பெரணமல்லூர் சேகரன் எழுதிய "என்ன செய்வதாய் உத்தேசம்?" தமிழ் கவிதை | Tamil Poetry தமிழ் கவிதைகள் - www.bookday.in

“என்ன செய்வதாய் உத்தேசம்?” கவிதை – பெரணமல்லூர் சேகரன்

“என்ன செய்வதாய் உத்தேசம்?” கவிதை
***********************************************

அன்றாடம் காண்கிறாய்
காட்சி ஊடகங்களில்
பற்றி எரியும் காசா
தொற்றி அழியும் பாலஸ்தீனர்கள்

அன்றாடம் காண்கிறாய்
சமூக வலைத் தளங்களில்
கொத்துக் கொத்தாக செத்து மடியும்
பெண்களையும் குழந்தைகளையும்

அன்றாடம் காண்கிறாய்
நிவாரணப் பொருட்களைப் பெற
உயிரைப் பிடித்துக் கொண்டு வருவோரின்
உயிரை வாங்குவதை

அன்றாடம் காண்கிறாய்
தட்டேந்தியும் உணவு கிடைக்காமல்
செத்து மடியும் குழந்தைகளை

அன்றாடம் காண்கிறாய்
இன அழிப்பில்
உலகின் முதலிடத்தைப் பிடிக்கும்
இட்லர் முசோலினியைத் தோற்கடித்து
கொக்கரிக்கும் நேதன்யாகுவை

அன்றாடம் காண்கிறாய்
ஐக்கிய நாடுகள் சபையின்
போர்நிறுத்தத் தீர்மானத்தை

அன்றாடம் காண்கிறாய்
தீர்மானத்தை நிராகரிக்கும்
அமெரிக்க ஓநாயின் வீட்டோ அதிகாரத்தை

அன்றாடம் கேட்கிறாய்
தனக்கு நோபல் பரிசு வேண்டுமென்று கூறிவரும்
இஸ்ரேலின் இணையற்ற நண்பன்
பாலஸ்தீனர்களின் எமன்
டிரம்பின் சாடிஸ்ட் பேச்சை

அன்றாடம் கேட்கிறாய்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர்
போர் நிறுத்தம் கோருவதை

அன்றாடம் காண்கிறாய்
அதிகார பீடத்தின்
காவி கள்ள மௌனத்தை

அன்றாடம் காண்பதும் கேட்பதும்
நேரம் கடத்தவா
அநீதிக்கெதிராக எழுவதே
உயிருள்ள ஜீவன்
கண்டுங்காணமல் இருந்தால் ஜடம்

ஏதேனும் ஒரு வகையில் எதிர்ப்பு
மாந்தரின் கட்டாயப் பொறுப்பு

அப்படித்தான்
அமெரிக்க விமானப்படை
வீரர்கள் வீராங்கனைகள் சிலர்
காசா மீது குண்டு போட மறுத்து
கைதாகி முழக்கமிட்டனர்

அப்படித்தான் உலக நாடுகளில்
காசா மீதான ஆக்கிரமிப்புப் போருக்கு
எதிரான போர் நிகழ்ந்த வண்ணமுள்ளது

என்ன செய்வதாய் உத்தேசம்?

குறைந்தபட்சம்
இதுகுறித்துப் பேசலாமே

குறைந்தபட்சம்
இதுகுறித்து எழுதலாமே

குறைந்தபட்சம்
இதுகுறித்துப் பாடலாமே

குறைந்தபட்சம்
இது குறித்துப் போராடலாமே

நாம் ஜடங்களல்ல
நாம் ஜனங்களாவோம்

உலகின் எந்த மூலையில்
இன அழிப்பு நிகழினும்
இனி கிளர்ந்தெழுவோம்.

************************************************

எழுதியவர் : 

✍🏻 பெரணமல்லூர் சேகரன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *