாமல் குழந்தைகளின் பாதுகாப்பும் அவர்களுக்கான சுதந்திரமும் தன்னம்பிக்கையும் முன்னெடுப்பவையாக இருக்க வேண்டும்.

அதற்கு ஒவ்வொரு சிவப்பு நிற பால் பாயிண்ட் பேனாவும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் ஆசையும் கூட…….

மகிழ்வுடன்

நூலின் தகவல்கள் : 

புத்தகம் : என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா
ஆசிரியர் : சா மாடசாமி
வெளியீடு :பாரதிபுத்தகாலயம் புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
விலை:100/-

நூல் அறிமுகம் எழுதியவர் : 

✍️நளினி மூர்த்தி

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *