எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 38 (Enakku Cinema Konjam Pidikkum) கவிஞர் வாலி ஒரு எவரெஸ்ட் | வாலியின் எழுத்துலகில் உள்ள முரண்பாடு | www.bookday.in

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 38: வாலி ஒரு எவரெஸ்ட் – ராமச்சந்திர வைத்தியநாத்

வாலி ஒரு எவரெஸ்ட்

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 38

– ராமச்சந்திர வைத்தியநாத்

காலங்காலமாகவே திரைப்படப் பாடல்களின் தராதரம் குறித்த சர்ச்சை இருந்து வருகிறது. கிட்டத் தட்ட தஞ்சை ராமய்யாதாஸ், புரட்சிதாசன் என்று தொடங்கி இன்றும் எழுதி வரும் பலரும் தங்கள் பாடல்களில் இலை மறைவு காய்மறைவு என்று துவங்கி ஆபாசத்தின் உச்சத்தையே எட்டி விடுகிறார்கள். இதன் பொருட்டு இவர்கள் கூறி வரும் காரணம் நியாயமற்றது என்பதோடு அந்தரங்க விவகாரங்களை பொதுவெளியில் கேள்விக்குள்ளாக்குவது இவர்கள் அவ்வப்போது பெருமூச்சு வாங்க கூறி வரும் தமிழுக்கு பெருமை சேர்ப்பதில்லை என்பதை இச்சமூகம் உணர்த்தத் தவறுவதுதான் இப்போக்கு இன்னமும் தீவிரமடைந்து தொடர்ந்து வருவதற்கு காரணமாக இருக்கிறது.

பல்வேறு அறுவறுப்பான திரைப்பாடல்களுக்கு இடையில் இலக்கிய நயமிக்க பாடல்களையும், அதற்கு அப்பாற்பட்டு இலக்கிய முயற்சிகள் பலவற்றையும் இவர்கள் மேற்கொண்டாலும் இப்பாடல்களின் சீரழிவினை மூடி மறைத்து விட முடியாது. இன்னும் சொல்லப் போனால் எதிர்மறையான அவற்றுக்கு நியாயம் கற்பிக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் முயற்சிகளாகவே பிந்தியவை கருதப்பட வேண்டும்.

தமிழ்த் திரைப்பாடலாசிரியர்களின் வரிசை என்பது விரிவானது. நாம் விரிவாக அறிந்த உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமய்யாதாஸ், மருதகாசி, கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி, வைரமுத்து, புலமைப்பித்தன், தாமரை, சினேகன், விஜய் ஆகியோருக்கு அப்பாற்பட்ட பாபநாசம் சிவன், கு.மா.பாலசுப்ரமணியன், கவி கா.மு.ஷெரீப், ஆலங்குடி சோமு, கம்பதாசன், புரட்சிதாசன், குயிலன், ரோஷனாரா பேகம், குருவிக்கரம்பை சண்முகம், பிறைசூடன், காளிதாசன், காமகோடியான், பழனிபாரதி என எண்ணற்றோர் தமிழ்த் திரையுலகில் மகத்தான பங்களிப்பினை கொண்டிக்கின்றனர்.

கண்ணதாசனுக்குப் பின்னர் பெயர் சொல்லும் அளவில் போட்டியில்லாத சூழலில் ஏகதேசமாக இருபது முப்பதாண்டுக் காலம் தமிழ்த் திரைப்பாடல் உலகை தன்கையில் கொண்டிருந்த வாலி பட்டுக்கோட்டை, மருதகாசி போன்று வித்தியாசமான பாணியைக் கொண்டிருந்தாலும் கிட்டத்தட்ட கணிசமான அவரது பாடல்கள் பொதுவெளிக்கு உரியதல்ல. இத்தகைய பாடல்கள் சமூக சீரழிவினை ஏற்படுத்துகிறது என்று கூறி விரிவாக எடுத்துக்காட்டுகையில் மறந்து போன அல்லது கேட்காது இருந்த ஒரு பகுதியினருக்கும் அறிமுகப்படுத்தும் ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் இது போன்ற பாடல்களை கோடி காட்டி இந்த அவதார புருச வேலைகளை எடுத்துரைப்பதில் நமது சமூக கடமையும் உள்ளடங்கியுள்ளது என்பதை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.

அவரது ஆயிரம் பாடல்கள் தொகுப்பைப் புரட்டுகையில் “எல்லாமே வயத்துக்குத் தாண்டா இல்லாத கொடுமைக்குத் தாண்டா” என்ற உணர்வு மேலிட்டாலும், பக்திப்பாடல்கள் உள்ளிட்ட சகலத்திலும் வாலிபக் கவிஞர் சகட்டு மேனிக்கு தனது சங்கதியை போட்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது. பக்த பிரகலாதாவில் “கிளி வந்து கொத்தாத கொய்யா”, அழகே உன்னை ஆராதிக்கிறேனில் “அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க”, நம் நாட்டில் “எளநி எளநி”, தேவாவில் “சின்னப் பொண்ணு நல்லாருக்கா”, சாமுண்டியில் “கதவைச் சாத்து”, சூரியனில் “பதினெட்டு வயசு” போன்று ஏராளமான பாடல்களை குறிப்பிடமுடியும். பவித்ரன்-விஜய் காம்பினேஷனில் இவரது பாடல்கள் இவற்றுக்கெல்லாம் சிகரமாய் அமைந்தவையாகும். தவிர பாண்டவர் பூமியின் மக்களிடம் “எப்படி? எப்படி?” என்று ஆரம்பித்து கேள்வியொன்றை எழுப்பியதன் வாயிலாக வக்கிரம், ஆபாசம் ஆகியவற்றின் எவரெஸ்டையே தொட்டிருக்கிறார்.

பக்தி இலக்கிய காலத்தவை போன்ற வடிவைக் கொண்டிருக்கும் மகாநதியில் ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம், கண்மலரில் ஓதுவார் என் பெயர் ஓதுவார், தவிர சென்னைத் தமிழில் வா வாத்யாரே பாடலும் போன்று ஐம்பது அறுபது பாடல்கள் அவரது வழக்கமான பாடல் வழியினைக் கொண்டிராது இருப்பது ஆச்சரியமளிக்கிறது. இதைத்தான் அவர் தனது சிக்னேச்சர் பாணியாக கொண்டிருந்திருக்க வேண்டும். ரசிகன், சூரியன் போன்ற எண்ணற்ற பாடல்களை நாம் எடுத்துக் காட்டுவதே ஆபாசத்திற்கு நாமும் துணை நிற்பதாகிவிடும்.

நித்தியானந்தாவை தோலுரிப்பதாக சொல்லிக் கொண்டு பார்வையாளர்களின் பாலுணர்வுத் தூண்டலுக்கு தீனிபோட்ட சானல்களுக்கும் இதற்கும் வேறுபாடில்லை. வாலிக்குப் பிந்திய காலத்தில் வரக்கூடிய பெரும்பாலான கவிஞர்களும் இதே தரத்தில் சிறிதும் சமூகப் பொறுப்பின்றி பாட்டெழுதிக் கொண்டுதான் இருக்கின்றனர். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கேட்டுத்தான் தீர வேண்டிய சூழலில் நெளிந்து நொந்து வருகிறோம். தேவா படத்தில் ஒரு பாடலை “அடிரா செருப்பால ராஸ்கோலு” என்று வாலி நிறைவு செய்திருப்பார். அதுதான் தற்போது பளிச்சென நினைவுக்கு வருகிறது.

எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு

2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை  49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது.  ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும்  ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும்,  புத்தக்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும்.  இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை  https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *