En Vervayil Uppirukku Engirukku Saathi Poem by Adhirai. என் வேர்வையில் உப்பிருக்கு....எங்கிருக்கு சாதி? கவிதை - ஆதிரை




குடி….
குலம்….என்பது
ஏமாற்று வேலை!
சாதி…
குடித்தனம் செய்யுது
தமிழினத்தாரை!

மேடையில் முழங்கிடும்
மூடரே!உங்கள்
மூளையில் இல்லையா
சாதியின் செல்கள்?

ஆதியில் வந்த தா
சாதி?-யெனில்
எப்படி வந்தது
மீதியாய் சேரி?

பாதியில் வந்த தே
சாதி!
பாவி பயல்களே
சமத்துவ….
பாதையில் போவதே
நீதி!

என்னை நீ…ஏய்ப்பதில்
ஏதடா நீதி?
என் வேர்வையில்
உப்பிருக்கு…
எங்கிருக்கு சாதி?

பிடுங்கிய எம்மண்ணில்
இல்லையா சாதி?
பல தலைமுறை உழைப்பிலே….
இல்லையா சாதி?

கும்பிடும் சாமியில்
சாதி!நாங்கள்
செய்திடும் தொழிலிலும் மேவிடும்
சாதி!

பள்ளி நுழைகையில்
சாதி!நீ… படைத்தவன்
பள்ளியறை நுழையினும் சாதி!

வீதியிலே எங்கும்
சாதி!போகும்
ஊரெங்கும் பெயரிலே
உலவுது சாதி!

வேலை தளத்திலே
சாதி! வெட்டி வீழ்த்துது
உயிர்களை ஆணவ
கொலையென சாதி!

பிறக்கையில் ஒட்டிகொள்ளும் சாதி!
சுடு காட்டிற்கு போனாலும் தொடருதே
சாதி!

என்னடா…மனுநீதி?அதை எட்டி உதை
பிறந்திடும்….
சமூகநீதி!

காரி உமிழடா….
சாதியின் முகத்திலே
கரியினை பூசடா!

மோதி மிதியடா…
சனாதனத்தின் இடுப்பு
எலும்பை உடைடா!

அட…டா…!
போதி எமதென
மார்தட்டு!போக்கிரி
ஆரிய கும்பலை
நீ…விரட்டு!

புரட்சிப் பாதையை
நீ எட்டு!எங்கும்
சமத்துவம் மலர்ந்திட
அறத்தின் கொடி கட்டு!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *