Ennamum Neelamum | எண்ணமும் நீலமும்

 

பரந்து விரிந்த வானமும்,

நிரம்பிய அதன் நீலமும்,

பேசும் சமத்துவமே

தம்பி செ.கலையரசனின்

எண்ணமும் நீலமும்.

கடவுளின் பெயரால் விதைக்கப்பட்ட

சாதிய வன்மங்களை,

சமூகத்திற்கு அது தரும் தீக்காயங்களை, எரிந்து கொண்டிருப்பவருள் ஒருவராக

கவிஞர் தன் கவிதைகளில் பதிவு செய்கிறார்.

ஊரெங்கும் தொடுக்கும் ஒரு கேள்வி

உள்ளுள் உளி அறைகிறது. ஆள் விடாது தொடர்ந்து துரத்துகிறது என்று தனக்குள் வெம்முகிறார்.

“நான் எதிர்கொண்ட

மிகப் பெரிய கெட்ட வார்த்தை

தம்பி நீங்க என்ன ஆளுங்க..?

இந்த கேள்வியிலிருந்து தப்பியவர்கள் யாருமில்லர். பதில் வாங்கிய பாதி பேர் மனிதனாகவே இருப்பதில்லை ,மீதி பேர் மனிதத்தோடு நடப்பதில்லை.

சாதியின் பெயரால் துருப்பிடித்திற்கும் சமூகத்தை கவிஞர் நன்கு உள்வாங்கி இருக்கிறார் .மானுட விடுதலைக்கு மதமென்பது பெரும் வேகத்தடை என்பதை உணர்ந்திருக்கிறார்.

“கையேந்தி வருபவர்களிடம்

மனிதனாக இருங்கள்.

கல்லாக நின்று

கடவுள் ஆகி விடாதீர்கள்.

கடவுளின் தன்மை யாதென்பது இக்கவிதையில் தெரிகிறது.

நமக்கு கொடுக்கப்பட்டப் மனிதப் பிறவியை வாழ எச்சரிக்கை விடுக்கிறது.

இடதரசியல் பேசும் எழுத்துக்கள்

விளிம்பு நிலை மக்களைப் பற்றி சிந்திக்கிறது .சிறுபான்மையினருக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறது .சமூகத்தில் சமத்துவம் விரும்புகிறது .அறம் சார்ந்து சிந்திக்க மற்றும் வாழ முயல்கிறது என்பதை”எண்ணமும் நீலமும்’ மீண்டும் நிரூபிக்கிறது.

வாசிக்கும் நம்மையும் எவ்வித வேறுபாடு இன்றி வாழ எத்தனிக்கிறது.

மூன்றே வரியில் சமூக கட்டமைப்பு

சரிந்து விழுகிறது.

தலைமுறை தலைமுறையாய்

மானுடம் சுரக்கும் அழுக்கு பழக்கம்

மண் மடிகிறது.

“ஏழைச்சிறுமி

எச்சில் விளங்குகிறாள்

தேனும் பாலும் சிலையின் மேல்.

ஆணாதிக்கத்தை கேள்வி எழுப்பும் ,

பெண் அடக்கு முறையை எதிர்த்து நிற்கும்

ஆகச் சிறந்த கவிதை “தீட்டு.

“ஒன்பது மாத தீட்டும்

ஒரு சேர உருவானவன் சொல்கிறான் பெண்கள் தீட்டு என்று.

தீண்டாமை குறித்த கவிதை

இன்றளவும் நிகழ்ந்து வரும் பெரும்பாலானவரின் நட்பு அனுபவம்.

யாவரையும் உலுக்கிய ஒடிசா விபத்து

நம் கண் முன் வந்து போகிறது

சில நிமிடங்கள். வார்த்தைகளற்று கிடக்கையில் ஆறுதல் சொல்கிறது மௌனங்கள்.

பட்டாசை நம்பியிருக்கும்

90% சதவீத மக்களின் வாழ்வதாரம்

பிடுங்கும் எண்ணம் விட்டுவிடு.

கொத்து கொத்தாக குடும்பம் சிதைக்கும் மதுவை ஒழித்து விடு.

விடியல் அரசு என்று

விளம்பரம் செய்பவர்களுக்கு

வேண்டுகோள் விடுக்கிறது.

கடந்து செல்லக்கூடிய,

பக்கம் புரட்டக்கூடிய,

காதல் கவிதைகளும் தொகுப்பில் இடம்பெறத்தான் செய்கிறது .

இருந்தும் இந்த இளம் கவிஞனின்

எழுத்தும், நல்சிந்தனையும்,

வாசிக்கும் நமக்கு பெரும் நம்பிக்கையைத் தருகிறது. நாளைய தலைமுறையை நல்வழிக்கு கொண்டு வர பேருதவி புரிகிறது.

தம்பிக்கு என் அன்பின் வேண்டுகோள் விரைவில் வாசிப்பை தொடங்குங்கள்.

தொடர்ந்து சமத்துவப் பாதையில் பயணியுங்கள்.

சமூகநீதி கண்டு

சமத்துவம் காண்போம்.

 

நூலின் தகவல்கள்:

 

நூல் : எண்ணமும் நீலமும்

ஆசிரியர் : கவிஞர் செ.கலையரசன்

வெளியீடு : மலர்கண்ணன்

விலை : ரூ.80

 

நூலறிமுகம் எழுதியவர்:

க. மணிமாறன்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *