சிலரிடம்
துளித்துளியாக ருசிக்கிறாய்
சிலரிடம்
மிடறு மிடறாக அருந்துகிறாய்
சிலரிடம்
குடம் குடமாக உறிஞ்சி
சப்புக் கொட்டுகிறாய்
நடைபாதைகளின் நடுவில்
குளத்தின் படிக்கட்டுகளில்
கிணற்றடியில்
வழிபாட்டுத் தலத்தின் வாசலில்
கறையாய்ப் படிந்து கிடக்கின்றன
உன் பாத சுவடுகள்
கல்விக் கூடத்திலும் நீ
கால் பதித்திருக்கிறாய்
உன் விழிகளுக்கு
பிஞ்சும் தெரியவில்லை
முதிர்வும் தெரியவில்லை
சக்கையாக்கி
வீசி எறிகிறாய் வீதியில்
ஈனஸ்வரத்தில்
இயலாமைகள்
பயத்தின் உச்சத்தில்
நம்பிக்கைகள்
இன்னும் எங்கே
நுழையலாம் என
நாவைத் தொங்க விட்டு
நடுத்தெருவில் அலைகிறாய்
என்று தணியும்
உன் ரத்த தாகம்
இன பேதமே..
ஐ.தர்மசிங்
நாகர்கோவில்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.