எண்ணங்களை வண்ணமாக்கு - நூல் அறிமுகம் Ennamkalai Vannamaaku Book Review by Taj Deen - Book Day https://bookday.in/

எண்ணங்களை வண்ணமாக்கு – நூல் அறிமுகம்

எண்ணங்களை வண்ணமாக்கு – நூல் அறிமுகம்

 

நூலின் தகவல்கள் : 

நூல் : எண்ணங்களை வண்ணமாக்கு
ஆசிரியர் : தி. தாஜ்தீன்
வெளியீடு: நியூஸ்மென் பப்ளிகேஷன்,மதுரை
விலை:80
பக்கங்கள்:80

ஆசிரியரைப் பற்றி :

இந்நூலின் ஆசிரியர் அவர்கள் தி கிரசண்ட் மேல்நிலை பள்ளியின் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். வாசிப்பை நேசிப்போம் குழுவின்(குடும்பத்தின்) ஒரு உறுப்பினர்(உடன்பிறப்பு) என்பதும் நாம் அறிந்ததே..

இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில், (வாசிப்பை நேசிப்போம் குழுவின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில்), ஆசிரியர் என்னிடம் டீச்சர் நீங்க எதிர்பார்க்கிறபடி இப்புத்தகத்தில் பெரிதாக ஒன்றுமில்லை என்று கூறிய இவரின் தன்னடக்கமே என்னை பெரிதும் வியப்புக்குள்ளாகியது.

உண்மையில் இக்குழு நல்ல மனிதர்களின் நட்புக்களையும் பெற்று தந்திருக்கிறது என்பதை உணர்த்திக் கொண்டு பயணப்படுகிறது …

நூலை பற்றி :

அமைதியும் ஒரு அழகு!
பணிவும் ஒரு பரிசு!

சோர்ந்து விடாதே ..தன்னம்பிக்கை கொண்டு
திருப்பி அடி சோதனைகள் சோர்வாகும் வரை ..!

தன்னம்பிக்கை மலைகளை உடைக்கும்
கல்வி எதிர்காலத்தை அமைக்கும் ..!

சமூகம், சாதியசாடல்கள் இவற்றின் மீது சண்டைப் போட்டுக் கொண்டு, வரலாற்று நாவல்களுக்கு சாமரம் வீசிக்கொண்டுடிருந்தஎன்னை ..
சமீப காலமாக கவிதைகள் கட்டிக் கொண்டன..!

ஏனென்றால் ஒரு மொழியின் இனிமையையறிய
கவிதையை விட சிறந்த வழியேது..!

கவிதைகள் என்றாலே சொற்களை மோத விட்டு,
எதுகை மோனைகளை எட்டிப் பிடித்து,
இலக்கண முறைப்படி இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற லாஜிக் எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி எளிமையான சொற்களால் மேஜிக் செய்து இருக்கிறார் ஆசிரியர்.

இனி கவிதையில்..

உன் வாழ்க்கைக்கு உயிர் வேண்டுமென்றால்
தன்னம்பிக்கைக்கு வழிவிடு
முடங்கி கிடந்தாலும்
உன்னை முட்டி தூக்கும்..!

தன்னம்பிக்கையில் தளர்ந்து நிற்கும் போது இந்த வரிகள்.. அப்படியொரு ஆசுவாசத்தை தந்து விட்டுதான் போகிறது..

நீங்கள் ஆலமரத்தின் விழுதுகள்
வரலாற்றில் எழுதுகோல்கள்
காவியத்தின் கதாநாயகர்கள்
பூமியில் வாழும் புதையல்கள்
இன்று நீ மாணவன்
நாளை தலைவன் ..

என்று தன்னிலை மறந்து திரியும் மாணவர்களை தனித்தன்மையை உணர உற்சாகப்படுத்துகிறார் ஆசிரியர் ..!

இளைஞனே!
நீ செய்யப் போகும்
நற்காரியத்தில் தயக்கம் கொள்ளாதே!
நீ தயக்கம் கொண்டால்
சிறு தூசி கூட உன்னை சிறை பிடிக்கும்..!

தயக்கத்தை தள்ளி வைத்துவிட்டு முயற்சியோடு பயிற்சியை மேற்கொள்ளும் போது
உலகம் உன் வசப்படும் என்பதை உணர்த்தி சொல்கிறார் ஆசிரியர் ..!

மாணவர்களுக்கு இரண்டு முறைகளில் அறிவுரைகளை சொல்லலாம்.
தலையைத் தட்டி ஒழுங்கா படி என்று சொல்வது ஒரு வகை.
தோழமையோடு தோளைத் தட்டி கொடுத்து
இதை இவ்வாறு இப்படி படின்னு பாசத்தோடும் நேசத்தோடும் சொல்வது மற்றொரு வகை.
இதில் ஆசிரியர் இரண்டாவது வகை ..!

இப்படி ஒரு கவிதை அதை இப்படி எழுதலாம் என்கிற உங்களின் எண்ணத்திற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்..!

இதற்கு பக்கபலமாக இருப்பது இவரின் எழுத்துக்கள்தான்..!
ஆறாம் வகுப்பு மாணவிகூட படித்து பொருள் புரிந்து கொள்ளும் அளவிற்கு அவ்வளவு எளிமையான சொற்கள்..!

இதில் பெரும்பாலான கவிதைகள் மாணவர்களுக்கு அறிவுரைகளையும், உற்சாகத்தையும் தரும் வகையில் இருப்பதால், இந்நூலை எழுதியவர் ஒரு பள்ளிஆசிரியர் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு போகிறது இவருடைய கவிதைகள் ..!

பல கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்படக்கூடிய படங்களை விட,
சின்ன பட்ஜெட்ல எடுக்கப்பட்ட படங்கள் சத்தம் இல்லாமல் சாதிச்சிட்டு போயிரும் இந்த புத்தகமும் அந்த வகையை சேர்ந்ததுதான் ..!

இந்த புத்தகத்தைப் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்
Simple and Sweet

ஆசிரியர் இந்த புத்தகத்தில் என்ன சொல்ல வருகிறார் தெரியுமா……
Don’t worry… be happy…
(இதை மட்டும் விவேக் மைண்ட் வாய்ஸில் வாசிக்கவும்)

நாம் பங்கெடுத்து பயணப்பட்ட இக்குழுவில் முதலில் புத்தகத்தை எழுதி வெளியிட்ட பெருமை உங்களையே சாரும்…
இதைவிட வேறென்ன விருதுகள் வேண்டும் அண்ணா ..
உங்களது பயணம் தொடரட்டும் …
வாழ்த்துக்கள் அண்ணா ..

எண்ணங்களை வண்ணமாக்கு
நிச்சயமாக கலர்ஃபுல்லான வானவில்தான்…

 

நூல் அறிமுகம் எழுதியவர்:

ரெ.வனிதா
கணிதப் பட்டதாரி ஆசிரியை
அ.ம.மே.நி.பள்ளி
பட்டுக்கோட்டை



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *